இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பிரதேச ரீதியாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்: கலாநிதி ரவூப் ஸெய்ன்

0 1,337

எம்.எம்.எம். ரம்ஸீன்

சிறு­பான்மை சமூ­கங்­களின் நீண்­ட­கால வர­லாற்றுப் பாரம்­ப­ரியம் அச்­ச­மூ­கங்­க­ளுக்கு அர­சியல் பலத்தை வழங்­கு­கின்­றது. தற்­கா­லத்தில் சிறு­பான்மை சமூ­கங்­களின் வர­லாற்றுப் பாரம்­ப­ரியம் சமூக முக்­கி­யத்­து­வத்­திற்­கப்பால் அர­சியல் முக்­கி­யத்­து­வத்தைப் பெற்­றுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இது கூட்­டு­ மு­யற்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும் என கலா­நிதி ரவூப் ஸெய்ன் குறிப்­பிட்டார்.

கலா­நிதி ரவூப்ஸெய்ன் எழு­திய “இலங்கை முஸ்­லிம்­களின் தேசிய பங்­க­ளிப்பு” நூல் அறி­முக விழா கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை உடு­நு­வர முறுத்­த­க­ஹ­மு­ளயில் அமைந்­துள்ள உடு­நு­வர அபி­வி­ருத்தி நிதி­யத்தின் ஏ.எச்.எம். மஹ்ரூப் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. உடு­நு­வர அல்­மனார் தேசிய பாட­சா­லையின் அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் (நளீமி) தலை­மையில் நடை­பெற்ற இவ்­வி­ழாவில் அவர் தொடர்ந்து உரையாற்று­கையில்,

முஸ்லிம் சமூ­கத்தில் வர­லாறு தொடர்­பான பிரக்ஞை ஏற்­பட வேண்டும். வர­லாறு சமூ­கத்தின் இருப்­புக்கு அவ­சி­ய­மாகும். வர­லா­றற்ற சமூகம் வேரற்ற மரம் போன்­ற­தாகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் தொழில்சார் வர­லாற்­றா­சி­ரியர் ஒரு­வ­ரேனும் காணப்­ப­டாமை மிகப் பெரும் குறை­பா­டாகும். அதேபோல், இன்று தொல்­பொ­ரு­ளி­யலில் உயர் தகை­மை­ பெற்ற ஒருவர் கூட எம்­மத்­தியில் இல்லை என்­பதும் பெருங்­கு­றை­பா­டாகும்.

இலங்­கையை சர்­வ­தேசத்திற்கு அறி­மு­கப்­ப­டுத்­திய அழ­கிய வர­லாறு முஸ்லிம் சமூ­கத்­திற்­குண்டு. ஆனால், நாம் எம்மைப் பற்­றிய வர­லாறு தெரி­யாமல் இன்று வரை வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். வர­லாறு என்­பது விஞ்­ஞான ரீதியில் மூலா­தா­ரங்­களில் இருந்து தேடி ஆய்வு செய்து எழு­தப்­பட வேண்டும்.

முஸ்லிம் கிரா­மங்­களின் வர­லாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இது அர­சியல் ரீதி­யிலும் சமூ­கத்­துக்கு பாது­காப்­பா­ன­தாக அமையும். முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தல் ஒரு கூட்­டு­ மு­யற்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

சமூ­கத்தின் எதிர்­கால நோக்கு, திட்­ட­மி­டலை மேற்­கொள்­வ­தற்கு வர­லாறு எழு­தப்­பட வேண்டும். பிர­தேச ரீதியில் முதற்­கட்­ட­மாக வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்த முடியும். பிர­தேச ரீதியில் 1948 ஆம் ஆண்­டுக்கு பிறகு நடை­பெற்ற விட­யங்­க­ளை­யா­வது முதலில் ஆவ­ணப்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டும்.

இலங்கை முஸ்­லிம்கள் இந்­நாட்டின் சுதந்­தி­ரத்­திற்கு செய்த பங்­க­ளிப்பு என்­பது பெரும்­பான்மை சமூ­கத்­திடம் உத்­த­ர­வா­தங்கள் எத­னையும் பெற்­றுக்­கொள்­ளாமல் நாட்டின் சுதந்­தி­ரத்­திற்கு வழங்­கிய ஆத­ர­வாகும். 1915 சிங்­கள – முஸ்லிம் கல­வ­ரத்தின் காயங்கள் ஆறாத நிலையில் முஸ்­லிம்கள் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். இந்த ஆத­ரவு தான் விரை­வான சுதந்­தி­ரத்­திற்கு வழி செய்­தது என்று குறிப்­பி­டுவர்.

இலங்­கையில் பல ஆயிரம் ஆண்­டு­க­ளாக பௌத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் சிறந்த உறவு இருந்து வந்­துள்­ளது. நாட்டின் கரை­யோ­ரத்தில் கி.பி. 2 ஆம் நூற்­றாண்டில் அரே­பி­யர்கள் மன்னார், புத்­தளம், சிலாபம் ,கொழும்பு, நீர்­கொ­ழும்பு, காலி, மாத்­தறை வரை குடி­யே­றி­யி­ருந்­தனர். இவர்கள் கி.பி. 7 ஆம் நூற்­றாண்டில் இஸ்லாம் அறி­மு­க­மா­கிய போது அரே­பி­யா­வுக்கு ஒரு தூது­வரை அனுப்பி இஸ்­லாத்தை அறிந்து கொண்­டுள்­ளனர். இவர்கள் பின்னர் நாட்டின் உட்­ப­கு­திக்கு நகர்ந்­தனர். அரே­பி­யர்கள் இலங்­கைக்கு வந்த போது இலங்­கையைக் கைப்­பற்­றக்­கூ­டிய அர­சியல், பொரு­ளா­தார பலத்தைக் கொண்­டி­ருந்­தனர். இவர்­க­ளிடம் நாடு கைப்­பற்றும் நோக்கம் இருக்­க­வில்லை. ஆனால் இவர்கள் பாவா ஆதம் மலையை தரி­சிக்­கவும் வாணிப நோக்­கத்­திற்­கா­கவும் இலங்­கைக்கு வந்­த­வர்­க­ளாவர்.

வாணிப நோக்­கத்­திற்­காக இலங்கை வந்த அரே­பி­யர்கள் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பெரும் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளனர். இலங்­கைக்கு 12 ஆம் நூற்­றாண்டில் இந்­தி­யர்­களும் 18 ஆம் நூற்­றாண்டில் மலாய்­களும் 19 ஆம் நூற்­றாண்டில் போராக்கள், குஜராத்திகள், வட இந்­தி­யர்கள் வந்­தனர். அரே­பி­யர்கள் 13 ஆம் நூற்­றாண்டில் கரை­யோ­ரத்தில் இருந்து உள்­நாட்­டினுள் நகர்ந்­தனர். அரே­பி­யர்கள் முதன் முத­லாக சப­ர­க­முவ எனும் இடத்தில் குடி­ய­மர்ந்­த­தாக மார்க்­க­போ­ல­வினால் பதி­யப்­பட்­டுள்­ளது. இக்­கா­லப்­ப­கு­தியில் மலை­நாட்­டுக்கு முஸ்­லிம்கள் வந்­துள்­ளனர் என்று அறிய முடி­கின்­றது. 1626 இல் போர்த்­துக்­கே­ய­ரினால் வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு கண்டி செனரத் மன்னன் இட­ம­ளித்­த­தாக சிங்­கள வர­லாற்­றா­சி­ரி­யர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

வியா­பாரப் பொருட்­களை கரை­யோ­ரப்­ப­கு­தி­களில் இருந்து உள்­நாட்டு பகு­தி­க­ளுக்கும் உள்­நாட்டு பகு­தி­களில் இருந்து கரை­யோ­ரப்­ப­கு­தி­க­ளுக்கும் போக்­கு­வ­ரத்து செய்­வ­தற்கு தவளம் போக்­கு­வ­ரத்து முறையை முஸ்லிம் வியா­பா­ரிகள் பயன்­ப­டுத்­தினர். இவ்­ வியா­பா­ரத்தில் ஈடு­பட்ட முஸ்­லிம்கள் 10 ஆம் நூற்­றாண்டு முதல் மலை­நாட்டில் பல பிர­தே­சங்­களில் குடி­யே­றி­யுள்­ளனர். மலை­நாட்டில் காணப்­படும் மடிகே எனும் பெயர் கொண்ட கிரா­மங்கள் அரே­பி­யர்கள் மலை­நாட்டு உற்­பத்திப் பொருட்களை சேமித்து வைத்த இடங்­க­ளாகும். இதில் உட­த­ல­வின்னை மடிகே, கல­கெ­தர மடிகே, மிதி­யால மடிகே முத­லா­ன­வற்றைக் குறிப்­பி­டலாம். இப்­ப­கு­திகள் காலப்­போக்கில் முஸ்லிம் குடி­யேற்­றங்­க­ளாக வளர்ச்­சி­ய­டைந்­தன. எனவே, கண்டிப் பிர­தேச முஸ்­லிம்­க­ளுக்கு ஏழு நூற்­றாண்டு கால வர­லா­றுண்டு.

கங்­க­சி­றி­புர எனும் கம்­பளை இராஜ்­யத்தின் தோற்றம் கண்டி இராஜ்­யத்தின் தொடக்­க­மாகும். கம்­பளை இராஜ்­யத்தின் தோற்றம் ஏற்­பட்ட காலப்­ப­கு­தியில் கம்­ப­ளையில் முஸ்லிம் குடி­யி­ருப்­புக்கள் காணப்­பட்­டுள்­ளன. கம்­ப­ளையில் முஸ்­லிம்­களின் ஆரம்­ப­கால குடி­யேற்­றங்கள் இல்­ல­வ­துரை, சிங்­ஹா­பி­டிய என்­ப­ன­வாகும். அதேபோல் அக்­கு­ற­னையில் குரு­கொடை, கசா­வத்தை என்­பன ஆரம்ப குடி­யேற்­றங்­க­ளாகும்.

14 ஆம் நூற்­றாண்டில் 4 ஆம் புவ­னே­க­பாகு மன்னன் கம்­ப­ளையில் தியானம் செய்த பாவா கூபி வலி­யுல்­லாஹ்வின் தேவை­களைக் கேட்­ட­றிந்து நிறைவு செய்­துள்ளான். அப்­போது அவர் தஸ்பீஹ் கோர்­வையை தூக்கி வீசி­ய­தா­கவும் தஸ்பீஹ் கோர்வை வீசப்­பட்ட தூரத்தின் அடிப்­ப­டையில் அரன்­கந்த எனும் கஹட்­ட­பி­டிய பிர­தேசம் அர­சனால் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வர­லாறு குறிப்­பி­டு­கின்­றது. கம்­பளை இரா­ச­தா­னியில் 4 ஆம் புவ­னே­க­பாகு மன்­னனின் அர­ச­வையில் பார­சீக, அரே­பிய, தமிழ் மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் இருந்­துள்­ளனர். இவர்கள் சென்று பாவா கூபியை அர­ச­னுக்­காக சந்­தித்­துள்னர். கம்­பளை இராஜ்­யத்தில் அரச சபையில் மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் இருந்­தமை கம்­பளை மன்னனின் பார­சீக, அரே­பிய, மலபார் மக்­க­ளுடனான வியா­பாரத் தொடர்பைக் காட்­டு­கின்­றது.

அக்­கு­றனை பிர­தேசம் 1638 இல் நடை­பெற்ற கண்­னொ­ருவ யுத்­தத்தின் பின்பு அர­சனால் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட இட­மாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. எனினும், இதற்கு முன்பு அக்­கு­ற­னையில் முஸ்­லிம்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர்.

உடு­நு­வ­ரையில் 12 ஆம் நூற்­றாண்டில் முஸ்­லிம்கள் வாழ்ந்து வந்­துள்­ள­மைக்­கான சான்­றுகள் உள்­ளன. கண்டி இரா­ச­தா­னியில் மன்­னர்கள் தலதா மாளி­கைக்கும் தேவா­ல­யங்­க­ளுக்கும் விகா­ரை­க­ளுக்கும் சேவை செய்­ப­வர்­க­ளுக்கு நிந்­த­கம, விகா­ர­கம காணி­களை அன்­ப­ளிப்புச் செய்­துள்­ளனர். இதில் முஸ்­லிம்கள் நிந்­த­கம, விகா­ர­கம காணி­களைப் பெற்றுக் கொண்­டனர். முஸ்லிம் வைத்­தி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட காணிகள் குண்­ட­சாலை பகு­தியில் காணப்­பட்­டன.

உடு­நு­வர முஸ்­லிம்கள் கண்டி இராஜ்­யத்தில் செய்த வைத்­திய சேவையின் பேரில் காணி­களை அன்­ப­ளிப்­பாகப் பெற்றுக் கொண்­டனர். இதில் பூவெ­லி­கட வெத­ரால அபூ­பக்கர் புள்ளே என்ற வைத்­தியர் இரா­ஜ­சிங்க மன்­னனின் இரண்­டா­வது மனை­வியின் நோயைக் குணப்­ப­டுத்­தினார். இதனால் அவ­ருக்கு தஸ்­கர எனும் இடத்தில் காணி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவை 12 ஆம் நூற்­றாண்டில் மலை­நாட்டில் முஸ்­லிம்கள் குடி­யே­றி­யி­ருந்­தனர் என்­ப­தற்கு சிறந்த சான்­றாகும். இலங்­கையில் அதிக முஸ்லிம் கிரா­மங்­களைக் கொண்ட மாவட்டம் கண்டி மாவட்­ட­மாகும்.

நாட்டின் தேசிய இறை­மைக்கும் பாது­காப்­புக்கும் முஸ்­லிம்கள் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளனர். மன்­னர்கள் போர்த்­துக்­கே­ய­ருக்கு எதி­ராக மேற்­கொண்ட யுத்­தங்­களில் வீர­தீ­ர­மாக முஸ்­லிம்கள் போரா­டி­யுள்­ளனர். 1592 இல் கண்டி இராஜ்­யத்தின் முதலாம் விம­ல­தர்­ம­சூ­ரி­யனின் ஆட்­சிக்­கா­லத்தில் 1599 இல் நடை­பெற்ற தந்­துர யுத்தம், கண்­னொ­ருவ யுத்தம் என்­ப­வற்றில் முஸ்­லிம்கள் பங்­கு­கொண்­டனர். கண்டி இராஜ்ய மன்­னர்கள் விசு­வா­சத்தின் அடிப்­ப­டையில் முக்­கிய பொறுப்­புக்­களில் முஸ்­லிம்­களை அமர்த்­தி­யி­ருந்­தனர். ராஜபக்ஷ வைத்­தி­ய­தி­லக கோபால முத­லியார் எனும் ஷேக் முஹம்மத் வைத்­திய துறையில் மன்­ன­ரிடம் மிகுந்த நம்­பிக்­கையைப் பெற்­றி­ருந்தார்.

முஸ்­லிம்கள் பொரு­ளா­தார துறையில் மகத்­தான பங்­க­ளிப்பு செய்­துள்­ளனர். 18,19 ஆம் நூற்­றாண்டில் மீயாப்­புள்ள எனும் முஸ்லிம் சிறந்த கோப்பி செய்­கை­யா­ள­ராக இருந்­துள்ளார். மலை­நாட்டு முஸ்­லிம்கள் பௌத்த மக்களுடனும் விகாரைகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர். கண்டி முஸ்லிம்கள் தலதா மாளிகையுடன் பல வழிகளில் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் தலதா மாளிகைக்கு தேவையான பொருட்களை வழங்கி வந்துள்ளனர். இறக்காமம், ஏறாவூர் முஸ்லிம்கள் யானைகளை வழங்கியுள்ளனர். அக்குறனை முஸ்லிம்கள் நகைகள், ஆபரணங்களை வழங்கியுள்ளனர். எசல பெரஹரவுக்கு உதவிகளை செய்துள்ளனர்.

ஹாரிஸ்பத்துவ குருனேஹென அஹமத் லெப்பை, உமர் லெப்பை, காதர் லெப்பை ஆகியோர் தலதா மாளிகையில் நகைகள், ஆபரணங்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர். கண்டியில் கிராம தலைவர்கள் உட்பட காரியகாரண பதவிகளில் முஸ்லிம்கள் இருந்துள்ளனர். இது மலைநாட்டு முஸ்லிம்களின் மகத்தான தேசிய பங்களிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் அல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எமது வரலாற்றை அறிந்து கொள்வதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.