கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதை வழிநடாத்தியமைக்காக கெளரவம்

இலங்கை தேசிய முஸ்லிம் பேர­வை ஏற்பாடு

0 332

ஏ.ஆர்.ஏ.பரீல்

உல­க­ளா­விய ரீதியில் கொவிட் 19 தொற்று பர­வி­யி­ருந்த கால­கட்­டத்தில் உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் இடம்­பெ­றாத முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பழி­வாங்­கல்கள் இலங்­கையில் நடந்­தே­றின. முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. பின்பு கொவிட் 19 தொற்று ஜனா­ஸாக்­க­ளுக்­கென்று தனி­யான மைய­வா­டி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டது. மஜ்மா நகர் மைய­வா­டியை முஸ்­லிம்கள் ஓர் நினைவுச் சின்­ன­மாக பாது­காக்க வேண்டும் என இலங்கை தேசிய முஸ்லிம் பேர­வையின் தலைவர் அமான் அஷ்ரப் தெரி­வித்தார்.

கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் வபாத்­தான முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை கெள­ர­வ­மான முறையில் நல்­ல­டக்கம் செய்­வதில் கொவிட் 19 ஜனாஸா நலன்­புரி அமைப்பு பெரும் பங்­காற்­றி­யது. இதற்­காக அவ் அமைப்பின் தலைவர் அப்ஸல் அஹ்மட் மரிக்கார் பாராட்டு பத்­திரம் வழங்கி கெள­ர­விக்­கப்­பட்டார். இலங்­கை தேசிய முஸ்லிம் பேரவை இந்­நி­கழ்­வினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அப்ஸல் அஹமட் மரிக்கார் சோனக, போரா, மேமன், மலே சமூ­கத்தின் பிர­தி­நி­தி­களால் பாராட்­டப்­பட்டு கெள­ர­விக்­கப்­பட்டார்.

இந்­நி­கழ்வு இலங்கை தேசிய முஸ்­லிம் பேர­வையின் தலைவர் அமான் அஷ்ரப் தலை­மையில் கடந்த சனிக்­கி­ழமை மாலை தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் நடை­பெற்­றது.
நிகழ்வில் அமான் அஷ்ரப் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், ‘இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் சமூக குழு­மங்கள் அனைத்­தையும் ஒரே மேடையில் ஒன்­றி­ணைத்­துள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்குள் சோனக, போரா, மலே, மேமன் என்ற குழு­மங்கள் இருந்­தாலும் எங்­க­ளுக்குள் பிள­வுகள் இல்லை. நாம் முஸ்­லிம்கள் என்ற வகையில் ஒன்­று­பட்­டுள்ளோம். கொவிட் 19 வைரஸ் தொற்று காலத்தில் முஸ்­லிம்கள் பழி­வாங்­கப்­பட்­டார்கள். ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன. ஒரு வருட காலத்தின் பின்பு விஷேட மைய­வா­டியில் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. இதுவோர் இன­வாத பழி­வாங்­க­லாகும் என்றார்.

ஓட்­ட­மா­வடி மஜ்­மா­நகர்
கொவிட் 19 மைய­வாடி
கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் இறந்­த­ முஸ்­லிம்கள் உள்­ள­டங்­க­லாக
அனை­வ­ரதும் உடல்கள் அடக்கம் செய்­யப்­ப­டாது எரிக்­கப்­பட (தகனம்) வேண்டும் என்­பது 2020 மார்ச் மாதத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தின் கொள்­கை­யாக இருந்­தது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தக­வல்­களின்படி சுமார் 200க்கும் மேற்­பட்ட முஸ்­லிம் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­பட்­டன.

ஒரு­வ­ருட காலத்தின் பின்பே அர­சாங்கம் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை விஷேட மைய­வா­டி­யொன்றில் அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யது. இதற்­கென ஓட்­ட­மா­வடி கோற­ளைப்­பற்று மேற்கு பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட சூடு­பத்­தின சேனை மஜ்மா நகரில் காணி­யொ­துக்­கப்­பட்­டது. இந்தக் காணியை ஒதுக்கிக் கொள்ளும் விட­யத்தில் தற்­போ­தைய அமைச்சர் நஸீர் அஹமட் முழு முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டார்.

மஜ்மா நகர் கொவிட் 19 விஷேட மைய­வா­டியில் 2021 மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. இம் ­மை­ய­வா­டியில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்டு வந்­தன. 2022 மார்ச் மாதம் 5ஆம் திக­தி­யுடன் இவ் ஏற்­பா­டுகள் முடி­வுக்கு வந்­த­துடன் கொவிட் ஜனாஸாக்களை நாட்டின் எப்பாகத்திலுமுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

இம்­மை­ய­வா­டியில் 2986 முஸ்­லிம்­க­ளி­னதும், 293 பெளத்­தர்­க­ளி­னதும், 269 இந்­துக்­க­ளி­னதும், 86 கிறிஸ்­த­வர்­க­ளி­னதுமாக மொத்­த­மாக 3634 உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு
கொவிட் 19 தொற்­றினால் கால­மா­ன­வர்­களின் ஜனா­ஸாக்­களை நாடெங்­கி­லு­மி­ருந்து மஜ்மா நகருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்­வ­தற்­கான பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அன்று கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு என்றோர் அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. இதன் தேசிய தலை­வ­ராக அப்ஸல் அஹமட் மரிக்கார் நிய­மிக்­கப்­பட்டார்.

மஜ்மா நகரில் குறிப்­பிட்ட ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்­கான வெளிக்­கள உத­வி­களை சுகா­தார தரப்­புக்கும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கும், ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­க­ளுக்கும், பொது­மக்­க­ளுக்கும் இவ்­வ­மைப்பு நெறிப்­ப­டுத்தி செயற்­ப­டுத்­தி­யது. இவ்­வ­கையில் இவ் அமைப்­பி­னரை கெள­ர­விக்கும் முக­மா­கவே இந்­நி­கழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வ­மைப்பின் முழு இலங்­கைக்­கு­மான தேசிய அமைப்­ப­ள­ராக கண்டி மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் அப்­போ­தைய தலைவர் அஸ்லம் ஒத்மான் ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். அத்­தோடு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தத்தம் பிர­தேச கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி இறந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை ஓட்­ட­மா­வ­டிக்கு அடக்­கத்­துக்­காக அனுப்பி வைக்கும் ஏற்­பா­டு­களில் ஒத்­து­ழைப்பு வழங்­கி­னர்.

இவ்­வ­மைப்பு ஜனா­ஸாக்­களை ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டிக்கு கொண்டு செல்­வ­தற்­கான பெட்­டி­களை தலா 5 ஆயிரம் ரூபா வீதம் சகாய விலையில் ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­க­ளுக்க வழங்­கி­யது. ஓட்­ட­மா­வடி மைய­வா­டிக்கு தூரப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஜனா­ஸாக்­களை எடுத்துச் செல்­வ­தற்கு பல மணித்­தி­யா­லங்கள் தேவைப்­பட்­டதால் மல்­டிலக் தனியார் நிறு­வனம் குளி­ரூட்­டப்­பட்ட ட்ரக் வண்­டி­யொன்­றினை இல­வ­ச­மாக வழங்­கி­யது.

மேலும் கண்டி மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் மைய­வா­டிக்கு தேவைப்­பட்ட பெக்கோ இயந்­தி­ர­மொன்­றினை பாவ­னைக்­காக வழங்­கி­யது. கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பு மஜ்மா நகர் மைய­வா­டியைச் சூழ யானை வேலி அமைத்துக் கொடுத்­துள்­ளது. அத்­தோடு சுற்­றி­வர மதில் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இம்­மை­ய­வா­டியில் தனது தாய், தந்­தையர் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள பிர­பல வர்த்­தகர் ஒருவர் இப்­ப­ணி­யினை முன்­னெ­டுப்­ப­தற்கு முன் வந்­துள்ளார்.

அப்ஸல் அஹமட் மரிக்கார்
நிகழ்வில் கெள­ர­விக்­கப்­பட்ட கொவிட் ஜனாஸா நலன்­புரி அமைப்பின் தலைவர் அப்ஸல் மரிக்கார் உரை­யாற்­று­கையில், ஜனாஸா நல்­ல­டக்­கத்­துக்­கான விஷேட மைய­வாடி காணி­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்கு பெரும் பங்­காற்­றிய அமைச்­சர்­க­ளான அலி­சப்ரி மற்றும் அகமட் நஸீர் ஆகி­யோ­ருக்கு நன்­றி­களைத் தெரி­வித்தார். அத்­துடன் தனது அமைப்பின் உறுப்­பி­னர்­களின் ஒத்­து­ழைப்­பு­க­ளுக்கு நன்றி மற்றும் பாராட்­டு­களைத் தெரி­வித்தார்.

தேசிய முஸ்லிம் பேர­வையின் முன்னாள் தலைவர்
தேசிய முஸ்லிம் .பேர­வையின் முன்னாள் தலைவர் பேரா­சி­ரியர் கெமால் ஐ டீன் உரை­யாற்­று­கையில், ஜனாஸா தக­னத்தை நிறுத்து­வ­தற்­காக அர­சியல் பிர­மு­கர்­க­ளு­டனும் நிபு­ணத்­துவ குழு­வி­ன­ரு­டனும் பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­தினோம். ஆனால் நிபுணர் குழுவின் இரு­வரின் தீர்­மா­னமே இறுதித் தீர்­மா­ன­மாக இருந்­தது. இத­னாலேயே ஜனாஸா எரிப்­பினை உட­ன­டி­யாக தடுக்க முடி­யாமற் போனது என்றார்.

நிகழ்வில் சோனக, மலே, போரா மற்றும் மேமன் சமூ­கங்­களைச் சேர்ந்த பேர­வையின் உறுப்­பி­னர்கள் பேர­வையின் தலைவர் அமான் அஷ்ரப், சுகா­தார அமைச்சின் கொவிட் 19 செய­ல­ணியின் பொறுப்­பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், கொவிட் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் அப்சல் மரிக்கார், அதன் கொழும்பு மாவட்டத் தலைவர் அஸ்லம் ஒத்மான், கண்டி மாவட்டத் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் மற்றும் நலன்புரி அமைப்பின் தலைவர்கள் என்போர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் கொவிட் ஜனாஸா நலன்புரி அமைப்பின் மூலம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி அமைப்பின் தலைவர் அப்சல் மரிக்காருக்கு தேசிய முஸ்லிம் பேரவையில் அங்கம் வகிக்கும் சமூகங்களின் பிரதிநிதிகள் ஞாபகார்த்த சின்னங்களையும் பாராட்டு பத்திரங்களையும் வழங்கி கெளரவித்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.