ஹஜ் ஏற்­பா­டு­களில் இம்­மு­றையும் குள­று­ப­டிகள்

அறிக்கை கோரினார் சவூ­திக்­கான இலங்கைத் தூதுவர்!

0 258

றிப்தி அலி

“முஸ்­த­லி­பாவில் பிந்­திய இரவில் தரி­ப்­பது புனித ஹஜ் கட­மை­களில் ஒன்­றாகும். எனினும், எமது ஹஜ் முகவர் அர­பா­வி­லி­ருந்து முஸ்­த­லிபா செல்­வ­தற்கு உரிய நேரத்­திற்கு பஸ் ஏற்­பாடு செய்­யா­மை­யினால் குறித்த கட­மை­யினை தவ­ற­விட்டேன்” என இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையில் பங்­கேற்ற இலங்கை ஹாஜி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

“இதற்­கான முழுப் பொறுப்­பி­னையும் எமது ஹஜ் முக­வரே பொறுப்­பேற்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் எமது ஹஜ் முக­வ­ரிடம் வின­விய போது, இலங்கை ஹஜ் குழுவே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற பதிலே கிடைக்கப் பெற்­றது’’ எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றச் செல்லும் ஹாஜிகள், துல்ஹஜ் மாதத்தின் 9ஆம் நாள் அர­பாவில் ஒன்­று­கூடி லுஹர் மற்றும் அஸர் ஆகிய தொழு­கை­களை சேர்த்து தொழு­து­விட்டு அரபா பேரு­ரையில் பங்­கேற்பர்.

அன்று சூரியன் மறைந்­த­வுடன் ஹாஜிகள் அனை­வரும் அர­பா­வி­லி­ருந்து முஸ்­த­லிபா நோக்கிச் செல்வர். இவ்­வாறு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (27) இரவு அர­பா­வி­லி­ருந்து முஸ்­த­லிபா செல்லத் தயா­ராக இருந்த சுமார் 150 இலங்கை ஹாஜி­க­ளுக்­கான பஸ் ஏற்­பா­டுகள் உரிய நேரத்­திற்கு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இதனால், அர­பாவில் பஸ்­ஸின்றி தவித்த இலங்கை ஹாஜிகள் மத்­தியில் பதற்­ற­மான சூழ­லொன்று ஏற்­பட்­டுள்­ளது. இந்த ஹாஜிகள், இலங்கை ஹஜ் குழு­வினை தொடர்பு கொண்டு தங்­களின் ஆத்­தி­ரத்­தினை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து நள்­ளி­ரவு தாண்டி 2 மணிக்கே இரண்டு பஸ்கள் இந்த ஹாஜி­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதில் பய­ணித்த இலங்கை ஹாஜிகள், சுபஹ் தொழு­கைக்­கான அதான் சொல்­லப்­பட்ட பின்­னரே முஸ்­த­லி­பா­வினை சென்­ற­டைந்­துள்­ளனர். இதனால் குறித்த ஹாஜிகள் முஸ்­த­லி­பாவில் பிந்­திய இரவில் தரி­ப்­பதை தவ­ற­விட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பல இலட்சம் ரூபா செல­வ­ளித்து ஹஜ்­ஜிற்­காகச் சென்ற இலங்கை ஹாஜிகள் பலர், இது போன்று பல்­வேறு வித­மான சொல்­லொன்னா துய­ரங்­களை இம்­முறை அனு­ப­வித்­துள்­ளனர். இதில் ஒரு­வ­ரின் உள்ளக் குமு­றலே இது­வாகும்.

இலங்­கை­யி­லி­ருந்து 3,500 பேர் இம்­முறை ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக புனித மக்­கா­விற்கு சென்­றி­ருந்­தனர். இதற்கு மேல­தி­க­மாக சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் பேஸா மூலம் சுமார் 130 பேர் சென்­றி­ருந்­தனர்.
அத்­துடன் மன்­னரின் விருந்­தி­ன­ர்களாக ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற இலங்­கை­யி­ருந்து 10 பேரும் சென்­றி­ருந்­தனர். இவர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்­காக இலங்கை ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் நான்கு பேரும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம். பைசல் உட்­பட திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் நான்கு பேரும் மக்கா சென்­ற­துடன் புனித ஹஜ் கட­மை­யி­னையும் நிறை­வேற்­றினர்.

ஹாஜி­களின் நலன்­களை கவ­னிக்கச் சென்ற மேற்­படி எட்டுப் பேருக்­காக ஹஜ் நியத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கோடி ரூபா பணம் வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. எனினும், இவர்­க­ளினால் இலங்கை ஹாஜி­களின் நலன்கள் ஒழுங்­கான முறையில் கவ­னிக்­கப்­பட்­டதா என்­பது இன்று வரை கேள்­விக்­கு­றி­யாகும்.

இதே­வேளை, புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றச் சென்ற அனை­வரும் சவூதி அரே­பிய நேரப்­படி கடந்த 26ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மாலை மினாவில் ஒன்­று­கூ­டினர். இதன்­போது இலங்­கை­யினைச் சேர்ந்த சுமார் 200 ஹாஜிகள் தங்­கு­வ­தற்கு கூடா­ர­மின்றி சிர­மப்­பட்­டுள்­ளனர்.

எனினும், அர­பா­விற்கு செல்ல வேண்டும் என்ற முக்­கி­யத்­து­வத்தில் அவர்கள் அங்­கி­ருந்து அரபா நோக்கி பய­ணித்­து­விட்­டனர். அரபா சென்ற இதே இலங்கை ஹாஜி­க­ளுக்கு அங்கும் கூடார வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இதனால், பெண்கள் உட்­பட பெரு­ம­ள­வி­லான இலங்கை ஹாஜிகள் அர­பாவில் தங்­கு­வ­தற்கு கூடா­ர­மின்றி கடும் வெயி­லுக்கு மத்­தியில் சிர­மப்­பட்­டுள்­ளனர். எவ்­வா­றா­யினும் ஒரு நாள் மாத்­தி­ரமே அர­பாவில் தரி­ப்­ப­தனால் இலங்கை ஹாஜி­களின் ஏனைய கூடா­ரங்­களில் இவர்­க­ளுக்கு இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதனால், குறித்த கூடா­ரங்­களில் இட நெருக்­க­டியும் ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில், அடுத்த மூன்று நாட்கள் தங்­கு­வ­தற்­காக மீண்டும் மினா சென்ற இலங்கை ஹாஜி­களில் சுமார் 200 பேரே தங்­கு­மிட வச­தி­யின்றி அவஸ்­தைப்­பட்­டுள்­ளனர்.
இதனால், மினாவில் இலங்கை ஹாஜிகள் தங்­கிய பகு­தியில் பதற்­ற­மான சூழ்­நி­லை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து, இலங்­கைக்­கான சவூதி தூதுவர் பீ.எம். அம்சா உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து இலங்கை ஹாஜி­களின் பிரச்­சி­னை­களை தீர்த்­து ­வைத்­துள்ளார்.

றியா­தி­லுள்ள இலங்கை தூதுவர் தலை­யீடு செய்யும் வரை இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கப் பெற­வில்லை என்றால் முஸ்லிம் சமூ­கத்தின் சொத்­தான ஹஜ் நிதி­யத்­தி­லி­ருந்து நிதி­யினைப் பெற்­றுக்­கொண்டு ஹாஜி­களின் நலன்­களை கவ­னிக்கச் சென்­ற­வர்கள் அது­வரை என்ன செய்­தார்கள் என்­பது பாரிய கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ளது.
இந்த வருடம் ஹாஜி­களின் மினா மற்றும் அரபா போன்ற இடங்­க­ளுக்­கான போக்­கு­வ­ரத்து மற்றும் தங்­கு­மிட வச­தி­களை மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட 13 நிறு­வ­னங்­களில் ஒன்­றான Al Baith Guests Company யினை இலங்கை ஹஜ் குழு தெரி­வு­செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, மினாவில் தங்­கிய இலங்கை ஹாஜி­க­ளுக்கு காலாவ­தி­யான உண­வினை வழங்­கிய சவூதி நிறு­வ­னத்­திற்கு அந்­நாட்டு அர­சாங்­கத்­தினால் 2,000 சவூதி றியால் தண்டப் பணம் விதிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரிய வரு­கின்­றது.

இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் ஹஜ் முக­வர்­க­ளிடம் இலங்கை ஹாஜிகள் கேட்ட சம­யத்தில் ஹஜ் குழுவின் மீதே முக­வர்கள் விரல் நீட்­டி­யுள்­ளனர். எனினும், சவூதி தூத­ரக அதி­கா­ரிகள் மினாவில் வந்து ஹாஜி­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கேள்வி எழுப்­பிய சம­யத்தில் எந்­த­வொரு ஹஜ் முக­வர்­களும் தங்கள் குழு­விற்கு ஏற்­பட்ட எந்­த­வொரு பிரச்­சினை தொடர்­பிலும் வாய் திறக்­க­வில்லை என ஹாஜிகள் தெரி­வித்­தனர்.

“அடுத்த வருடம் ஹஜ் கோட்டா கிடைக்­குமா? என்ற அச்­சத்­தி­லேயே சவூதி அதி­கா­ரி­க­ளிடம் எதுவும் தெரி­விக்­காமல் ஹஜ் முக­வர்கள் வாய்­மூடி மௌனி­க­ளாக இருந்­தி­ருக்­கலாம்” என யாத்­தி­ரிகர் ஒருவர் தெரி­வித்தார்.

இப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் தெளி­வு­களை பெறு­வ­தற்­காக தற்­போது சவூதி அரே­பி­யா­வி­லுள்ள முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம். பைசலை தொடர்­பு­கொள்ள முயற்­சித்த போதிலும் அது பய­ன­ளிக்­க­வில்லை.

சுற்­றுல்லா விசா­விலும், Free Movement Pass எனும் பேசா விஸாவில் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றச் சென்­ற­வர்­களை இலங்கை ஹஜ் முக­வர்கள் உள்வாங்­கி­ய­மை­யி­னா­லேயே இடப் பற்­றா­குறை ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும், இக்­குற்­றச்­சாட்­டினை முற்­றாக நிரா­க­ரித்த ஜித்­தா­வி­லுள்ள இலங்­கைக்­கான கொன்­சி­யூலர் ஜெனரல் பலாஹ் அல் ஹிப்ஸி மௌலானா, “சவூதி அரே­பி­யாவின் இறுக்­க­மான கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக சுற்­றுல்லா விசாவில் வந்த எவரும் ஹஜ் செய்ய இந்த வருடம் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை” என்றார்.

இலங்­கை­யினைச் சேர்ந்த 107 ஹாஜிகள் மாத்­தி­ரமே மினாவில் கூடா­ர­மின்றி சிர­மப்­பட்­டனர். இப்­பி­ரச்­சினை இலங்கை ஹாஜி­க­ளுக்கு மாத்­தி­ர­மான ஒன்­றல்ல. இந்­தியா, நைஜீ­ரியா மற்றும் மலே­சியா போன்ற நாடு­களின் ஹாஜி­களும் மினாவில் இது போன்ற பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­ய­தாக ஜித்­தா­வி­லுள்ள இலங்­கைக்­கான கொன்­சி­யூலர் ஜெனரல் குறிப்­பிட்டார்.

“எவ்­வா­றா­யினும், இந்த விடயம் எமது கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இலங்கை தூது­வரின் பங்­க­ளிப்­புடன் எமது நாட்டு ஹாஜி­க­ளுக்கு சேவை வழங்­கிய Al Baith Guests Companyயின் தலை­வரை தொடர்­பு­கொண்டு பேச்சு நடத்­தி­யதன் கார­ண­மாக 107 ஹாஜி­க­ளுக்­கான படுக்கை வச­திகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டன” எனவும் அவர் கூறினார்.

அரபா மற்றும் மினாவில் இலங்கை ஹாஜிகள் எதிர்­நோக்­கிய பிரச்­சி­னைகள் தொடர்பில் இலங்­கை­யி­லுள்ள வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் புத்­த­சா­சன சமய விவ­கார அமைச்­சு ஆகியவற்றுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் எதிர்­கா­லத்தில் இது போன்ற பிரச்­சி­னைகள் எற்­ப­டா­தி­ருக்கும் வண்ணம் பல நட­வ­டிக்­கை­களை ஜித்­தா­வி­லுள்ள இலங்­கைக்­கான கொன்­சி­யூலர் ஜெனரல் அலு­வ­லகம் முன்­னெ­டுத்­துள்­ள­தாக பலாஹ் மௌலானா மேலும் தெரி­வித்தார்.

இடநெருக்கடிமிக்க கூடாரத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தங்கியிருந்ததை ரியாதிலுள்ள இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா அவதானித்தபோது…

இதே­வேளை, இலங்கை ஹாஜிகள் எதிர்­நோக்­கிய பிரச்­சினை தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை சமர்ப்­பிக்­கு­மாறு சவூ­திக்­கான இலங்கைத் தூதுவர் பீ.எம். அம்சா அதி­கா­ரி­க­ளுக்கு உத்­தி­ர­விட்­டுள்ளார். எதிர்­கா­லத்தில் இது போன்ற பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வதை தடுக்கும் நோக்­கி­லேயே இந்த அறிக்கை கோரப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
எவ்­வா­றா­யினும், “தகு­தி­யற்­ற­வர்கள் ஹஜ் கமிட்­டியில் நிய­மிக்­கப்­ப­டுள்­ளனர் அல்­லது ஹஜ் ஏற்­பா­டுகள் விட­யத்தில் ஹஜ் கமிட்­டியில் ஊழல் இடம் பெற்­றுள்­ளது. மினா, அரபா கூடா­ரங்­களில் பாரிய இட நெருக்­கடி, தரக் குறை­வான உணவு, முறை­யற்ற போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டுகள் போன்ற கார­ணி­களால் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அவதி” என இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்றச் சென்ற அனு­ரா­த­பு­ரத்­தினைச் சேர்ந்த சஹ்ரான் கரீம் தனது பேஸ்­புக்கில் கடந்த 22ஆம் சனிக்­கி­ழமை பதி­வொன்­றினை மேற்­கொண்­டி­ருந்தார்.

இது போன்ற பல்­வேறு வகை­யான நெருக்கடிகளை புனித ஹஜ் கட­மையின் போது அனு­ப­வித்த ஹாஜிகள், தங்­களின் முறைப்­பா­டு­களை ஜனா­தி­பதி செய­லகம், புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டும்.

இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இதுவரை காலமும் ஹாஜிகளின் முறைப்பாடுகளை விசாரணை செய்து வந்த ஹஜ் குழு மீது இந்த வருடம் ஹாஜிகள் நம்பிக்கை இழந்துள்ளமையினாலேயே சுயாதீன குழுவின் அவசியம் உணரப்பட்டுள்ளது.

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக செல்லும் இலங்கை ஹாஜிகள் ஒவ்வொரு வருடமும் “வியாபார மாபியா” காரணமாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். இதற்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. வெறுமனே விமர்சிப்பதுடன் நிற்காது பாதிக்கப்பட்ட இலங்கை ஹாஜிகள் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தமது முறைப்பாடுகளை எழுத்து மூலம் வழங்க முன்வர வேண்டும். அதன் மூலமே இந்த குளறுபடிகளை எதிர்காலத்தில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.