முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெளிவு வேண்டுகிறது

0 371

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்தம் சம்­பந்­த­மான முன்­மொ­ழிவை வழங்­கி­ய­தற்­க­மைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளு­டைய கருத்­து­க­ளையும் குறித்த சட்­டத்­தி­ருத்­தத்தின் முன்­மொ­ழிவில் வர­வேண்­டிய திருத்­தங்­க­ளையும் முன்­வைத்­தார்கள். அதில் 18 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்­டி­ருக்­கி­றார்கள்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் எவ்­வாறு ஒரு முன்­மொ­ழிவு வழங்­கப்­பட்­டதோ அதே­போன்று முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் வழங்­கப்­பட்ட முன்­மொ­ழிவின் அடிப்­ப­டையில் ஒரு­மித்த ஒரு கருத்­துக்கு வர­வேண்டும் என்­ப­தற்­காக, மார்க்க விட­யங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்குத் தேவை­யான வழி­காட்­டல்­க­ளையும் மார்க்கத் தீர்ப்­பு­க­ளையும் காலா­கா­ல­மாக வழங்­கி­வரும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­விடம் இது­தொ­டர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்றை ஏற்­பாடு செய்­யு­மாறு முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் வேண்­டிக்­கொண்­ட­தற்கு இணங்க கடந்த 11 ஆம் திகதி முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது.

அக்­க­லந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வுகள் முன்­வைக்­கப்­பட்­ட­தோடு மேல­தி­க­மான சில முன்­மொ­ழி­வு­களும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களால் முன்­வைக்­கப்­பட்­டன. இத­ன­டிப்­ப­டையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களால் முன்­வைக்­கப்­பட்ட அனைத்து முன்­மொ­ழி­வு­க­ளையும் உள்­வாங்கி ஓர் ஆவணம் தயா­ரிக்­கப்­பட்டு அதில் கையொப்­ப­மி­டு­வ­தற்­காக அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இதற்கு முன்பே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்ட திருத்தம் குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தன்­னு­டைய நிலைப்­பாட்டை நீதி­ய­மைச்­சுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றது. குறித்த ஆவ­ண­மா­னது முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் அனைத்தும் ஒன்­று­பட்டு வழங்­கி­ய­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
தற்­போ­துள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மார்க்­கத்­தி­லுள்ள சில சட்ட விட­யங்கள் உள்­வாங்­கப்­ப­டாத கார­ணத்­தினால் குறிப்­பாக பெண்­க­ளுக்கு மார்க்­கத்தில் வழங்­கப்­பட்­டி­ருக்கக் கூடிய உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை காணப்­ப­டு­வ­தாக சில­ரு­டைய அவ­தானம் அமைந்­தி­ருக்­கி­றது.

காலத்­திற்­கேற்ற மாற்­றங்கள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் குறிப்­பாக பெண்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் தற்­போ­தைய சட்­டத்தில் இல்­லாத குல்உ, மதாஃ போன்ற பெண்­களின் உரி­மைகள் சட்­ட­மாக்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா உறு­தி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கி­றது.

இத­ன­டிப்­ப­டையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்த முன்­மொ­ழிவில் காலத்­துக்குத் தேவை­யான, மார்க்­கத்தின் அடிப்­ப­டை­க­ளுக்கும் இலக்­கு­க­ளுக்கும் மற்றும் காலா­கா­ல­மாக பாது­காக்­கப்­பட்டு வரு­கின்ற இஸ்­லா­மிய கலா­சா­ரத்­துக்கும் முரண்­ப­டாத வகையில் நெகிழும் தன்­மை­களை உள்­ள­டக்­கிய அழ­கா­ன­தொரு முன்­மொ­ழிவை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வழங்­கி­யி­ருக்­கி­றது. நிர்­வாக ரீதி­யாக ஏற்­பட வேண்­டிய மாற்­றங்கள், மார்க்­கத்தின் அடிப்­ப­டை­க­ளோடு சம்­பந்­தப்­பட்ட மாற்­றங்கள் என்று அவற்றை பிர­தான இரண்டு வகை­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதில், 01) கணவன் சுய­மாக தலாக் கொடுத்தால் அவ­சியம் மதாஉ கொடுக்­கப்­படல் வேண்டும். ஒரு பெண்ணை அநி­யா­ய­மாக நிர்ப்­பந்­தித்து தலாக் கொடுக்­காமல் பஸ்க் இற்கு ஒரு கணவன் தள்ளும் பட்­சத்தில் அப்­பெண்­ணுக்கு மதாஉ வை வழங்கும் உரிமை முஸ்லிம் விவாக, விவா­ரத்து சட்­டத்­துக்­குள்ளால் உள்­வாங்­கப்­படல் வேண்டும்.

02) குல்உ (ஒரு பெண் கண­வ­ரி­டத்தில் மஹ்ர் மற்றும் நஷ்­ட­ஈ­டு­களை திரும்பக் கொடுத்து விவா­க­ரத்தை பெற்றுக் கொள்­வ­தாகும்.) இது தற்­போ­தைய சட்­டத்தில் இல்­லாத ஒன்று. எனவே இது சரி­யாக இச்­சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும்.

03) தலாக், குல்உ, பஸ்க் ஆகிய விவா­க­ரத்து முறைகள் ஆண், பெண் இரு­சா­ரா­ரு­டைய உரி­மையும் கண்­ணி­யமும் மானமும் பாது­காக்­கக்­கூ­டிய வகையில் அமை­வ­தோடு இஸ்­லாத்தில் பிள்­ளை­களின் பரா­ம­ரிப்பு தொடர்­பான தாப­ரிப்புச் செலவு தந்­தைக்கு இருப்­ப­தனால் அது சார்ந்த விட­யங்­களும் உரி­மை­களும் தெளி­வாக சட்­ட­மாக்­கப்­படல் வேண்டும்.

04) திரு­மணப் பதிவில் வலியின் கையொப்­பத்­துடன் சேர்த்து மண­மகள் சம்­பந்­தமும் கையொப்­பமும் கட்­டா­ய­மாக இருத்தல் வேண்டும்.

05) ஓர் ஆண் காதி­யா­கவும் ஆணுக்கு உத­வி­யாக இரண்டு பெண்கள் அதி­கா­ர­முள்ள ஜுரி­க­ளா­கவும் நிய­மிக்­கப்­படல் வேண்டும்.
போன்ற இன்னும் பல காலத்­துக்கு அவ­சி­ய­மான, மார்க்­கத்­துக்கு முரண்­ப­டாத முன்­மொ­ழி­வு­களை அது உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­றது.

இந்த 20 முன்­மொ­ழி­வு­களில் முஸ்லிம் கவுன்ஸில் எதனை நிரா­க­ரிக்­கி­றது என்­பதை முஸ்லிம் கவுன்­ஸி­லி­டத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டிக்­கொள்­கி­றது.

ஏனெனில் முஸ்லிம் கவுன்­ஸி­லா­னது பல அமைப்­பு­களை ஒன்­று­சேர்த்த அமைப்­பாக தன்னை காட்­டிக்­கொள்ள விரும்­பி­னாலும் அவர்­களால் பட்­டி­ய­லி­டப்­ப­டு­கின்ற 20 க்கும் மேற்­பட்ட அமைப்­புகள் இந்த முன்­மொ­ழி­வு­க­ளுக்கு சார்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கு கடி­தங்­களை கைய­ளித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மேலும் முஸ்லிம் கவுன்­ஸிலால் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற அத்­தனை அமைப்­பு­க­ளி­னதும் கருத்­து­களை முஸ்லிம் கவுன்ஸில் உள்­வாங்­கி­யதா, எப்­போது அந்த சந்­திப்பு நடை­பெற்­றது, அதில் இவ்­வி­டயம் குறித்து எடுக்­கப்­பட்ட முடி­வுகள் யாவை, முஸ்லிம் கவுன்­ஸிலின் நிரா­க­ரிப்பை அந்த அமைப்­புகள் ஏற்­றுக்­கொண்­டதா என்­ப­தையும் சமூ­கத்­திற்கு தெளி­வு­ப­டுத்­து­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்லிம் கவுன்­ஸி­லி­டத்தில் வேண்­டிக்­கொள்­கி­றது.
அது­மாத்­தி­ர­மின்றி முஸ்லிம் கவுன்ஸில் தனக்குக் கீழ் இணைத்­தி­ருக்­கின்ற பல அமைப்­புகள், அந்த அமைப்­பு­களின் அனு­ம­தி­யின்றி முஸ்லிம் கவுன்­ஸிலால் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்றும் அதற்கு எந்­த­வித ஆலோ­ச­னை­களும் இடம்­பெ­ற­வில்லை என்றும் பல அமைப்­புகள் தமது அதி­ருப்­தியை பகி­ரங்­க­மா­கவும் தனிப்­பட்ட முறை­யிலும் அறி­வித்­தி­ருக்­கின்­றன.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களால் முன்­வைக்­கப்­பட்ட ஏகோபித்த முன்மொழிவுகளை உள்வாங்கியே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் முஸ்லிம் கவுன்ஸிலுக்கு ஏதாவது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் எழுத்து மூலம் அறியத்தருவதே பொருத்தமானதாகும்.

ஏனெனில் நீண்­ட­கா­ல­மாக முடி­வுக்­கு­வ­ராத, ஒட்­டு­மொத்த சமூகம் சார்ந்த ஒரு விட­யத்தில் தமது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­பு­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­த­னூ­டாக சமூ­கத்தில் குழப்­பங்­களும் அனா­வ­சிய வாதப்­பி­ரதி வாதங்­க­ளுமே தோன்றும் என்­பதை கவ­னத்தில் கொள்­ளு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்தல் உலமா வேண்­டிக்­கொள்­கி­றது.

அல்­லா­ஹு­த­ஆலா எம்­ம­னை­வ­ரையும் அவ­னது மார்க்­கத்­தையும் மார்க்க விழு­மி­யங்­க­ளையும் பாதுகாக்கக்கூடிய நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.