சவூதியில் இலங்கையர்களுக்கு கூடிய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு

ஒப்பந்தம் கைச்சாத்து

0 214

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரே­பி­யாவில் இலங்­கை­யர்­க­ளுக்கு கூடிய சம்­ப­ளத்­துடன் வேலை வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வேலைத் திட்­ட­மொன்­றினை இலங்கை தொழிற்­கல்வி ஆணைக்­குக்­குழு சவூதி அரே­பி­யாவின் அனு­ச­ர­ணை­யுடன் ஆரம்­பித்­துள்­ளது.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 23 தொழில் துறை­களில் சவூதி அரே­பி­யாவில் வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும் இத்­திட்­டத்­திற்­கான உடன்­ப­டிக்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்­கை­யி­லுள்ள சவூதி அரே­பி­யாவின் தூது­வ­ருக்­கு­மி­டையில் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

குறிப்­பிட்ட உடன்­ப­டிக்கை கடந்த 11 ஆம் திகதி முதல் அமுலில் உள்­ள­தாக தொழிற்­கல்வி ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ளர் ­நா­யகம் கே.ஏ.லலி­த­தீர தெரி­வித்தார்.

மொரட்­டு­வ­யி­லுள்ள இலங்கை – ஜெர்­மனி தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வனம், ஒரு கொட­வத்த கொரியா – இலங்கை தேசிய தொழிற்­ப­யிற்சி நிறு­வனம் மற்றும் மொரட்­டுவ கைத்­தொழில் பொறி­யியல் பயிற்சி நிறு­வனம் எனும் நிறு­வ­னங்­களில் இது தொடர்­பான திற­மை­களை உறுதி செய்­வ­தற்­கான பரீட்­சை­களை நடாத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் தொழிற்­கல்வி ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

பரீட்­சை­களில் சித்­தி­ய­டை­ப­வர்­களின் அனைத்து தக­வல்­களும், முடி­வு­களும் சவூதி அரே­பி­யாவின் அரச தகவல் மையத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பான மேல­திக விப­ரங்­களை தொழிற்­ப­யிற்சி கல்வி ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ள­ரி­ட­மி­ருந்து பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 071 4817629 எனும் இலக்கத்துடன் அல்லது manjula@tvec.gov.lk மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ள முடியும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.