பொதுஜன முன்னணியில் இணைந்ததற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன

சபையில் ஐ.தே.க. திட்டவட்டமாக தெரிவிப்பு

0 679

பாரா­ளுமன்ற உறுப்­பினர் மஹிந்த ராஜ­பக் ஷ பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்­த­மைக்­கான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்­கின்­றன என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபையில் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியா? அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியா? என சபையில் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­விற்கும் சுசில் பிரே­ம­ஜெ­யந்­த­விற்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் நில­வி­யது. மஹிந்த ராஜபக் ஷ பொது­ஜன முன்­ன­ணியில் இணை­யவே இல்லை என சபையில் அடித்­துக்­கூ­று­கின்றார் சுசில் பிரே­ம­ஜெ­யந்த எம்.பி, இல்­லை­யென வாதிட்டார் கிரி­யெல்ல எம்.பி.

சபையில் நேற்று புதன்­கி­ழமை  எதிர்க்­கட்சி தலைவர் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலைவர் நிய­மனம் குறித்து விசேட உரை­யொன்றை ஆற்­றிய வேளையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பு­ரி­மையில் இருந்து வில­கிய நபர்கள் பாரா­ளு­மன்­றத்தின் அங்­கத்­துவத்தை பெற்­றுக்­கொள்ள முடி­யாது என சுட்­டிக்­காட்­டினார். சம்­பந்­தனின் உரையின் பின்னர் விசேட கூற்­றொன்றை எழுப்­பிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜெ­யந்த எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ நிய­மிக்­கப்­பட்­டமை சரி­யென கூறி­ய­துடன், ஊட­கங்­களில் மாத்­தி­ரமே மஹிந்த ராஜபக் ஷ கட்சி மாறி­விட்டார் என விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ எந்த சந்­தர்ப்­பத்­திலும் தான் கட்சி மாறி­ய­தாக கூற­வில்லை. ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியில் அவர்  இணைந்தார் என்­ப­தற்கு எந்த ஆதா­ரமும் இல்லை. அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இன்­று­வரை மஹிந்த ராஜபக் ஷ கட்­சியை விட்டு வில­கி­விட்டார் என்ற கருத்­தையோ அல்­லது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீ­ர­வினால் அவ்­வா­றான ஒரு அறி­விப்போ பாரா­ளு­மன்­றத்­திற்கு விடுக்­கப்­ப­ட­வில்லை. ஆகவே நாம் அனை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­கவே பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்றோம் என அவர் குறிப்­பிட்டார்.

இந்த காரணி குறித்து சபை முதல்வர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல சபையில் விமர்­சனம் ஒன்­றினை முன்­வைத்தார். இதன்­போது சுசில் பிரே­ம­ஜெ­யந்­த­விற்கும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்­ல­விற்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் நில­வி­யது. இதன்­போது சபை­மு­தல்வர் கிரி­யெல்ல, நான் கேட்கும் கேள்­வி­க­ளுக்கு பதில் கூற முடி­யுமா என சுசில் எம்.பியை நோக்கிக் கேட்டார், அதற்கு சுசில் எம்.பியும் ” நீங்கள் என்ன கேள்வி வேண்­டு­மா­னாலும் கேட்­கலாம்” என பதில் தெரி­வித்­ததும், சபை முதல்வர் கிரி­யெல்ல:-

நீங்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பு­ரி­மையை பெற­வில்­லையா?

சுசில் எம்.பி:- இல்லை,

சபை முதல்வர் கிரி­யெல்ல:- மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பு­ரி­மையை பெற­வில்­லையா?

சுசில் எம்.பி:- இல்லை,

சபை முதல்வர் கிரி­யெல்ல:-

நாமல் ராஜபக் ஷ ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பு­ரி­மையை பெற­வில்­லையா?

சுசில் எம்.பி:- இல்லை.

சபை முதல்வர் கிரி­யெல்ல:- உங்­களின் டுவிட்டர் கணக்­கு­களில் இதற்­கான ஆதா­ரங்கள் முழு­மை­யாக உள்­ளது, எம்­மாலும் இவற்றை நிரூ­பிக்க முடியும், சுய­நல அர­சியல் செய்ய வேண்டாம் என குறிப்­பிட்டார். இதன்­போது எழுந்த ஆளும் கட்­சியின் பிர­தம கொர­டா­வான கயந்த கரு­ணா­தி­லக எம்.பி:- உங்­களின் உறுப்­பு­ரிமை குறித்த ஆதா­ரங்கள் எம்­மி­டமும் உள்­ளன என தனது கையில் இருந்த தொலை­பே­சியின் மூல­மாக சில புகைப்­ப­டங்­களை காண்­பித்­த­துடன் நீங்கள் ஏமாற்­று­வது உங்­களை நம்பி வாக்­க­ளித்த மக்­களை என்­பதை மறந்­து­விட்டீர்கள் என்றார்.

இதன்­போது எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக எம்.பி:- உங்களின் உறுப்புரிமை குறித்த ஆதாரங்கள் எம்மிடமும் உள்ளது என தனது கையில் இருந்த தொலைபேசியின் மூலமாக சில புகைப்படங்களை காண்பித்ததுடன் நீங்கள் ஏமாற்றுவது உங்களை நம்பி வாக்களித்த மக்களை என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும்  தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.