உக்­கி­ர­ம­டையும் பலஸ்தீன மேற்கு கரை போராட்டம்

0 394

எம்.என் முஹம்மத்

மேற்கு கரை நகரான ஜெனீன் மீது இஸ்ரேல் கடந்த வாரம் நடத்­திய தாக்­குதல் தோல்­வியில் முடிந்­தமை இஸ்­ரே­லிய பாது­காப்பு வட்­டா­ரங்­களில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சில நூறு பலஸ்தீன் போரா­ளிகள் அதுவும் பதாஹ் அமைப்பு ஒழிந்து கொண்ட நிலையில் ஹமாஸின் இரா­ணுவப் பிரிவான அல் கஸ்ஸாம் படை­யணி, அல் குத்ஸ் பிரிகேட், இஸ்­லாமிக் ஜிஹாத் ஆகிய அமைப்­புகள் மிக நுணுக்­க­மான தாக்­குதல் மூலம் இஸ்­ரே­லிய படை­களை விரட்டி அடித்­தனர். இஸ்ரேல் தாக்­கு­தலை நிறுத்­தாது விடின் 24 மணி நேரத்­திற்குள் இஸ்­ரே­லிய தலை­நகர் டெல் அவிவ் மீது தாக்­குதல் நடத்­துவோம் என ஹமாஸ் சவால் விட்டு நடத்­தியும் காட்­டினர். அடுத்த தாக்­குதல் நடக்க முன்பு இஸ்ரேல் தமது படை­களை வாபஸ் வாங்­கி­யது. தனது தோல்­வியை மறைக்க மேற்குக் கரையின் இன்­னொரு நக­ரான நப்லூஸ் மீது தாக்­குதல் நடத்த முற்­பட்ட போது அங்கும் பதி­லடி கிடைத்­தது.

கடந்த 20 வரு­டங்­களில் இஸ்ரேல் மேற்கு கரை மீது நடத்த முற்­பட்ட மிக மோச­மான இரா­ணுவ தாக்­குதல் இது­வாகும். பல பதாஹ் தலை­வர்கள் PLO வின் இரா­ணுவப் பிரிவு ஒஸ்லோ உடன்­பாட்டில் இருந்து வெளி­யேற வேண்டும் என மஹ்மூத் அப்பாஸ் மீது கடு­மை­யான அழுத்தம் கொடுக்­கின்­றனர். மர­ணித்த போரா­ளி­களின் மரணச் சடங்­கிற்கு சென்ற பதாஹ் தலை­வர்­களை பலஸ்­தீன மக்கள் விரட்டி அடித்­தமை மக்­களின் பதாஹ் மீதான கோபத்தை தெளி­வாக விளங்கச் செய்­கி­றது.

ஒஸ்லோ உடன்­பாட்டை விளங்­கினால் அடுத்து என்ன நடக்கும் என்­பது தெளி­வாகத் தெரியும். ஒஸ்லோ ஒப்­பந்தம் இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீ­னி­யத்­திற்கும் இடையே, பாலஸ்­தீ­னி­யர்­களின் இடைக்­கால தன்­னாட்சி தொடர்­பி­ல் செப்­டம்பர் 13, 1993 அன்று, வெள்ளை மாளி­கையில் கையெ­ழுத்­திடப்பட்டது.

இந்த உடன்­பாட்டின் மூலம் பலஸ்­தீன அதி­கார சபை உரு­வாக்­கப்­பட்டு இஸ்ரேல் தனது இருப்­பிற்­கான அரபு உலக அங்­கீ­கா­ரத்தை பெற்றுக் கொண்­டது.
சர்­வ­தேச சமூகம் சற்றும் எதிர்­பாராதவித­மாக பலஸ்­தீன அதி­கார சபைக்கு நடை­பெற்ற தேர்­தலில் ஹமாஸ் வெற்றி பெற்று சில நாட்­களில் காஸாப் பள்­ளத்­தாக்கை தனது கட்­டுப்­பாட்டில் கொண்டு வந்­தது.

ஹமாஸ் எப்­போதும் ஒஸ்லோ உடன்­பாட்டை ‘ஆக்கிர­மிப்பை அங்­கி­க­ரீக்கும் பிர­க­டனம்’ எனத் தொடர்ந்து எதிர்த்து வரு­கி­றது.

‘‘நாங்கள் எங்கள் வர­லாற்றில் பொறிக்­கப்­பட்ட ஒரு நிலத்தைப் பற்றி பேசு­கிறோம், நாங்கள் அல்-­குத்ஸைப் பற்றி பேசு­கிறோம், இது முஸ்­லிம்­க­ளுக்­கான முதல் கிப்லா மற்றும் முஹம்­மது நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் எனும் விண்­ணு­லக யாத்­திரை மேற்­கொண்ட இடம். சியோ­னிஸ்­டுகள் ஐரோப்­பா­வி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து வரு­வ­தற்கு நீண்ட காலத்­திற்கு முன்பே அந்த நிலத்­துக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளான பாலஸ்­தீ­னி­யர்­களைப் பற்றி நாங்கள் பேசு­கிறோம்).”

“நாங்கள் ஒரு­போதும் எங்கள் தாய­கத்தை விட்­டு­விட மாட்டோம் அல்­லது அதன் எந்தப் பகு­தி­யையும் விட்­டுக்­கொ­டுக்க ஒப்­புக்­கொள்ள மாட்டோம். அதை விடு­விப்­ப­தற்­கான எந்­த­வொரு முயற்­சி­யையும் நாங்கள் விட்­டு­விட மாட்டோம், மேலும் எங்­களால் இப்­போது விடு­விக்க முடி­யாது என்றால் எதிர்­கால தலை­மு­றை­யினர் விடு­விப்­ப­தற்­காக விட்­டு­வி­டுவோம்.’’

இதுவே ஹமாஸ் தலை­வர்கள் தொடராக முன்வைக்கும் நிலைப்­பாடு.
அண்மைக் கால­மாக மேற்கு கரையில் நடை­பெறும் போராட்­டங்கள் ஒஸ்லோ உடன்­பாட்டை தெளி­வாக முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்­கான வாய்ப்பை வெளிப்­ப­டுத்­து­கி­றது. அது அறபு நாட்டு வீதி­களில் அரபு அர­சர்­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­க­ளுக்கு வழி வகுக்கும்.

பதாஹ் ஹமா­ஸுடன் முரண்­பட்டால் காஸாவில் நடந்த அதே வரலாறு மேற்கு கரையிலும் நடைபெறும். அது பரந்துபட்ட பலஸ்தீன மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தக் கூடியது.

இஸ்ரேல் அதன் வரலாற்றில் மிக மோசமான பாதுகாப்பு சவாலை எதிர் கொள்கிறது. பல எதிர்பாரா நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.