இஸ்லாமிய கொள்கையை பாதுகாப்பதற்காக வாழ்வை அர்ப்பணித்தவர் ஆதம்லெப்பை ஹஸ்ரத்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் கிளைகள் அனுதாபம்

0 234

இஸ்­லா­மிய அடிப்­படைக் கொள்­கையை பாது­காப்­பதில் ஆதம் லெப்பை ஹஸ்­ரத்தின் பங்­க­ளிப்பு மறக்க முடி­யா­த­தாகும் என அவ­ரது மறை­வை­யொட்டி அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா விடுத்­துள்ள அனு­தாபச் செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மட்­டக்­க­ளப்பு மாவட்டம், காத்­தான்­குடி பிர­தே­சத்தைப் பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்­களில் ஒரு­வ­ரான ஆதம் லெப்பை ஹஸ்ரத் என்­ற­ழைக்­கப்­ப­டக்­கூ­டிய அஷ்ஷைக் பி.எம். ஹனீ­பாவின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது.

பல மார்க்கம் மற்றும் சமூகப் பணி­களில் ஈடு­பட்டு வந்த ஆதம் லெப்பை ஹஸ்ரத் தனது 78 ஆவது வயதில் வபாத்­தானார். காத்­தான்­குடி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ஜாமி­அத்துல் ஃபலாஹ் அரபுக் கல்­லூ­ரியின் நீண்ட கால உப தலை­வரும், காத்­தான்­குடி ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்­லூ­ரியின் ஸ்தாபகத் தலை­வரும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா காத்­தான்­குடி பிர­தேசக் கிளையின் மூத்த ஆலோ­ச­க­ரு­மா­வார். ஜம்­இய்­யாவின் காத்­தான்­குடி பிர­தேசக் கிளை ஊடாக இஸ்­லா­மிய அடிப்­படைக் கொள்­கையை பாது­காப்­பதில் அன்­னாரின் பங்­க­ளிப்பு மறக்க முடி­யா­த­தாகும். அன்னார் மூத்த தஃவாப் பணி­யா­ளரும், அகில இலங்கை தப்லீஃ ஜமா­அத்தின் சூரா உறுப்­பி­ன­ரு­மா­வார்கள். மார்க்கப் பணி, தஃவாப் பணி மற்றும் சமூகப் பணி­களில் முன்­னின்று செய­லாற்­றிய அன்னார் பல தசாப்த கால­மாக சமூ­கத்­துக்­காக அய­ராது பாடு­பட்­ட­வர்­களில் ஒருவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வே­ளையில் அன்­னா­ரு­டைய குடும்­பத்­தி­னர்கள், உற­வி­னர்கள், மாண­வர்கள், நண்­பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனை­வ­ருக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் நிறை­வேற்றுக் குழு மற்றும் அனைத்து உல­மாக்கள் சார்­பிலும் ஆழ்ந்த அனு­தா­பத்தைத் தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

அல்­லா­ஹு­த­ஆலா அன்­னா­ரது நல்­ல­மல்­களை அங்­கீ­க­ரித்து, அவர்­களை பரி­சுத்­தப்­ப­டுத்தி, நல்­ல­டி­யார்கள் கூட்­டத்தில் சேர்த்து, ஜன்­னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்­கத்தை வழங்­கு­வா­னாக என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனிடையே, அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா, மருதமுனை மற்றும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா கிளைகள் மற்றும் ராபிததுந் நளீமியின் காத்தான்குடி கிளை என்பனவும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.