“இஸ்ரேல் சுதந்திர தின நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியிலே கலந்துகொண்டேன்”

0 438

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கொழும்பில் நடை­பெற்ற இஸ்ரேல் நாட்டின் சுதந்­திர தின நிகழ்வில் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் என்ற வகையில் கலந்து கொண்டேன். அதன் அர்த்தம் நாங்கள் பலஸ்­தீ­னுக்கு எதி­ரா­ன­வர்கள் என்­ப­தல்ல. ஆனால் சிலர் அர­சியல் இலா­பத்­திற்­காக என்னை விமர்­சிக்­கி­றார்கள்’ என வெளி­வி­வ­கார அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்­துள்ளார்.

கொழும்பில் நடை­பெற்ற இஸ்­ரேலின் சுதந்­திர தின நிகழ்வில் அமைச்சர் அலி­சப்ரி பங்கு கொண்­டமை குறித்து முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து அவ­ருக்கு எதி­ராக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இதற்கு பதி­ல­ளிக்கும் முக­மா­கவே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது; கடந்த இரண்டு வருட கால­மாக ஐக்­கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் குறித்து இலங்­கையின் தரப்­பி­லி­ருந்து ஒரு வார்த்­தை­யேனும் கூறப்­ப­ட­வில்லை. ஆத­ரவு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. என்­றாலும் கடந்த முறை நான் ஐக்­கிய நாடுகள் சபையில் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வான இலங்­கையின் நிலைப்­பாட்­டினைத் தெரி­வித்தேன். இலங்­கையின் நிலை­ப்பாடு குறித்து உரை­யாற்­றினேன். நிலை­ப்பாட்­டினை வலி­யு­றுத்­தினேன்.

கொழும்பில் நடை­பெற்ற இஸ்ரேல் நாட்டு சுதந்­திர நிகழ்வில் நான் பங்கு கொண்­டதை சிலர் அர­சியல் இலா­பத்­திற்­காக விமர்­சிக்­கி­றார்கள். இலங்கை இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உற­வினைப் பேணி­வ­ரு­கி­றது. இந்­நி­லையில் இலங்­கையில் அந்­நாடு ஏற்­பாடு செய்­துள்ள நிகழ்­வுக்கு வெளி­வி­வ­கார அமைச்­சுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் என்ற வகை­யிலே அதில் பங்கு கொண்டேன்.

நான் இஸ்ரேல் நாட்டின் நிகழ்வில் கலந்து கொண்­டமை நாம் பலஸ்­தீ­னுக்கு எதி­ரா­ன­வர்கள் என்­ப­தல்ல, இலங்கை இஸ்­ரே­லுடன் இரா­ஜ­தந்­திர உற­வு­களைக் கொண்­டுள்­ளது என்­பதை மறந்து விட்டு சிலர் என்னைப் பற்றித் தவ­றாக விமர்­சிக்­கி­றார்கள். இது தவ­றான மதிப்­பீ­டாகும்.

நான் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் என்ற வகையில் பலஸ்தீன் நாட்­டு­டனும், பலஸ்தீன் தரப்­பு­க­ளு­டனும் தொடர்பில் இருக்­கிறேன். கொழும்பில் பலஸ்தீன் நடத்­திய ‘நக்பா’ நினைவு தினத்தில் நான் வெளி­நாட்டில் இருந்­த­மையால் பங்­கேற்­க­வில்லை. பலஸ்தீனின் உரிமைகள் மற்றும் பலஸ்தீன் ஒரு தனி நாடு என்பதிலும் நான் உறுதியான நிலைப்பாடுடன் இருக்கிறேன். இது இலங்கையின் அணிசேரா கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.