வன்செயல்களை முன்னெடுக்க தொடர்ந்து இடமளிக்க முடியாது

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர்மாக்கார்

0 187

எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்

பலஸ்­தீ­னத்தில் முன்­னெ­டுக்­கப்­படும் கொடூ­ர­மான வன்­செ­யல்­களை தொடர்ந்து முன்­னெ­டுப்­ப­தற்கு நாம் இட­ம­ளிக்க முடி­யாது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரி­வித்தார்.

பலஸ்­தீனம் தொடர்­பாக பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பித்து உரை­யாற்­றும்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மனித வர­லாற்றில் மிகவும் துன்­ப­க­ர­மான சூழ்­நி­லையை நாம் இன்று மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் காண்­கிறோம். இந்த கொடூ­ர­மான வன்­செ­யல்­களை அதே நிலையில் தொடர்ந்தும் முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிப்­பது எந்­த­வொரு மனி­த­ரதும் மன­சாட்­சிக்கு ஏற்­பு­டை­ய­தொரு விட­ய­மல்ல.

இந்த நிலை­மையை முடி­வுக்குக் கொண்­டு­வர வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்து இருப்­ப­தாக நான் கரு­த­வில்லை. இந்தப் பிரச்­சி­னைக்கு இறுதித் தீர்­வு­காணும் வகையில் சுயா­தீ­ன­மான இரு தேசங்­களை உரு­வாக்க ஐக்­கிய நாடுகள் அமைப்பு எடுத்த தீர்­மா­ன­த்­துக்கு வர­லாறு முழு­வதும் இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் அனைத்து கட்­சி­க­ளதும் ஏக­ம­ன­தான பூரண ஒத்­தாசை கிடைக்­கப்­பெற்­றது.

அதி­கா­ரத்தின் மூலம் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பலஸ்­தீன நிலப்­ப­ரப்பில், இன்று ஜெனின் பகு­தியில் நடப்­பது போல, ஆரம்ப குடி­யி­ருப்­பா­ளர்­களின் வீடு­க­ளுக்கும் அக­திகள் முகாம்­க­ளுக்கும் நாளாந்தம் இரா­ணுவம் ஊடு­ருவி எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­களும் இன்றி சிறு பிள்­ளை­க­ளையும் இளை­ஞர்­க­ளையும், பெண்­க­ளையும் அச்­சு­றுத்தி அவர்­களை கைது­செய்­வதன் மூலம் ஏழு தசாப்த கால­மாக முன்­னெ­டுக்­கப்­படும் சித்­தி­ர­வ­தைகள் மற்றும் உல­கத்தில் பல­மிக்க இரா­ணுவ சக்­திக்கு எதி­ராக தாய்­நாட்டின் சுதந்­திர போராட்­டத்தில் அவர்கள் இது­வரை அபி­லா­சை­க­ளுடன் தாங்­கிக்­கொண்­டி­ருக்கும் அபூர்­வத்தை நாம் பார்த்துக் கொண்­டுள்ளோம்.

ஐக்­கிய நாடுகள் அமைப்­புக்கும், மனித உரி­மைகள் ஆணைக்­ கு­ழு­வுக்கும், சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கும் வெறு­மனே அறிக்­கை­களை சமர்ப்­பித்தல் மற்றும் அறிக்கை வெளி­யி­ட­லுக்கு அப்பால் பூகோள நீதி, மனித உரி­மைகள், சர்­வ­தேச சட்டம் தொடர்­பான எவ்­வித சட்­ட­ரீ­தி­யான அல்­லது நீதி­நெ­றி­யான பொறுப்­புக்­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாது இடை­யூ­றாக நடந்­து­கொள்­வதை தொடர்ந்தும் நாம் காண்­கிறோம்.

இஸ்­ரேலும் பலஸ்­தீனும் இரு சுதந்­திர தேசங்கள் என்­பதை யதார்த்­த­மாக்கி அந்த தேசங்­களில் வாழும் யூதர்கள், கிறிஸ்­த­வர்கள் மற்றும் இஸ்­லா­மி­யர்கள் ஆகிய அனை­வரும் சமத்­து­வ­மா­கவும் நியா­ய­மா­கவும் ஒரு­வரை ஒருவர் புரிந்­து­கொண்டு, ஒரு­வரை ஒருவர் மதித்து, வேறு­பாடு காட்­டாமல், வாழும் நாளைய தினம் உரு­வாக வேண்டும். இந்த நீதி­யையும் நியா­யத்­தையும் இந்த மசோதா ஊடாக இலங்கைப் பாரா­ளு­ம­ன்றம் இன்று உணர்த்தி நிற்­கின்­றது.

பலஸ்தீன் மண்ணில் வன்­மு­றையை விதைத்தல், அப­க­ரிக்­கப்­பட்ட நிலப் பரப்பில் தொடரும் பலவந்தமான விஸ்தரிப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த இடத்துக்குச் சென்று தேடிப்பார்த்து விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள வேண்டுதலை இஸ்ரேலின் பொறுப்புதாரிகள் கணக்கிலும் எடுக்காமல் இருப்பதை உலகம் அவதானித்துக் கொண்டுள்ளது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.