உழ்ஹிய்யா பிராணிகளின் ஆரோக்கியத்தை உறுதிசெய்க

சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைகளை கடைப்பிடிக்குமாறும் உலமா சபை வலியுறுத்து

0 290

(எஸ்.என்.எம்.சுஹைல்)
நாட்டின் சில பகு­தி­களில் மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள ­நி­லையில், உழ்­ஹிய்யா விட­யத்தில் சுகா­தார திணைக்­கள ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் கடை­பி­டிப்­ப­துடன் உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களின் ஆரோக்­கி­யத்தை உறுதி செய்­து­கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பத்வா குழுவின் செய­லாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் ஆகியோர் வெளி­யிட்­டுள்ள இவ்­வ­ருட உழ்­ஹிய்யாப் பிரா­ணிகள் தொடர்­பான வழி­காட்டல் குறித்த அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, உழ்­ஹிய்யா என்­பது இஸ்­லாத்தில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு சுன்னத் ஆகும். ஒட்­டகம், மாடு மற்றும் ஆடு ஆகிய கால்­ந­டை­களில் இருந்தே உழ்­ஹிய்யா நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

\உழ்­ஹிய்­யா­வாக நிறை­வேற்­றப்­படும் பிரா­ணி­களில் எமது நாட்டில் மாடு மற்றும் ஆடு ஆகிய இரண்­டுமே உள்­ளன. இப்­பி­ரா­ணிகள் உழ்­ஹிய்­யா­வாகக் கொடுக்­கும்­போது மார்க்கம் குறிப்­பிட்­டுள்ள நிபந்­த­னை­களைக் கவ­னித்துக் கொள்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். அவற்றில் மாடு இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யாகி இருப்­ப­துடன் செம்­மறி ஆடு ஒரு வருடம் பூர்த்­தி­யாகி இருப்­ப­துடன் எமது நாட்டில் உள்ள (செம்­மறி ஆடு அல்­லாத) ஏனைய ஆடுகள் இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யாகி இருப்­பதும் கட்­டா­ய­மாகும்.

அத்­துடன் இப்­பி­ரா­ணிகள் தெளி­வான குருடு, தெளி­வான நோய் (அதா­வது குறித்த பிரா­ணியின் இறைச்­சியை குறைக்­கக்­கூ­டிய அளவு அல்­லது மெலி­வுக்கு கார­ண­மாக உள்ள நோய்) தெளி­வான முடம் போன்ற குறை­களை விட்டும் நீங்கி இருப்­பதும் அவ­சி­ய­மாகும்.
தற்­போது எமது நாட்டின் சில பகு­தி­களில் மாடுகள் தோல் கழலை நோயினால் (Lumpy Skin Disease) பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. எனவே, உழ்­ஹிய்யா விட­யத்தில் சுகா­தார திணைக்­க­ளத்தின் ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் அவ­சியம் கடை­பி­டிப்­ப­துடன் உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களின் ஆரோக்­கி­யத்தை உறுதி செய்­து­கொள்ள வேண்டும்.

இன்னும், இந்­நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாடுகள் உண­வுக்கு உகந்­த­தல்ல என சுகா­தாரத் துறை­யினர் உறு­திப்­ப­டுத்திக் கூறு­வார்­க­ளாயின் அப்­ப­டி­யான நோய்­வாய்ப்­பட்­டுள்ள மாடு­களை உழ்­ஹிய்­யா­வாகக் கொடுப்­பதைத் தவிர்த்து, நோயற்ற மாடு­களை அல்­லது ஆடு­களை உழ்­ஹிய்­யா­வாகக் கொடுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்து கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.