கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி விவகாரம்: பரீட்சை நடத்துவதற்கான தடை ஜூலை 24 வரை நீடிக்கப்பட்டது

0 232

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­க தாடி விவ­கா­ரத்தினால் ஜூலை 4 வரை பரீட்சை நடாத்தக் கூடாது எனும் நீதிமன்ற உத்தரவு ஜூலை 24 வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தாடி வைத்­தி­ருந்­த­மைக்­காக பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­ப­டாமல் வெளி­யேற்­றப்­பட்­ட­மைக்கு எதி­ராக சுகா­தார பரா­ம­ரிப்பு பீட மாணவன் நுஸைப் மேல் முறை­யீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு நேற்­று­முன்­தினம் மீண்டும் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

பிர­தி­வா­திகள் சார்பில் தோன்­றிய சட்­டமா அதிபர் திணைக்­கள சட்­டத்­த­ரணி பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஏற்­பட்ட நீர்ப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மா­கவே பல்­க­லைக்­க­ழகம் பரீட்­சையை ஒத்­திப்­போட்­டி­ருப்­ப­தா­கவும் இம்­மாத இறு­தியில் நீர்ப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டு­மென்றும் அப்­போது பரீட்­சைகள் நடாத்­தப்­படும் என்றும் மன்­றிற்கு தெரி­வித்தார். அத்­துடன் குறிப்­பிட்ட மனு சம்­பந்­த­மாக ஆவ­ணங்கள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டி இருப்­ப­தனால் கால அவ­காசம் வேண்டும் என நீதி­மன்­றினைக் கோரி­யி­ருந்தார்.

மாணவர் நுஸைப் தரப்பில் ஆஜ­ரா­கிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தரப்பு முன்­வைத்த தமது வாதத்தில் ஆவ­ணங்கள் சமர்ப்­பிக்க கால அவ­காசம் கொடுப்­ப­தாயின் கொடுக்­கப்­படும் அவ­காச காலம் முழு­வதும் பரீட்சை நடத்த மாட்டோம் என பல்­க­லைக்­க­ழகம் எடுத்துக் கொண்ட பொறுப்­பேற்­பினை நீடிக்க வேண்டும் என நீதி­மன்­றத்­திடம் கோரிக்கை விடுத்­தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதி­மன்றம் எதிர்­வரும் ஜூலை 17 அல்­லது அதற்கு முன்­னைய தினங்­களில் வரை­ய­றுக்­கப்­பட்ட ஆட்­சே­ப­னை­களை அரச தரப்பு சமர்ப்­பிக்க அனு­மதி வழங்­கி­யது. அந்த ஆட்­சே­ப­னை­க­ளுக்கு எதி­ராக மறு­மொ­ழி­யினை ஜூலை 24ஆம் திகதி வாதிகள் தரப்பு சமர்ப்­பிக்க வேண்டும் என ஒப்புக் கொள்­ளப்­பட்­டது.

இத­னை­யடுத்து வழக்கு எதிர்­வரும் 27ஆம் திகதி மீண்டும் விசா­ர­ணைக்கு எடுத்­துக்கொள்ளப்­படும் என நிர்ணயிக்கப்பட்டது.

மாணவன் நுஸைப் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணி றுடானி ஸாஹிர் இவ்வழக்கின் அறிவுறுத்தல் சட்டத்தரணியாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.