பலஸ்தீன முகாம் தாக்குதலை அரசாங்கம் கண்டிக்கவில்லை

சபையில் ஹக்கீம் குற்றச்சாட்டு

0 135

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

பலஸ்­தீனில் அக­தி­முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் தொடர்ந்து இரண்டு தினங்கள் மேற்­கொண்ட தாக்­கு­தலில் அந்த முகாம் முற்­றாக சேத­ம­டைந்து 12பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இந்த தாக்­குதல் இடம்­பெற்று இரண்டு தினங்­களில் இது தொடர்­பாக இலங்கை அர­சாங்கம் தனது கண்­ட­னத்தை வெளிப்­ப­டுத்­த­வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்­ரி­யிடம் இந்த சபையில் கேட்­டுக்­கொண்­டி­ருந்தேன். குறைந்த பட்சம் கவ­லை­யை­யா­வது தெரி­விக்­கு­மாறு கேட்­டி­ருந்தேன். இது தொடர்­பாக கண்­ட­னத்தை வெளி­யி­டு­வ­தாக அவர் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார். ஆனால் இது­வரை அது தொடர்பில் எந்த பதிலும் கிடைக்­க­வில்லை. அப்­ப­டி­யானால் எங்­க­ளது மனம் எங்கே இருக்­கி­றது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், நாங்கள் பலஸ்­தீ­னி­யர்­களின் நண்­பர்கள் என்­கிறோம். இலங்கை, பலஸ்தீன் நட்­பு­றவுச்­சங்­கத்தின் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கிறோம். ஆனால் ஏன் இந்த தாக்­குதல் தொடர்பில் மெள­ன­மாக இருக்­கி­றது என்­ப­துதான் புரி­யாமல் இருக்­கி­றது.

அதே­போன்று பலஸ்­தீனில் இடம்­பெறும் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் நட­வ­டிக்கை எடுக்­கும்­போது வீட்டோ அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அதனை நிரா­க­ரிக்­கின்­றனர். வல்­ல­ரசு நாடு­களின் நிலைப்­பாடு என்ன என கேட்கிறோம். அதனால் தயவு செய்து இந்த கொடுமைகளை வல்லரசு நாடுகள் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.