முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிப்பு

0 243

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா-­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யாடி தயா­ரித்த அறிக்கை எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்­வின்­போது நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­தி­ருத்­தங்கள் அடங்­கிய அறிக்­கையில் 16 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்­டுள்­ள­தா­கவும் இரு உறுப்­பி­னர்கள் இது­வரை கையொப்­ப­மி­ட­வில்லை எனவும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு­வுக்குத் தலைமை வகித்த சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம் பெளஸி தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட சட்­டத்­தி­ருத்த அறிக்­கையில் பெண் காதி­நீ­தி­பதி நிய­மனம், திரு­மண வய­தெல்லை 18, நிபந்­த­னை­க­ளுடன் கூடிய பல­தா­ர­மணம், திரு­ம­ணப்­ப­திவில் ‘வொலி’ மற்றும் மண­ம­களின் கையொப்பம் என்­பன உட்­பட திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவர் கூறினார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் ஒன்று கூடி நடாத்­திய கலந்­து­ரை­யா­ட­லுக்கு அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­கி­ணங்க உல­மா­ச­பையின் இரு உல­மாக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். பெண் காதி நிய­ம­னத்தை உல­மா­சபை எதிர்த்­த­துடன் அதனை ஷரீஆ அடிப்­ப­டையில் அனு­ம­திக்க முடி­யாது எனத் தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

‘தசாப்த கால­மாக இழு­ப­றியில் இருக்கும் நிலையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் தற்­போது விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. எமது அறிக்கை நீதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டதும் தாமதமின்றி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளஸி தெரிவித்தார்.-  Vidivelli

Leave A Reply

Your email address will not be published.