பெண் காதி நீதிபதி நியமன விவகாரம்: உலமா சபையும் நானும் மோதிக் கொள்வது அழகல்ல

முஸ்லிம் எம்.பி.க்களுடனான சந்திப்பில் முர்சித் முளப்பர் கூறியதையே நானும் கூறினேன் என்கிறார் ரவூப் ஹக்கீம்

0 313

ஏ.ஆர்.ஏ.பரீல்

எமது நாட்டில் அமு­லி­லி­ருக்கும் 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தசாப்த காலத்­தினையும் கடந்து சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றது.

2009ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­யினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான குழு தனது அறிக்­கையை 10 வரு­டங்கள் கடந்தே சமர்ப்­பித்­தி­ருந்­தது.
குழுவின் தலை­வ­ராக தற்­போ­தைய ஓய்வு நிலை உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் பதவி வகித்தார். குறிப்­பிட்ட குழு­விலும் சட்ட திருத்தம் தொடர்பில் கருத்து முரண்­பா­டு­க­ள் ஏற்­பட்­டன. இதன்­கா­ர­ண­மாக குழு இரண்­டாகப் பிள­வு­பட்­டது.

சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் உறுப்­பி­னர்­களில் ஒரு பிரி­வினர் இணைந்து இருந்­தனர். இந்தத் தரப்­பிலே அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களும் இருந்­தனர். ஏனையோர் தலைவர் சலீம் மர்­சூ­புடன் இணைந்து செயற்­பட்­டனர்.

குழுவின் சிபா­ரி­சு­க­ளுக்­கான அறிக்கை தனித்­த­னி­யாக இரு தரப்­பி­னாலும் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அதன்­பின்பு திருத்தச் சிபா­ரி­சுகள் முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. முன்னாள் நீதி­ய­மைச்சர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் திருத்தம் தொடர்­பாக ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு குழு­வொன்­றினை நிய­மித்­தி­ருந்தார்.

அக்­கு­ழுவின் திருத்தச் சிபா­ரி­சு­களே தற்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு தற்­போது சட்ட வரை­புக்குத் தயா­ராக உள்­ளது.

சட்­டத்­தி­ருத்­தத்தில் பல விட­யங்­களில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­போ­திலும் பெண் காதி நிய­மனம் தொடர்பில் தற்­போது சர்ச்சை கிளம்­பி­யுள்­ளது.
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பெண் ­காதி நீதி­பதி நிய­ம­னத்தை ஏற்க மறுத்­துள்­ளது.

ரவூப் ஹக்­கீ­முடன் தொலைக்­காட்சி
நேர்­காணல்
பாராளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் அண்­மையில் கெப்­பிட்டல் தொலை­க்காட்சி சேவைக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் ‘பெண்களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மித்தல்’ தொடர்பில் தெரி­வித்த கருத்தே தற்­போது அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.

நேர்­கா­ணலில் ‘விடி­வெள்­ளி’­ பத்­தி­ரிகை செய்­தியில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்­தி­ருத்தம் தொடர்பில் வெளி­வந்­தி­ருந்த செய்தி பற்றி ரவூப் ஹக்­கீ­மிடம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

சட்­டத்­தி­ருத்­தத்தில் ‘முஸ்லிம் என்ற பதம் நீக்­கப்­பட்­டுள்­ளமை பற்றி வின­வப்­பட்­டது. முஸ்லிம் என்ற பதம் நீக்­கப்­பட்­டமை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் பெண்­க­ளுக்கு சம உரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்­ப­தா­கவும் தெரி­வித்தார். மேலும் பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­பதில் ஒரு­மித்த கருத்­துக்கு வந்­துள்­ள­தா­கவும் கூறினார். ஆரம்­பத்தில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்கும் விட­யத்தில் மாற்­றுக்­க­ருத்­தினைக் கொண்­டி­ருந்­தாலும் எதிர்ப்பு தெரி­வித்து வந்­தாலும் தற்­போது உடன்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இத­னையே ஜம் இய்­யத்துல் உலமா சபை எதிர்த்­துள்­ளது. ரவூப் ஹக்கீம் பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிப்­பது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மாவின் நிலை­ப்பாட்­டுக்கு மாற்­ற­மான உண்­மைக்குப் புறம்­பான கருத்தை தெரி­வித்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தி­யுள்­ளது. இதற்கு ரவூப் ஹக்கீம் மன்­னிப்பு கோர வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­துள்­ளது.

உலமா சபை அறிக்கை
‘முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கு பல தட­வைகள் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். ஆனால் அவர் மீண்டும் தவறு செய்­கிறார். இது விட­யத்தில் ஜம் இய்­யத்துல் உலமா சபையின் நிலைப்­பாட்­டுக்கு மாற்­ற­மான கருத்தை உலமா சபையின் கருத்து, நிலை­பாடு எனக் கூறி­யுள்ளார்’. என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் ஊட­க­மொன்­றுக்கு தெரி­வித்­துள்ள கருத்து தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; “முன்னாள் அமைச்­சரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சகோ­தரர் ரவூப் ஹக்கீம் பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிப்­பது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மாவின் நிலைப்­பாட்­டுக்கு மாற்­ற­மான உண்­மைக்கு புறம்­பான கருத்­தொன்றைக் கூறிய விடயம் சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கி­றது. இதனை ஜம் இய்யா வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.
ஜம் இய்­யா­வா­னது ஷாபிஈ மத்ஹப் உட்­பட நான்கு இமாம்­க­ளு­டைய கருத்­து­களை தெளி­வாக விளங்கி வைத்­திருப்­ப­தோடு ஷரீ­ஆவின் நிலைப்­பா­டு­களில் எப்­போதும் உறு­தி­யா­கவே இருந்து வரு­கி­றது. முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்தம் தொடர்பில் ஜம் இய்­யாவின் நிலைப்­பாடு அதன் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தள பக்­கத்தில் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக சகோ­தரர் ரவூப் ஹக்­கீ­முக்கு தனிப்­பட்ட முறையில் கடிதம் அனுப்­பப்­பட்­டுள்­ள­தோடு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பாக பல தட­வைகள் ஜம் இய்­யாவின் நிலை­ப்பாடு அவ­ருக்குத் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

2022.12.23 ஆம் திகதி ஜம் இய்­யாவின் தலை­மை­ய­கத்­துக்கு அவர் வருகை தந்­த­போது ஜம் இய்யா தனது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­தியும் அவர் தொடர்ந்து ஜம் இய்­யா­வுடன் முரண்­பட்ட கருத்­துக்­களைக் கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­தோடு ஜம் இய்­யாவின் பிர­தி­நி­திகள் குழு­வொன்று அவரை அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து ‘Proposal for the Muslim Marriage & Divorce ACT Shariah Perspective’ எனும் தலைப்பில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டம் தொடர்­பான மார்க்க ரீதி­யான வழி­காட்­டல்­க­ளையும் ஜம் இய்­யாவின் நிலைப்­பாட்­டையும் எழுத்து மூலம் சமர்ப்­பித்து தெளி­வாக அவ­ருக்கு விளங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மேலும் 2023.06.07 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்­றிலும் பெண் காதி நிய­மனம் சம்­பந்­த­மான ஜம் இய்­யாவின் நிலைப்­பாட்டை அவ­ருக்கும் ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜம் இய்யா தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்­நி­லையில் ஜம் இய்யா கூறி­ய­தாக உண்­மைக்கு புறம்­பான கருத்­தொன்றை நேரலை நிகழ்ச்­சி­யொன்றில் கூறி­யி­ருப்­ப­தை­யிட்டு ஜம் இய்யா தனது அதி­ருப்­தி­யையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளதோடு உடனடியாக அவர் தனது கருத்தை வாபஸ் பெற்று உண்மை நிலைப்­பாட்­டினை ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும் என ஜம் இய்யா வேண்­டிக்­கொள்­கி­றது’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உலமா சபையின் இளைஞர்
விவ­கார செய­லாளர்
பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்க வேண்டும் என்­பதில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை உடன்­ப­ட­வில்லை. ஆத­ரிக்­க­வில்லை என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் நிறை­வேற்றுக் குழு உறுப்­பி­னரும் இளைஞர் விவ­கார செய­லா­ள­ரு­மான அஷ்ஷெய்க் ரிபா­ ஹசன் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள் என்போர் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்தம் தொடர்பில் எம்­முடன் பல தட­வைகள் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறார்கள். ரவூப் ஹக்­கீமும் பேசி­யி­ருக்­கிறார். அவரை தனிப்­பட்ட ரீதியில் சந்­தித்தும் பேசி­யி­ருக்­கிறோம்.

பேசும் போது கூட அவர் எங்­க­ளது கருத்­து­க்கு முரண்­பா­டான கருத்­திலே இருந்திருக்­கிறார்.

பெண் காதி­நி­ய­மனம் தொடர்பில் அன்று முதல் இன்று வரை எமது நிலைப்­பாடு உறு­தி­யா­கவே உள்­ளது. பெண்­களை காதி­க­ளாக நிய­மிக்­கக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பாடு. எமது நிலைப்­பாட்­டினை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், நீதி­ய­மைச்சர் மற்றும் பொது மக்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருக்கிறோம்.

எங்கள் நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­ற­மு­மில்லை. இதனை நாம் அறிக்­கை­யா­கவும் வெளி­யிட்­டுள்ளோம்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் விளக்கம்
அண்­மையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பெளசி தலை­மையில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­ட­தி­ருத்தம் தொடர்பில் நடாத்­திய பேச்­சு­வார்த்­தையில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள் இருவர் கலந்து கொண்­டனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அழைப்பின் பேரில் ஜம் இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் அஷ்ஷெய்க் முர்சித் முளப்பர் மற்­று­ம் கலா­நிதி அஸ்வர் ஆகிய இரு­வரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள் – உலமா சபையின் குறிப்­பிட்­ட ­வி­வ­காரம் தொடர்­பி­லான நிலைப்­பாட்­டினைத் தெளி­வு­ப­டுத்­தினர். அது தொடர்­பான ஆவ­ண­மொன்­றி­னையும் அவர்கள் தயா­ரித்­தி­ருந்­தனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் 90 வீத­மா­ன திருத்தங்கள் நிர்­வா­கத்­துடன் தொடர்­பு­பட்­டவை. 10 வீத­மா­னவை ஷரீ­ஆ­வுடன் தொடர்­பு­பட்­ட­வை­யாகும்.

சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் நிலைப்­பாடு தொடர்பில் ‘விடி­வெள்ளி’ உலமா சபை­யிடம் வின­வி­யது. உலமா சபையின் முக்­கிய நிர்­வாகி ஒருவர் கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் பெண்­களின் வய­தெல்லை 18 ஆக அதி­க­ரிக்க வேண்­டு­மென்­பதில் உலமா சபை உடன்­பட்­டுள்­ளது. அதே­வேளை 16–18 வய­துக்­குட்­பட்ட பெண்­களை திரு­மணம் செய்யும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்டால் காதி நீதி­ப­தியின் அனு­ம­தி­யு­டன் திரு­மணம் செய்­யலாம்.

திரு­மணப் பதிவில் ‘வொலி’ கட்­டா­ய­மாக கையொப்­ப­மி­ட­வேண்டும். அத்­தோடு திரு­ம­ணப்­ப­திவில் மண­ம­களின் கையொப்­பமும் கட்­டா­ய­மாகும்.

பல­தார மணம் நிபந்­த­னை­க­ளுடன் காதி­நீ­தி­வானின் அனு­ம­தி­யுடன் செய்து கொள்­ளப்­ப­டலாம் என்ற திருத்­தங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­தோடு ‘பஸஹ்’­ வி­வா­க­ரத்து சில சம­யங்­களில் கண­வனின் வற்­பு­றுத்­தலின் பேரில் தாக்கல் செய்­யப்­ப­டு­கி­றது.

கணவன் ‘தலாக்’ வழக்கு தாக்கல் செய்தால் மத்தாஹ் வழங்க வேண்­டி­யேற்­படும் என்­பதால் அவர் மனை­வியை பஸஹ் விவா­க­ரத்­துக்கு வற்­பு­றுத்­து­கிறார். இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­க­ளிலும் கணவன் மனை­விக்கு மத்தாஹ் வழங்­க­வேண்டும் என்ற திருத்­தமும் உலமா சபையால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தில் உலமா சபை உடன்­ப­ட­வில்லை. ஷாபி மத்­ஹபின் அடிப்­ப­டையில் பெண் காதி ­நி­ய­ம­னத்­துக்கு இணங்க முடி­யாது என்ற நிலைப்­பாட்­டினைத் தெரி­வித்­தி­ருக்­கிறோம்.

ஒரு மனி­த­னுக்கு கருத்து சுதந்­தி­ரத்தை மார்க்கம் தந்­தி­ருக்­கி­றது. இத­னா­லேயே உல­மாக்­க­ளுக்­கி­டையில் கருத்து வேறு­பாடு இருக்­கி­றது. கருத்து சுதந்­திரம் இருக்­கி­றது என்­ப­தற்­காக உலமா சபை உடன்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கி­றது என்று தவ­றான கருத்­தினைத் தெரி­விப்­பது சுதந்­தி­ர­மல்ல என்றார்.

ரவூப் ஹக்கீம் எம்.பி.யின் விளக்கம்
உல­மா­ ச­பையின் ஆரம்­ப­நி­லைப்­பாட்­டி­லி­ருந்து ஒரு மாற்றம் வந்­தி­ருப்­ப­தாக நான் சொன்னேன். இதனை இவ்­வ­ளவு பெரிய சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ர­மாக மாற்­றி­யி­ருப்­பது அர­சியல் ரீதி­யாக இலாபம் தேடு­கின்ற சில சக்­தி­களின் வேலை­யாகும்.

என்­னையும் உலமா சபை­யையும் மோத வைத்து கூத்­துப்­பார்க்க நினைக்­கி­றார்­களோ தெரி­யாது. அதற்கு நான் தயா­ரில்லை. உலமா சபை கண்­ணி­ய­மான நிறு­வனம். அதன் அந்­தஸ்து பாது­காக்­கப்­ப­ட­ வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ரவூப் ஹக்கீம் தொலைக்­காட்சி சேவை­யொன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் ‘பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிப்­பதற்கு’ உலமா சபை இணங்­கி­யுள்­ளது என்று தெரி­வித்த கருத்து உல­மா­ச­பை­யினால் மறுக்­கப்­பட்ட நிலையில் தனது நிலைப்­பாட்­டினை ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், உண்­மையில் நான் தெளி­வாக சொல்ல வேண்­டிய விடயம் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை என்­பது எமது நாட்டு முஸ்­லிம்­களின் மார்க்க ரீதி­யான விட­யங்­களில் உச்­சஸ்­தா­னத்தில் இருக்கும் ஒரு தாபனம். அதனைப் பல­வீ­னப்­ப­டுத்த எந்த நட­வ­டிக்­கைக்கும் நாம் துணை­போய்­வி­டக்­கூ­டாது. ஆன்­மீக விவ­கா­ரங்­களில் எங்­க­ளுக்கு வழி­காட்­டு­கின்ற பாரிய பொறுப்பு அவர்­க­ளுக்கு இருக்­கி­றது.

அத்­தோடு அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளான நாங்­க­ள் ஜம் இய்­யத்துல் உல­மா­வுடன் செய்­கின்ற கலந்­து­ரை­யா­டல்­களில் ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யாடல் நடை­பெ­று­கின்ற விட­யங்­களில் சில­நேரம் சில விட­யங்­களில் கருத்து முரண்­பா­டு­களும் இருக்­கலாம். ஆனால் அவற்றை பொது­வெ­ளியில் போட்டு நடுச்­சந்­தியில் சட்டி உடைப்­பது என்­பது அவ்­வ­ளவு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. இதற்கு நான் எந்த விதத்­திலும் துணை­போக விரும்­ப­வில்லை.

ஜம் இய்­யத்துல் உலமா அமைப்பின் சார்பில் ஒரு­சிலர் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருப்­பது எனக்கு மிகவும் கவ­லை­யாக இருக்­கி­றது.

அவர்கள் சார்பில் எனக்கு உத்­தி­யோ­க­பூர்வ கடி­த­மொன்­றையும் அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார்கள். இதற்கு மறுப்பு அறிக்கை ஒன்­று­வி­ட­ வேண்டும் என்று கேட்­டி­ருக்­கி­றார்கள். அதை நான் பொறு­மை­யாக இன்னும் ஆலோ­சனை செய்து கொண்­டி­ருக்­கிறேன்.

உண்­மையில் நடந்­தது இதுதான். கடந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது ஜம் இய்­யத்துல் உல­மாவின் சார்பில் அஷ்ஷெய்க் முர்சித் முளப்­பரும், கலா­நிதி அஸ்­வரும் வந்­தி­ருந்­தார்கள். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான அந்தச் சந்­திப்பில் அவர்கள் ஆங்­கி­லத்தில் கடி­த­மொன்­றினைத் தயா­ரித்து எடுத்து வந்­தி­ருந்­தார்கள். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் அவர்­க­ளது ஆலோ­சனை அடங்­கிய ஒரு பெரிய மகஜர் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தது. அதனை முழு­மை­யாக நாம் ஆராய்ந்து பல விட­யங்­களில் இணக்­கப்­பாட்­டினை கண்­டி­ருந்தோம்.

காதி நிய­மனம் தொடர்­பாக நீண்­ட­கா­ல­மாக இருந்து வரு­கின்ற இந்த சர்ச்­சையின் விட­யத்தில் பெண்கள் காதி­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வதில் மார்க்­கத்தில் இட­மில்லை என்ற தொனிப்­பட அவர்­க­ளு­டைய அந்­தப்­பந்தி அமைந்­தி­ருந்­தது. நான் அதனை வாசித்­து­விட்டு நான் முர்சித் முளப்­ப­ரிடம் கேட்ட கேள்வி, இந்த விவ­காரம் தொடர்பில் சில மாற்­றுக்­க­ருத்­துக்­களும் இருக்­கின்­றன. அந்த மாற்­றுக்­க­ருத்­து­களை மீண்டும் பரி­சீ­லிப்­பது நல்­லது. அதிலும் குறிப்­பாக முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக உள்ள நாடு­களில் காதி ­நீ­தி­ப­தி­க­ளாக பெண்கள் இருக்­கின்ற விட­யத்தை கூறினேன். குறிப்­பாக இந்­தோ­னே­சியா, மலே­சியா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் கடந்த பல வரு­டங்­க­ளாக நீதி­ப­தி­க­ளாக பெண்­களை அனு­ம­தித்­தி­ருக்­கி­றார்கள். எனவே இந்த நிலையில் இவ்­வி­வ­கா­ரத்தில் ஏன் இன்னும் பிடி­வா­த­மாக நீங்கள் இருக்க வேண்டும். இதில் மாற்­றங்­களைச் செய்ய முடி­யாதா? என்று வின­ய­மாக கேள்­வி­களை கேட்டேன். அதற்கு அவர் மார்க்க ஷரீ­அத்தின் அடிப்­ப­டையில் பெண்கள் நீதி­ வ­ழங்­கு­கின்ற விட­யத்தில் நீதி­ வ­ழங்­கு­வ­தற்கு அங்­கீ­கா­ரமே இல்லை என்­பதை உறு­தி­யாக என்­னிடம் கூறினார்.

நான் திரும்பத் திரும்ப இந்த விட­யத்தை அவ­ரிடம் கேட்­ட­போது உண்­மைதான் முஸ்லிம் நாடு­களில் பெண்கள் நீதி­ப­தி­க­ளாக இருக்­கி­றார்கள். ஆனால் இந்த விட­யத்தில் ஒரு விட்­டுக்­கொ­டுப்பைச் செய்­வ­தற்­காக இப்­ப­டித்தான் அமைய வேண்டும் என்றார். அது எப்­படி என்று நான் கேட்­ட­போது அதில் ஆண்கள் மட்டும் தான் காதி­நீ­தி­ப­தி­க­ளாக இருக்க வேண்டும் என்ற விட­யத்தை எடுத்து விடுவோம். அப்­ப­டி­யென்றால் காதி­ நீ­தி­பதி பத­விக்கு பெண்­களும் விண்­ணப்­பிக்­கலாம் என்­ப­துதான் அதன் அர்த்தம். இந்த விட­யத்தில் மாத்­திரம் விட்­டுக்­கொ­டுப்­புக்­காக உடன்­ப­டலாம். தயா­ராக இருக்­கிறோம் என்றார். இதுவோர் நல்ல விடயம் என்றேன்.

முன்பு 2021 ஆம் ஆண்டு ஜம் இய்­யத்துல் உலமா முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் சர்ச்­சைக்­கு­ரிய விட­யத்தில் அவர்­க­ளது நிலைப்­பாடு தொடர்பில் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்­தது.

அதில் காதி­ நீ­தி­மன்­றங்­களில் ஜுரர்­க­ளாக இரண்டு பெண்­க­ளையும் ஒரு ஆணையும் நிய­மித்­துக்­கொள்­ளலாம். விவா­கப்­ப­தி­வா­ளர்­க­ளா­கவும் பெண்­க­ளையும் நிய­மிக்­கலாம். இதனை முதற்­கட்­ட­மாகச் செய்வோம். அதற்குப் பின்பு பெண்­களை காதி­ நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­பது பற்றி பரி­சீ­லிப்போம் என்று உத்­தி­யோகபூர்­வ­மாக அவர்­க­ளது அறிக்­கையில் சொல்­லி­யி­ருக்­கி­றார்கள். கட்டம் கட்­ட­மாக இதனைச் செய்வோம் என்று கூறி­யி­ருந்­தார்கள்.

நான் புரிந்து கொண்ட அடிப்­ப­டையில் இதுதான் உண்­மையில் நடந்த விவ­காரம். அதன் பின்பு இப்­படி நடக்­கவே இல்லை என்று கூறு­வதில் அவர்­க­ளுக்­குத்தான் தெளிவு இருக்­க­வேண்டும். என்னைப் பொறுத்­த­மட்டில் என்­னு­டைய புரிதல் இப்­ப­டித்தான் இருந்­தது. என்­னுடன் சேர்ந்து இதர பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இருந்­தார்கள். அவர்­க­ளி­டமும் இந்த விடயம் பற்றி கேட்­கப்­ப­டலாம். இது ஒரு பெரிய முரண்­பாட்­டுக்­கு­ரிய விட­ய­மாக அதிலும் ஜம் இய்­யத்துல் உல­மாவும் முஸ்லிம் அர­சியல் கட்­சியும், ஒரு தலை­மையும் மோதிக்­கொள்­வதை தீனி­போ­டு­வ­தற்­காக அல்­லது பெரிய சர்ச்­சை­யாக வளர்ப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. அதனை நான் விரும்­பு­ப­வ­னு­மல்ல.

ஜம் இய்­யத்துல் உல­மாவின் நிலை­ப்பாடு இது­வாக இருந்தால் அதனை அவர்கள் தெரி­விப்­ப­தற்­கான உரிமை அவர்­க­ளுக்கு இருக்­கி­றது. என்னை பொறுத்­த­மட்டில் முர்சித் முளப்பர் இது பற்றி திட்­ட­வட்­டமாகக் கூறினார். இதுதான் எமது நிலைப்­பாடு. இருந்­தாலும் முஸ்லிம் நாடு­களில் இந்த மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கின்ற கார­ணத்­தினால் நாங்கள் ஒரு நெகிழ்­வுப்­போக்கை செய்வோம் என்ற உடன்­பாடு வந்­தி­ருந்­தது. அதைத் தான் நான் வர­வேற்­றேன். அதைத்தான் தொலைக்­காட்சி நேர்­கா­ண­லிலும் சொல்­லி­யி­ருந்தேன்.

உலமா சபையின் ஆரம்ப நிலைப்­பாட்­டி­லி­ருந்து ஒரு மாற்றம் வந்­தி­ருப்­ப­தாக நான் சொன்னேன். இதனை இவ்­வ­ளவு பெரிய சர்ச்­சைக்­குரிய விவ­கா­ர­மாக மாற்றி­யி­ருப்­பது என்­பது அர­சியல் ரீதி­யாக இலாபம் தேடு­கின்ற சில சக்­திகள் வேண்­டு­மென்றே என்­னையும் உலமா சபை­யையும் மோத வைக்க வேண்டும். மோத வைத்து கூத்­துப்­பார்க்­க­ வேண்­டு­மென்று நினைக்­கி­றார்­களோ தெரி­யாது.அதற்கு நான் ஒரு­போதும் தயா­ரில்லை. ஜம் இய்­யத்துல் உலமா ஒரு கண்­ணி­ய­மான நிறு­வனம். அதன் அந்­தஸ்து பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். கருத்­து­வே­று­பா­டுகள் இருந்தால் பேசித் தீர்வு காணப்­படல் வேண்டும். ஜம்இய்­யத்துல் உலமாவும் இவ்விடயத்தில் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பது எனது அவாவும் ஆசையுமாகும்.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் புதிதாக தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் போது, அதில் காதிமார்களாக ஆண்களையே நியமிப்பதாக இருந்தால் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரையின் கீழ் , ஆண் பெண் பாகுபாடு காட்டப்படுவதை வைத்து அந்த புதிய சட்டம் சவாலுக்கு உட்படுத்தப்படலாம். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், உயர்நீதிமன்றம் அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அதற்கு சர்வஜன வாக்கெடுப்பும் தேவைப்படும் என நிபந்தனை விதித்தால், பிரஸ்தாபச் சட்டம் சாத்தியமாகாமல் போகும்.

இதன் பரந்­து­பட்ட ஒரு விளை­வாக (Wider Implication) முஸ்லிம் பெண்கள் நீதி யர­சர்­க­ளா­கவோ, நீதி­ப­தி­க­ளா­கவோ, நீதித்­து­றையில் உயர் பத­வி­க­ளையோ வகிக்க முடி­யாத நிலை­மையும் ஏற்­படும் அபா­யமும் உண்டு.

கருத்து வேற்­று­மைகள் ஏற்­படும் பட்­சத்தில், உல­மாக்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பரஸ்­பரம் பேச்­சு­வார்த்­தையின் மூலம் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்தி இணக்கத் தீர்வை எட்­டு­வதே சிறந்­தது.

எவரும் இவற்றை பொது­வெ­ளியில் விமர்­சித்து, புர­ளியைக் கிளப்பி,குடுமிச் சண்டை பிடிப்­பதால் பய­னில்லை.

நான் நீதி அமைச்­ச­ராக இருந்த காலப்­ப­கு­தியில், எனக்கு முன்­னரே அதற்­காக நீதி­ய­ரசர் சலீம் மர்ஸூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்டிருந்த குழு இரண்­டாகப் பிரிந்­தி­ருந்த நிலையில், இணக்­கப்­பாட்டை எட்ட முடி­யா­ததால், அதன் தலை­வரை மூன்று முறை கேட்­டுக்­கொண்டும் அதனை நிறை­வேற்ற முடி­யாமல் போய்­விட்­டது கவ­லைக்­கு­ரி­யது.
ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் காலத்தில் இதனை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான வாய்ப்பை நாங்கள் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

ஷரீ­ஆவை அனு­ச­ரிப்­ப­தோடு, இஜ்­திஹாத் அடிப்­ப­டை­யிலும் இந்த விவ­காரம் சுமு­க­மாக அணு­கப்­பட்டு தீர்த்து வைக்­கப்­ப­டு­வ­தையே வர­வேற்­கிறேன்.

சமூ­கத்தின் நலன் கருதி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் நாங்களும் இணைந்து பயணிப்பதே ஆரோக்கியமானது என்றார் மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.