உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளுக்கு மிருக வைத்திய சான்றிதழ் அவசியம்

மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்கிறார் பௌஸி

0 168

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உழ்­ஹிய்­யா­வுக்கு மாடுகள் அறுப்­பதில் தடை­யில்லை. ஆனால் உழ்­ஹிய்­யா­வுக்­கான மாடுகள் தோல் கழலை நோய்­தொற்­றுக்­குள்­ளா­காத, ஆரோக்­கிய மாடு­க­ளாக இருக்க வேண்டும்.

மிருக வைத்­திய சான்­றி­தழும் பெற்­றி­ருக்க வேண்டும். மக்கள் இது தொடர்பில் தெளி­வாக இருக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெளஸி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அத்­தோடு மாடுகள், ஆடுகள் ஓரி­டத்­தி­லி­ருந்து மற்றோர் இடத்­துக்கு போக்­கு­வ­ரத்து செய்­யப்­ப­டும்­போது நாட்டில் அமு­லி­லுள்ள மிரு­க­வதை தொடர்­பி­லான விதி­மு­றைகள் கட்­டா­ய­மாகப் பின்­பற்­றப்­ப­ட­வேண்டும். விதி­மு­றை­களை மீறி பெரும் எண்­ணிக்­கை­யி­லான பிரா­ணிகள் வண்­டி­களில் போக்­கு­வ­ரத்து செய்­வது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். இந்த விதி­முறை மீறப்­பட்டால் பொலி­ஸா­ரினால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம். மாடுகள் தடுத்து வைக்­கப்­ப­டலாம்.

மாடுகள், ஆடுகள் போக்­கு­வ­ரத்து செய்­வதற்­கான ஆவ­ணங்கள் பெற்­றி­ருப்­பது கட்­டா­ய­மாகும். உரிய ஆவ­ணங்கள் இருப்பின் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது.
மேலும் மாற்று மதத்­தினர் மாடு­களை கட­வு­ளாக கரு­து­வ­தாலும், மாடுகள் அறுக்­கப்­ப­டு­வதை எதிர்த்து வரு­வ­தாலும் முஸ்­லிம்கள், உழ்­ஹிய்யா கட­மை­யினை மாற்­று­மதத்­தி­ன­ரின் உணர்­வுகள் பாதிக்கப்ப­டாத முறையில் மேற்­கொள்­வதே நல்­லது.

உழ்­ஹிய்யா பிரா­ணி­களின் தோல்கள், எலும்­புகள் போன்ற கழி­வு­களை உரிய வகையில் அப்­பு­றப்­ப­டுத்­து­வதும் கட்­டா­ய­மாகும். ஏனைய மதத்­தி­னர்­களின் உணர்­வு­களை மதித்து உழ்­ஹிய்யா கட­மை­யினை அமை­தி­யான முறையில் நிறை­வேற்­று­வது எமது பொறுப்­பாகும் என்றார்.

உழ்ஹிய்யா பிராணிகளின் போக்குவரத்தின் போது தேவையற்ற தாமதங்கள் ஏற்படுத்த வேண்டாமென தான் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.