சஹ்ரானின் மனைவிக்கு சிங்களம் தெரியுமா?

குறுக்கு கேள்வியால் தடுமாறிய பெண் பொலிஸ் அதிகாரி; ஒப்புதல் வாக்கு மூலம் பதிவு செய்த நீதிவானும் விரைவில் சாட்சிக் கூண்டுக்கு

0 541

(எம்.எப்.அய்னா)
சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதி­யாவை கைது செய்யும் போது, பயங்­க­ர­வா­தத்­துக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­ய­மைக்­காக கைது செய்­வ­தாக சிங்­கள மொழியில் குற்­றச்­சாட்டு அவ­ருக்கு கூறப்­பட்­ட­தாக பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

அதன்­படி, சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதி­யா­வுக்கு சிங்­கள மொழி தெரி­யுமா என்ற குறுக்கு விசா­ர­ணை­க­ளுக்கு அவர் உள்­ளாக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதில் குறித்த குற்­றச்­சாட்டின் ஒரு சொல்லைக் கூட தமிழில் கூற அந்த பெண் பொலிஸ் அதி­காரி தவ­றி­யுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்­து­அ­றிந்­தி­ருந்தும் ( சாரா ஜெஸ்மின் தெரி­வித்தன் ஊடாக ) , அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி. அதி­கா­ரிகள், ஒரு இரா­ணுவ வீரர் உள்­ள­டங்­க­லாக 30 சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ள­துடன், சான்­றா­வ­ண­மாக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்குமூலம் மட்டும் நிர­லி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், இவ்­வ­ழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் நிலையில், கடந்த 21 ஆம் திக­தியும் அவ்­வி­சா­ர­ணைகள் நடந்­தன. கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்­னி­லையில் விசா­ர­ணைகள் நடக்­கின்­றன. வழக்குத் தொடு­ந­ருக்­காக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலை­மையில், அரச சட்­ட­வா­தி­க­ளான சத்­துரி விஜே­சூ­ரிய மற்றும் லாபிர் ஆகியோர் ஆஜ­ராகி சாட்­சி­களை நெறிப்­ப‌­டுத்­திய நிலையில், பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக மன்றில் சிரேஷ்ட சட்­டத்­தணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ராகி குறுக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தார்.

கடந்த 21 ஆம் திகதி 14 சாட்­சி­யா­ளர்கள் மன்­றுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த போதும் அதில் 6 பேரின் சாட்­சி­யமே நெறிப்­ப‌­டுத்­தப்­பட்­டது. இதன்­போது பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­தலில் சாட்­சி­ய­ம­ளித்த பெண் பொலிஸ் அதி­காரி ஒருவர், ஹாதி­யாவை கைது செய்யும் போது, அவரை கைது செய்­வ­தற்­கான காரணம் அவ­ருக்கு தெரி­விக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்தார். அத்­துடன் ஹாதி­யா­வுக்கு சிங்­கள மொழி தெரியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்த நிலையில் இந்த சாட்­சி­யா­ளரை மட்டும் குறிப்­பாக ஹாதி­யாவின் சட்­டத்­த­ரணி கடந்த 21 ஆம் திகதி குறுக்கு விசா­ரணை செய்தார்.
இதன்­போது ஹாதி­யா­வுக்கு சிங்­களம் தெரியும் என சாட்­சி­யா­ள­ருக்கு எப்­படி தெரியும் என அவர் குறுக்கு விசா­ரணை செய்தார். எனினும் அதற்கு சரி­யான பதில் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஹாதி­யாவை கைது செய்யும் போது, சிங்­கள மொழியில் ‘ திரஸ்­த­வா­த­யட ஆதார அனு­பல தீம ‘ எனும் குற்­ற‌ச்­சாட்­டுக்கு ( பயங்­கரவா­தத்­துக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை) அவரை கைது செய்­வ­தாக கூறப்­பட்­டது என அந்த பெண் பொலிஸ் அதி­காரி கூறினார்.

இந்த நிலையில், குற்­றச்­சாட்டை சொல்லிக் கொடுத்த பெண் பொலிஸ் அதி­கா­ரிக்கு தமிழ் தெரி­யுமா என மற்­றொரு குறுக்கு கேள்வி தொடுக்­கப்­பட்­டது. அதற்கு அந்த அதி­காரி தெரி­யாது என குறிப்­பிட்டார்.

‘திரஸ்­த­வா­தய ‘ எனும் சிங்­கள சொல்­லுக்கு தமிழில் என்ன கூறு­வது என அந்த அதி­கா­ரி­யிடம் வின­வப்­பட்­டது. அதற்கும் அவர் தெரி­யாது என குறிப்­பிட்டார்.
இந் நிலையில், கடந்த தவ­ணையில் முன்னாள் கல்­முனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் சாட்­சி­யமும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்­தினால் நெறிப்­ப­டுத்­தப்­பட்­டது. அவ­ரிடம் குறுக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அது அடுத்த தவ­ணையில் தொட­ர­வுள்­ளது.
இத­னி­டையே, ஹாதி­யா­வுக்கு எதி­ரான ஆதா­ர­மாக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள அவர் கோட்டை நீதி­வா­னுக்கு வழங்­கிய ஒப்­புதல் வாக்கு மூலத்தின் உண்மை விளம்பல் விசா­ர­ணையும் விரைவில் ஆரம்­பிக்­கப்­படும் நிலை­மையை எட்­டி­யுள்­ளது. அவ்­வாறு அவ்­வி­சா­ர­ணைகள் ஆரம்பிக்கப்படும் இடத்து அவ்வாக்குமூலத்தை பதிவு செய்த கோட்டை நீதிமன்றின் முன்னாள் நீதிவானும் தற்போதைய மேல் நீதிமன்ற நீதிபதியுமான ரங்க திஸாநாயக்கவின் சாட்சியம் பெறப்படும் சாத்தியம் தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், இந்த விவகார வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 23, 24 ஆம் திகதிகளில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.