ஆளுந்தரப்புடன் இணைந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சு.க. செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச

0 728

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு அர­சாங்­கத்­திற்கு ஆர­த­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜித் விஜ­ய­முனி சொய்சா, இந்­திக பண்­டார மற்றும் லக் ஷ்மன் சென­வி­ரத்ன ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். எதிர்­வரும் தினங்­களில் இடம்­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் இது தொடர்­பான தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­படும் என கட்­சியின் பொதுச் செய­ளாலர் ரோஹன லக்ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார்.

விஜித் விஜ­ய­முனி சொய்சா, இந்­திக பண்­டார மற்றும் லக் ஷ்மன் சென­வி­ரத்ன ஆகிய சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் வின­விய போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரி­விக்­கையில்,

அத்­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இது தொடர்பில் கவனம் செலுத்­தி­யுள்ளார். நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  இடம்­பெற்ற ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்­டத்தின் போது சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் சிந்­தித்து மிகவும் வினைத்­தி­ற­னுடன் செயற்­பட வேண்டும் என ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். அத்­தோடு சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து ஆளுந்­த­ரப்­பிற்கு செல்­ப­வர்­க­ளுக்கு எந்த சந்­தர்ப்­பத்­திலும் அமைச்சு பத­வி­யி­னையும் வழங்க மாட்டேன் எனவும் உறு­தி­யாக தெரி­வித்தார்.

மேலும் விஜ­ய­முனி சொய்சா பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­விக்கும் போது தான் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் சுதந்­திர கட்­சிக்­காக பாடு­பட்­டி­ருப்­ப­தா­கவும், கட்­சியை வளர்ப்­ப­தற்­காக தொடர்ந்தும் செயற்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்தார். அவ்­வாறு கட்சி மீது உண்­மை­யான விசு­வாசம் காணப்­ப­டு­ப­வ­ராக இருந்தால் அவர் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­க­மாட்டார்.

எவ்­வா­றி­ருப்­பினும் ஜனா­தி­பதி என்­பதைத் தாண்டி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலைவர் என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்­திற்கு முர­ணாக அந்த மூவரும் செயற்­பட்­டுள்­ளமை ஏற்­றுக்­கொள்­ளக்­ கூ­டி­ய­தல்ல. எனவே தான் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.