மத்திய கிழக்கு நாடுகளுடனான விரிசலுக்கு ஜனாஸா எரிப்பே பிரதான காரணம்

தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அமைச்சரவையிடம் ஐந்து தடவைகள் கோரினேன் என்கிறார் அமைச்சர் அலிசப்ரி

0 248

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்று நோயினால் உயி­ரி­ழந்த உடல்­க­ளை தகனம் செய்ய வேண்­டு­மென்ற அப்போதைய அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு பல நாடு­க­ளு­ட­னான இலங்­கையின் நல்­லு­ற­வு­களில் குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­களின் உறவில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் அலி­சப்ரி ஆங்­கில ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லிலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்­மானம் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு தான் ஐந்து தட­வைகள் அமைச்­ச­ர­வை­யிடம் கோரிக்கை விடுத்­தா­கவும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் தெரி­விக்­கையில்; அதுவோர் கோர­மான சம்­ப­வ­மாகும். அப்­போ­தைய ஒரே முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் எனது வாழ்க்­கையில் மிக மோச­மான சங்கடத்தை எதிர்கொண்டேன். தினமும் நான் இந்­நி­லைக்­குள்­ளானேன். உயி­ரி­ழப்பு ஏற்­பட்டு முஸ்லிம் ஜனா­ஸாக்கள் தகனம் செய்­யப்­பட்ட நாட்கள் எனக்கு நித்­தி­ரை­யற்ற இர­வு­க­ளா­கவே இருந்­தன. அமைச்­ச­ர­வையில் நான் ஐந்து தட­வைகள் இது தொடர்பில் கவனம் செலுத்­தும்­படி வேண்­டினேன்.

இச்­சந்­தர்ப்­பத்தில் அமைச்­ச­ர­வை­கூட கொவிட் 19 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என்ற தீர்­மா­னத்தில் இருந்­தது.

ஆனால் இவ்­வி­வ­காரம் தொடர்­பி­லான நிபு­ணத்­துவ குழு­வொன்று இருந்­தது. அவர்கள் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் நிபு­ணர்­களை விடவும் உயர்ந்­த­வர்­க­ளாக தம்மைக் கரு­தி­யி­ருந்­தனர். இக்­கு­ழு­வுக்கு சன்ன பெரே­ராவும் பேரா­சி­ரியர் மெத்­திக்கா பெரே­ராவும் தலைமை வகித்­தனர். அவர்கள் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­வதை எதிர்த்­தனர். அவர்­களின் தீர்­மானம் எவ­ருக்கும் பய­னுள்­ள­தாக அமை­ய­வில்லை.

சுகா­தார நிபுணர் குழுவின் தீர்­மானம் பல நாடு­க­ளு­ட­னான, குறிப்­பாக மத்­திய கிழக்கு நாடு­க­ளு­ட­னான இலங்­கையில் நட்­பு­றவில் பாரிய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யது. உண்­மையில் எங்­க­ளது உற­வு­களில் விரிசல் ஏற்­பட்­டன. எமது நாடு மாத்­தி­ரமே கொவிட் 19 நோய்த்­தொற்­றுக்­குள்­ளாகி இறந்த முஸ்லிம் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­த­வற்கு அனு­ம­திக்­க­வில்லை. எமது தீர்­மா­னத்தை இஸ்­லா­மிய நாடு­களின் கூட்டமைப்பு (OIC) எதிர்த்­தது. கண்­டித்­தது. UNHRC அமைப்பும் கண்­டித்­தது. கொவிட் மர­ணங்­களின் இறு­திக்­கி­ரி­யைகள் தொடர்பில் உலக சுகா­தார ஸ்தாபனம் தெளி­வான வழி­காட்­டல்­களை வழங்­கி­யி­ருந்­தது. அதனையும் மதிக்காத இலங்கையின் தீர்­மானம் எமக்­கி­டை­யி­லான உற­வு­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது என்றார்.

பாதிக்கப்பட்ட உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது குறித்து அவர் தெரி­விக்­கையில்; அண்­மையில் இலங்கை பல நாடு­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி பாதிப்­புக்­குள்­ளான உற­வு­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் கட்டார் போன்ற நாடு­க­ளுடன் நல்­லு­ற­வினைப் பலப்­ப­டுத்தி வரு­கிறோம். சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் 2021 இல் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டார். நான் இவ்­வ­ருடம் சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் மேற்­கொண்டேன். ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் வெளி­வி­வ­கார அமைச்­சரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ளு­மாறு நாம் அழைப்பு விடுத்­துள்ளோம்.

அவர் விஜயம் செய்வதாக உறு­தி­ய­ளித்­துள்ளார். ஈரான், மெரோக்கோ போன்ற நாடு­க­ளுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு எனக்கு அழைப்பு கிடைத்துள்ளது. நான் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். நாங்கள் நாடுகளுக்கிடையிலா எமது உறவுகளைப் பலப்படுத்தி வருகிறோம். பல நாடுகளுக்கிடையிலான எமது நல்லுறவுனை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நாம் கடந்த வருடத்தைவிட இவ்விடயத்தில் முன்னேற்றம் காணுவோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.