பலஸ்தீன் விவகாரம் தொடர்பிலான விவாதம் பாராளுமன்றில் செவ்வாயன்று

0 243

(எம்.ஆர்.எம்.வசீம்)
பலஸ்தீன் மக்கள் தற்­போது எதிர்­கொள்ளும் சவால்கள் தொடர்­பாக எதிர்­வரும் 18 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யாக விவா­திப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன தலை­மையில் கடந்த வாரம் கூடிய பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­பான குழு கூட்­டத்­தி­லேயே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக எதிர்க்­கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணைக்கே பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­பான குழு அனு­மதி வழங்கி இருக்­கி­றது.

குறித்த பிரே­ரணை சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­த­மா­கவே அன்­றைய தினம் எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட இருக்­கி­றது. விவா­தத்தை பிற்­பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி­வரை நடத்­தவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்தீன் மக்கள் தற்­போது எதிர்­கொள்ளும் சிர­மங்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்ள விவா­தத்தை பார்­வை­யி­டு­வ­தற்­காக இலங்கை பலஸ்தீன் பாரா­ளு­மன்ற நட்­பு­ற­வுச்­சங்க உறுப்­பி­னர்கள் மற்றும் இலங்­கையில் இருக்கும் அரபு நாடு­களின் தூது­வர்கள் உள்­ளிட்ட வெளி­நாடு­களின் தூதுவர்கள் உயர்ஸ்­தா­னி­கர்கள் என பலரும் அன்­றைய தினம் பாரா­ளு­மன்ற கல­ரிக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும் இந்த விவா­தத்தை எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆரம்பித்து வைத்து உரையாற்ற இருப்பதுடன் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.