தனியார் சட்ட விவகாரத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் சில திருத்தங்களுடன் ஒருமித்து இணக்கம்

0 227
  • பெண் திருமண வயது, பலதாரமணம், பெண் காதிகள் நியமனத்திற்கு ஆதரவு

  • மணமகள் கையொப்பமிட்டாலும் வொலி அவசியம் எனவும் வலியுறுத்து

  • ‘முஸ்லிம்’ என்ற பதத்தை தவிர்த்தமைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பு

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருந்த விட­யங்­களில் சில திருத்­தங்­க­ளுடன் சட்­டத்­தி­ருத்த வரை­புக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏகமன­தாக இணங்­கி­யுள்­ளனர்.

இதே­வேளை சட்­டத்­தி­ருத்த வரைபு இஸ்­லா­மிய வரை­ய­றையை மீறி, இஸ்­லாத்­துக்கு ஆபத்து வரக்­கூ­டிய வகையில் அமையப் பெற்­றுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். சட்ட வரைபில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்­துச்­சட்­டத்தின் வார்த்தை பிர­யோ­கங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளமை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­தென தெரி­வித்­துள்­ள­துடன் அத்­தி­ருத்­தங்­களை அனு­ம­திக்க முடி­யா­தெ­னவும் தெரி­வித்­துள்­ளனர்.

புதிய சட்ட வரைபில் ‘முஸ்­லிம்’­என்ற பதம் நீக்­கப்­பட்­டுள்­ளது. ‘நிக்காஹ் வைபவம்’ என்ற பதம் நீக்­கப்­பட்டு ‘முறைப்­படி சடங்­கு­க­ளுடன் செய்­தவை’ (Solemnization) என்ற பதம் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. இது பொது­வான சட்­டங்­களில் காணப்­ப­டு­கின்ற சொல்­லாகும்.
அடுத்து ‘தலாக்’, பஸஹ் என்ற சொற்­ப­தங்­களும் நீக்­கப்­பட்­டுள்­ளன. இச்­சொற்­பி­ர­யோ­கங்கள் பல நூற்­றாண்டு கால­மாக இருந்து வந்­துள்­ளன. மேலும் ‘முஸ்லிம்’ என்ற சொற்­பதம் நீக்­கப்­பட்டு ‘ இஸ்­லாத்தைக் கூறும் நபர்’ (Person Who Professes Islam) என்ற வார்த்தை சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்தத் திருத்­தங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என தீர்­மா­னித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.
சட்­டத்தில் இவ்­வா­றான திருத்­தங்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த சொற்­பத திருத்­தங்கள் இஸ்­லாத்­துக்கு ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­தாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களான ரிசாத் பதி­யுதீன் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் தெரி­வித்­தனர்.
இதே­வேளை முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் இது­வரை காலம் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருந்த பெண்­களின் திரு­மண வயது பல­தா­ரணம், பெண்கள் காதி­க­ளாக நிய­மனம் போன்ற விட­யங்­களில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கருத்து முரண்­பா­டு­க­ளின்றி இணக்கம் கண்­டுள்­ளனர்.

பெண்கள் காதி­க­ளாக நிய­மனம், நிபந்­த­னை­க­ளுடன் பல­தார மணத்­துக்கு அனு­மதி, திரு­மண வய­தெல்லை18, அதே வேளை விசேட சந்­தர்ப்­பங்கள் ஏற்­பட்டால் 16–18 வய­துக்­கு­மி­டைப்­பட்ட பெண்கள் காதி­நீ­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் விவாகம் செய்து கொள்­ளலாம் எனும் திருத்­தங்­க­ளுக்கு ஏக­ம­ன­தாக சம்­மதம் தெரி­வித்­துள்­ளனர்.
அத்­தோடு பெண்கள் (மண­மகள்) விவாக பதிவு புத்­த­கத்தில் கையொப்­ப­மிடல் என்ற திருத்­தத்­தையும் அனு­ம­தித்­துள்­ளனர். அதே­வேளை மண­மகள் திரு­மண பதிவில் கையொப்­ப­மிட்­டாலும் ‘ வொலி’ கட்­டா­ய­மாக கையொப்­ப­மி­ட­வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இந்த திருத்­தங்கள் தொடர்­பான அறிக்­கை­யொன்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறு-ப்­பி­னர்­க­ளினால் தயா­ரிக்­கப்­பட்டு கையொப்­ப­மி­டப்­பட்­டுள்­ளது.குறிப்­பிட்ட அறிக்­கையில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்­டுள்­ள­தா­கவும், இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது­வரை கையொப்­ப­மி­ட­வில்லை எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். இரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மி­டா­விட்­டாலும் அவர்கள் குறிப்­பிட்ட திருத்­தங்­க­ளுக்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

இதே வேளை குறிப்­பிட்ட அறிக்கை நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் விரைவில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் குழு­விற்குத் தலைமை தாங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பெளஸி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் கண்­டனம்
நீதி­ய­மைச்சு தயா­ரித்­துள்ள சட்ட வரைபில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் சொற்­ப­தங்கள் சில நீக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு முஸ்லிம் பெண் சட்­டத்­த­ர­ணிகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளனர்.

சட்­ட­வ­ரைபில் ‘முஸ்லிம்’ என்ற பதம் நீக்­கப்­பட்டு ‘இஸ்­லாத்­தைக்­கூறும் நபர்’ (Person who Professes Islam) என்ற சொற்­பதம் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. இது எமது அடை­யா­ளத்தை இல்­லாமற் செய்­வ­தாகும். எமது அடை­யா­ளத்தை அழித்து எமது பிள்­ளை­களை சீர­ழிப்­ப­தாகும் என சட்­டத்­த­ரணி ஸரீனா தெரி­வித்­துள்ளார்.

மேலும் ‘நிக்காஹ் செர­மணி’ என்ற சொல் நீக்­கப்­பட்டு ‘முறையே சடங்­கு­க­ளுடன் செய்­தவை’ (Solemnization) என்ற சொல் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. இது பொது­வான சட்­டங்­களில் காணப்­படும் சொல்­லாகும். எங்­க­ளது தனியார் சட்­டத்தில் இச்சொல் இணைக்­கப்­பட்­டுள்­ளது. நிக்காஹ் செர­மனி என்ற சொல் ஏன் நீக்­கப்­பட்­டது. அதற்­கான தேவை என்ன?
அத்­தோடு தலாக், பஸஹ் என்ற சொற்­பி­ர­யோ­கமும் எமது சட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்டு சட்ட வரைபு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சர்­வ­தேச மொழி­யாகும். பல­நூற்­றாண்டு கால­மாக எமது தனியார் சட்­டத்தில் இருந்து வந்த இச்­சொற்­பி­ர­யோகம் ஏன் நீக்­கப்­பட்­டுள்­ளது? இதன் மூலம் சமூகம் என்ன நன்மை அடை­யப்­போ­கி­றது? இது கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தாகும். முஸ்லிம் குடும்ப அமைப்பை சீர்­கு­லைக்­கக்­கூ­டி­ய­தாகும் என்றார்.

திரு­மணப் பதிவில் தனது சம்ம­தத்தை தெரி­வித்து பெண் கையொப்­ப­மி­டலாம். ஆனால் ‘வொலி’யின் கையொப்பம் விருப்­பத்­துக்­கு­ரி­ய­தாக மாத்­திரம் இருக்­கக்­கூ­டாது. ‘வொலி’யின் கையொப்பம் கட்­டா­ய­மா­ன­தாகும். ‘வொலி’ இல்­லாமல் திரு­மணம் இல்லை என நபி (ஸல்) கூறி­யி­ருக்­கிறார் ‘வொலி’ தேவையற்றது. என்ற சட்டத்திருத்தம் ஆபத்தானதாகும். இதில் ஒரு தந்தையை எதிரியாக காட்டக்கூடிய பின்புலம் காணப்படுகிறது. திருமணம் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும். ஒரு திருமணம் பதிவு செய்யப்பட வில்லை என்பதற்காக வலிதற்றதாக்கிவிட முடியாது. அப்படி வலிதற்றதாக்கினால் அதனால் பாதிக்கப்படுவது பெண்ணும், பிள்ளைகளுமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்டவருக்கு தண்டனை விதிக்கலாம். இது பதியப்படாத திருமணத்தை ஊக்குவிப்பதற்காக அல்ல, சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகும் என்றும் சட்டத்தரணி ஸரீனா தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.