உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியை தெய்வீக சக்திகள் விரைவில் வெளிப்படுத்தும்

சம்பந்தப்பட்டவர்கள் தம்மைத்தாமே காட்டிக் கொடுப்பர் என்கிறார் பேராயர்

0 453

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் உள்ள உண்­மையை தெய்­வீக சக்­திகள் விரைவில் வெளிப்­ப­டுத்தும். இந்ந தாக்­குதல் தொடர்­பி­லான உண்­மை­களை மறைத்து எம்மை ஏமாற்­றி­விட முடியும் என ஆட்­சி­யா­ளர்கள் நினைக்­கி­றார்கள். ஆனால் இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் தம்மை தாமே காட்­டிக்­கொ­டுத்து உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வார்கள் என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தெரி­வித்தார்.

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் இடம் பெற்ற விசேட ஆரா­த­னையில் உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். நேற்று முன்­தினம் இடம் பெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ’உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உள்ள உண்மை வெகு விரைவில் வெளி­வரும். கடந்த 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இவ்­வா­ல­யத்­திலும் குண்டு வெடித்­தது. 60 பேர் கொல்­லப்­பட்­டார்கள். இந்த கொலை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் யார்? இது தொடர்பில் நியா­ய­மான விசா­ரணை நடத்­தப்­பட்­ட­னவா? உண்­மைகள் அறி­யப்­பட்­ட­னவா? நீதியும் நியா­யமும் இல்லை. எம்மை ஏமாற்­றிக்­கொண்­டி­ருக்க முடியும் என நினைக்­கி­றார்கள். அவ்­வாறு எம்மை ஏமாற்ற முடி­யாது. ஏமாற்ற நினைப்­ப­வர்­களே ஏமாந்­து­போ­வார்கள்.

சட்டம் நீதி­யைப்­பற்றி அமைச்­சர்கள் பேசு­கி­றார்கள். தினம் தினம் புதிய சட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தோடு உண்­மையை மறைக்­கவே முயல்­கின்­றனர். சட்­டங்கள் மூலம் மக்­களின் குரல்­களை அடக்கி அவர்­களை சிறையில் அடைத்து ஆட்­சி­யா­ளர்கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கவே எண்­ணு­கி­றனர். அவ்­வாறு குற்­றங்­களை மறைத்துவிட முடியாது. இறைவனின் சக்தி அதனைவிடப் பலமானது. இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் விரைவில் இனங்காணப்படுவார்கள் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.