முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் : உலமா சபையின் அறிக்கையை நிராகரிக்கிறது முஸ்லிம் கவுன்சில்

சிவில் அமைப்புகள் எடுத்த தீர்மானத்துடன் முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டு

0 314

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ள­ப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தயா­ரித்து நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­வுக்கு கைய­ளிக்­க­வுள்ள அறிக்­கைக்கு அனு­ம­தி­ய­ளிக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மறுத்­துள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் உலமா சபையின் அறிக்­கையை முற்­றிலும் நிரா­க­ரிப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட அறிக்கை ஏற்­க­னவே ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவின் தலை­மையில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை உட்­பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் ஒன்­று­கூடி மேற்­கொண்ட தீர்­மா­னத்­துக்கு முரண்­பட்­ட­தாக அமைந்­துள்­ள­தா­கவும் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த அறிக்கை ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்கும் நீதி­ய­மைச்­ச­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் செய­லாளர் எ.டி.எம். ரிஸ்வி கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

“ நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளிப்­ப­தற்­காக தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையின் பிர­தி­யொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளீர்கள். அதில் கடந்த 11 ஆம் திகதி உலமா சபை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் எனவும் குறிப்­பிட்­டுள்­ளீர்கள். கூட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்கள் வருகை ஆவ­ணத்தில் கையொப்­ப­மிட்­டமை தீர்­மா­னங்­க­ளுக்கு இணங்­கி­ய­மை­யாக கருத முடி­யாது.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தங்களது சிபாரிசுகளுக்கு கையொப்பமிட்டதாக உள்வாங்காதீர்கள்.

தங்களது முரண்பட்ட நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.