ஹஜ் குழுவுக்கு எதிராக முஸ்லிம் சமய திணைக்கள உத்தியோகத்தர்கள் புத்தசாசன அமைச்சரிடம் முறைப்பாடு

0 262

(றிப்தி அலி)
2023ஆம் ஆண்­டுக்­கான அரச ஹஜ் குழு­விற்கு எதி­ராக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் புத்­த­சா­சன மற்றம் சமய விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­விடம் எழுத்­து­மூல முறைப்­பா­டொன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வரு­டத்­திற்­கான ஹஜ் ஏற்­பாட்டில் குறித்த குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்­பி­லான முறைப்­பாடே இவ்­வாறு அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பணி­யாற்­று­கின்ற சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட தரங்­க­ளி­லுள்ள பல உத்­தி­யோ­கத்­தர்கள் கையெ­ழுத்­திட்டே இந்த முறைப்­பாடு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்ளச் செல்லும் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஒவ்­வொரு வருடம் சவூதி அரே­பியா செல்­வது வழ­மை­யாகும். எனினும், கொவிட் பரவல் மற்றும் நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி ஆகி­யன கார­ண­மாக 2019ஆம் ஆண்டின் பின்னர் முதற் தட­வை­யாக இந்த வரு­டமே அந்த வாய்ப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளது.

இரு ஆண் உத்­தி­யோ­கத்­தர்­களும் பெண் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக பெண் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் இவ்­வாறு சவூதி அரே­பி­யா­வுக்கு அனுப்­பப்­ப­டு­வது வழக்­க­மாகும். எனினும் இம் முறை பெண் உத்­தி­யோ­கத்­த­ருக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­ப­டாது மூன்று ஆண் உத்­தி­யோ­கத்­தர்­களே அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக குறித்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதனால் பெண் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்கு இம்­முறை யாரு­மில்லை என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பாரம்­ப­ரி­ய­மாக வரு­டாந்தம் அனுப்­பப்­பட்டு வந்த பெண் ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான நலன்­புரி உத்­தி­யோ­கத்தர் இந்த வரு­டமே முதற் தட­வை­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஹஜ் நலன்­புரி கட­மை­களை மேற்­கொள்­வ­தற்­கான உத்­தி­யோ­கத்­தர்­களை தெரி­வு ­செய்­வ­தற்­கான வழி­காட்­டி­யொன்று திணைக்­க­ளத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு பின்­பற்­றப்­பட்டு வந்­துள்­ளது. குறித்த வழி­காட்டி பின்­பற்­றப்­ப­டா­மலும், திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ரு­டைய எந்­த­வித சிபா­ரி­சு­மின்­றியே ஹஜ் குழுவின் தலை­வ­ரினால் இவ்­வ­ருட ஹஜ் நலன்­பு­ரிக்­கான உத்­தி­யோ­கத்­தர்கள் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர்.
எந்­த­வொரு தட­வையும் ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­றாத பல உத்­தி­யோ­கத்­தர்கள் திணைக்­க­ளத்தில் உள்ள நிலையில், ஏற்­க­னவே இரு தட­வைகள் ஹஜ் கட­மை­யினை மேற்­கொண்ட ஒருவர் இம்­முறை நலன்­புரி உத்­தி­யோ­கத்­த­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், அரச தொழில் நிய­மனம் பெற்று இது­வரை நிரந்­த­ர­மா­காத, இரண்டு வரு­டங்­களே பூர்த்­தி­யான கனிஷ்ட உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் இம்­முறை ஹஜ் நலன்­புரி உத்­தி­யோ­கத்­த­ராக சவூதி அரே­பியா சென்­றுள்ளார்.

இதனால், அதி­ருப்­தி­ய­டைந்த திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஒன்­றி­ணைந்தே விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­ச­ரிடம் இந்த முறைப்­பாட்­டினை மேற்­கொண்­டுள்­ளனர்.

இவ் விவ­காரம் தொடர்பில் புத்­த­சா­சன மற்றம் சமய விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­கவை தொடர்பு கொண்டு கேட்­ட­போது, “முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்­வொன்­றினை வழங்­குவேன்” என விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், எதிர்­கா­லத்தில் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் இல­வ­ச­மாக உம்ரா கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­கான விசேட திட்­ட­மொன்­றினை முன்­னெ­டுக்க எதிர்­பார்த்­துள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த வருடம் இலங்கையிலிருந்து 900 பேர் மாத்திரமே ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றமையினால் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எவரையும் ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து செல்ல அனுமதிக்க வேண்டாம் என நானே உத்தரவிட்டேன். எனினும், இந்த வருடம் இலங்கையிலிருந்து 3,500 பேர் ஹஜ் யாத்திரைக்குச் செல்கின்றமையினால் அவர்களின் நலன்களைப் பேணுவதற்கு அதிக எண்ணிக்கையானோர் தேவை. இதனால், ஹஜ் நிதியத்தின் நிதியிலிருந்து அவர்களைச் செல்ல அனுமதி வழங்கியுள்ளேன்” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.