ஹஜ் யாத்திரைக்கு வருடாந்தம் புதிய பதிவுகள்

பழைய பதிவு கட்டணங்கள் மீளக் கையளிக்கப்படும்

0 201

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த சில வரு­டங்­களில் ஹஜ் யாத்­தி­ரைக்­காக மீளப்­பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய பதி­வுக்­கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்டு இது­வரை காலம் யாத்­திரை மேற்­கொள்­ளா­த­வர்கள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ணங்­களை தாம­தி­யாது மீளப்­பெற்­றுக்­கொள்­ளும்­படி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

ஒவ்­வொரு வரு­டமும் ஹஜ் யாத்­தி­ரைக்­காக புதி­தாக பதி­வுகள் இடம் பெற­வுள்­ள­துடன் அந்­தந்த வரு­டத்­திற்­கான ஹஜ் யாத்­திரை தெரி­வுகள் புதி­தாக விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளி­லி­ருந்தே இடம் பெறும். இதே­வேளை விண்­ணப்­பிப்­ப­வர்கள் மீளப் பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் கட்­டாயம் செலுத்­தப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பு­திய நடை­மு­றையின் கீழ் ஏற்­க­னவே 25 ஆயிரம் ரூபா செலுத்தி விண்­ணப்­பித்­துள்­ள­வர்கள் அக்­கட்­ட­ணத்தை மீளப்­பெற்­றுக்­கொண்டு அடுத்த வருடம் ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டி­ருந்தால் புதி­தாக 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொள்ள வேண்­டு­மென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்­கள திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் தெரி­வித்தார்.

அடுத்த வருட ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் தாமதமின்றி கோரப்படும். இணைய வழியூடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.