தனியார் சட்ட திருத்த விவகாரம் : முஸ்லிம் எம்.பி.க்களின் அறிக்கை இன்று நீதியமைச்சரிடம் கையளிப்பு

0 205

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளது இறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில் கைய­ளிக்­க­வுள்­ளனர்.

இன்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய சில முக்­கிய திருத்­தங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டதன் பின்பு திருத்­தங்கள் அடங்­கிய அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.