சிங்களம், தமிழ், ஆங்கிலமும் பாடசாலைகளில் 1 ஆம் தரம் முதல் கட்டாயமாக்கப்பட வேண்டும்

வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பணிப்பாளர் அமீர் அஜ்வத்

0 251

இலங்­கையின் சட்ட யாப்­பினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளான சிங்­க­ளமும், தமிழும் மற்றும் இணை மொழி­யான ஆங்­கி­லமும் அரச மற்றும் தனியார் பாட­சா­லை­களில் முதலாம் தரத்­தி­லி­ருந்தே கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும் என வெளி­வி­வ­கார அமைச்சின் கொள்கைத் திட்­ட­மிடல், மீளாய்வு, திட்ட அமு­லாக்கல், மற்றும் மனி­த­வள அபி­வி­ருத்­திக்குப் பொறுப்­பான பணிப்­பாளர் நாய­கமும் ஓமான் நாட்­டுக்­கான முன்னாள் இலங்கைத் தூது­வ­ரு­மான ஓ.எல். அமீர் அஜ்வத் தெரி­வித்தார்.

பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சு கனே­டிய நிதி­யு­த­வி­யுடன் இயங்கும் தேசிய மொழிகள் சமத்­துவ முன்­னேற்றத் திட்ட நிறு­வ­னத்­துடன் (NLEAP) இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இலங்­கையின் உத்­தி­யோ­க­பூர்வ மொழி­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் வழி­மு­றை­களை ஆராயும் தேசிய மாநாடு கடந்த வாரம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இதில் விசேட பேச்­சா­ள­ராக கலந்­து­ கொண்ட அவர் “சமூக ஒருங்­கி­ணைப்பு மற்றும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வதில் மொழிச் சமத்­து­வத்தின் முக்­கி­யத்­துவம்” என்ற தலைப்பில் உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
ஒரு தேசத்தின் மொழிகள் அத்­தே­சத்­துக்­கான அமை­தியின் அத்­தி­வாரம். தேசிய மொழிகள் பரஸ்­பர புரிந்­து­ணர்­வுக்கும், பரஸ்­பர புரிந்­து­ணர்வு சமூக ஒரு­மைப்­பாட்­டுக்கும், சமூக ஒரு­மைப்­பாடு சமூக நல்­லி­ணக்­கத்­திற்கும் சமூக நல்­லி­ணக்கம் தேசிய அமை­திக்கும் வழி­வ­குக்­கி­றது.

பரஸ்­பர புரிந்­து­ணர்­வுக்கும் அமை­தி­யான சக­வாழ்­வுக்கும் பங்­க­ளிப்புச் செய்­வதில் தேசிய மொழிக் கொள்­கையில் வெற்­றி­கண்ட பல சர்­வ­தேச நாடு­களை உதா­ரணம் காட்­டலாம்.

எமது நாட்டின் தேசிய மொழிகள் எமது கலாச்­சாரப் பாரம்­ப­ரியங்கள். அவை தேசிய சொத்­துக்கள். அவற்றைப் பாது­காத்து அவற்றால் பய­ன­டைய வேண்­டி­யது ஒவ்­வொரு இலங்­கை­ய­ரதும் கட­மை­யாகும். இலங்­கையின் சட்ட யாப்­பினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளான சிங்­க­ளமும், தமிழும் மற்றும் இணை மொழி­யான ஆங்­கி­லமும் அரச மற்றும் தனியார் பாட­சா­லை­களில் முதலாம் தரத்­தி­லி­ருந்தே கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும் என்றார்.
பிர­த­மரும் பொது ­நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்­தன இந்த இருநாள் மாநாட்டை ஆரம்­பித்து வைத்தார்.  இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் எரிக் வால்ஷ், NLEAP திட்ட களப் பணிப்­பாளர் மைகல் எம்ப்லம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வடக்குக் கிழக்கு உட்­பட நாட்டின் பல பகு­தி­களில் இருந்து கலந்து கொண்ட உயர்­மட்ட அரச அதி­கா­ரிகள், தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் மற்றும் கல்வி நிறு­வ­னங்­களின் விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நன்கொடை வழங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவிலானோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மொழி­பெ­யர்ப்பா ளர்­க­ளுக்­கான கைநூ­லொன்றும் இம் மாநாட்டில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.