நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு தனி­ந­பர்கள் மூவ­ருக்கு மட்டும் சொந்­த­மா­ன­தல்ல

சபையில் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

0 647

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கோ, மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கோ சொந்­த­மா­ன­தல்ல. அது­வொரு நிலை­யான ஆவணம். இந்த நாட்டின் முழு­மை­யான ஆட்சி அதி­கா­ரத்தை நிலை­நி­றுத்த வல்­லது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

நேற்று முன்தினம் பாரா­ளு­மன்ற அமர்வின் ஆரம்­பத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிப்­பது மற்றும் ஜே.வி.பி. முன்­மொ­ழிந்த நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­பது தொடர்­பான ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை ஆகி­ய­வற்றின் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரையின் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறி­ய­தா­வது,

51 நாட்­க­ளாக நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் கொந்­த­ளிப்­பபை சுமூக நிலைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு போரா­டிய சகல அர­சியல் கட்­சி­க­ளுக்கும், சிவில் சமூக அமைப்­புகள், பொது­மக்கள் அனை­வ­ருக்கும் நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கிறோம். தற்­போது ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­பட்ட அமை­தி­யான நிலையில் பாரா­ளு­மன்றம் ஒன்­று­கூ­டி­யுள்­ளது.

இன்று காலை குறுஞ்­செய்­தி ஒன்றில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர், மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­கட்சித் தலை­வ­ராக பிரே­ரிக்க தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ராஜ­ப­க் ஷ­வோடு எனக்கு தனிப்­பட்ட எது­வு­மில்லை. மஹிந்த ராஜ­ப­க் ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரா என்­பதில் பிரச்­சி­னை­யி­ருக்­கி­றது. அவரை கெள­ரவ எனக் குறிப்­பி­டு­வதா அல்­லது திரு எனக் குறிப்­பி­டு­வதா என்ற கேள்வி எழு­கி­றது.

உதய கம்­மன்­பில, வாசு­தேவ நாண­யக்­கார போன்­ற­வர்கள் சட்­டத்­த­ர­ணி­க­ளாக இருந்தும், ஜனா­தி­ப­தியை மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தவ­றாக வழி­ந­டத்­தி­யி­ருக்­கி­றார்கள். அது மட்­டு­மல்­லாது மஹிந்த ராஜ­ப­க் ஷவையும் பார­தூ­ர­மான சிக்­க­லுக்குள் மாட்­டி­விட்­டார்கள்.

தேர்தல் ஆணை­யா­ளரை அழைத்து விசா­ரிக்­கலாம். ஏனென்றால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் யாப்பு தேர்தல் திணைக்­க­ளத்தில் உள்­ளது. அதன் பங்­காளிக் கட்­சிகள் எவை, அவற்றில் உறுப்­பி­னர்கள் யாவர் என்­பது பற்றி ஆணை­யா­ள­ரிடம் கேட்­கலாம்.

அர­சி­ய­ல­மைப்பின் 99 (13)ஆவது உறுப்­புரை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பத­வி­நீக்­கப்­பட்டால் ஒரு மாதத்­துக்குள் நீதி­மன்­றத்­துக்கு செல்லாம். ஆனால், ஒரு கட்­சி­யி­லி­ருந்து வேறு கட்­சியில் அங்­கத்­துவம் பெற்­ற­வு­ட­னேயே அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற தகு­தியை உட­ன­டி­யா­கவே இழந்­து­வி­டு­கிறார்.

1982ஆம் ஆண்­டி­லி­ருந்து அடுத்­த­டுத்து வந்த ஜனா­தி­ப­திகள் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்கு பதி­லாக தக்­க­வைத்­துக்­கொள்­ளவே எத்­த­னித்து வந்­தி­ருக்­கி­றார்கள். 2001, 2004ஆம் ஆண்­டு­களில் நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­ப­திகள் வேறு அர­சாங்­கங்களின் கீழ் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டனர்.

2004ஆம் ஆண்டில் சந்­தி­ரிகா அம்­மையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது, ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருந்­த­போது பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு நேர்ந்­தது. அதற்கு மூல­கா­ர­ண­மாக நான் இருந்­தி­ருக்­கிறேன். எனது பதவி பறிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து, நாங்கள் அர­சாங்­கத்­தை­விட்டு வில­கி­யதால் ஐந்து மாதங்­க­ளுக்குள் ஆட்சி கவிழ்ந்­தது.

இரு மையங்­க­ளுக்­கி­டை­யி­லான அதி­காரப் போட்டி அர­சியல் சக­வாழ்வை இல்­லா­மல்­செய்­தது. மஹிந்த ராஜ­ப­க் ஷவை பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து நாங்கள் எல்­லோ­ரு­மாக முயற்­சித்தோம். அதற்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஆத­ர­வ­ளித்­தது.

இரு அதி­கார மையங்­க­ளுக்­கி­டையில் ஆட்­சியை கொண்­டு­செல்லும் நிலைமை தொடர்­கி­றது. நிறை­வேற்று அதி­கார முறை­மையை ஒழிப்­ப­தோடு, தேர்தல் முறை­மையும் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றது. மக்கள் விடு­தலை முன்­னணி வேறு­பட்ட கார­ணங்­க­ளுக்­காக நிறை­வேற்று அதி­கார முறைமையை ஒழிக்­கப்­பட வேண்டும் என்­கி­றது.

அதை அர­சி­ய­ல­மைப்­பி­லி­ருந்து முழு­மை­யாக நீக்­கு­வது எப்­படி சாத்­தி­ய­மாகும்? அதி­காரப் பர­வ­லாக்­கத்­துக்கு என்ன நடக்கும்? நிறை­வேற்று அதி­கார முறை­யைமை இல்­லா­தொ­ழிக்க சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் 2/3 பெரும்­பான்­மையால் நிறை­வேற்­று­வதால் மட்டும் போதாது. அதற்கு உயர்­நீ­தி­மன்றம் இட­ம­ளிக்­காது. ஆகையால் சர்­வ­ஜன வாக்­க­ளிப்பு வெற்­றி­பெற வேண்­டு­மானால் முழு நாட்டு மக்­களும், சகல தரப்­பி­னரும் அதில் திருப்­தியை வெளிப்­பட்­டுத்­தி­யி­ருக்க வேண்டும்.

மக்­க­ளுக்கு பகு­தி­ய­ள­வி­லான மாற்­றங்கள் மட்டும் போதாது. அனைத்­தையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவும் முழு­மை­யா­ன­தா­கவும் அவை இருக்­க­வேண்டும். முழு­மை­யா­ன­தாக இருப்­ப­தற்கு உரிய முறையில் அவை பரி­சீ­லிக்­கப்­பட வேண்டும். அந்த அடிப்­ப­டை­யில்தான் அர­சி­ல­ய­மைப்பு வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்டு அதன் கட­மையை பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுத்­தது.

அறிக்­கையை நாங்கள் விவா­தித்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும் உரிய நகர்­வு­களை மேற்­கொண்டு சில புரிந்­து­ணர்­வு­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்டோம். மக்கள் விடு­தலை முன்­னணி நிறை­வேற்று அதி­கார முறையை தேவையே இல்லை என்­கி­றது. சில தரப்­பினர் தேர்தல் முறையில் உரிய மாற்­றங்­களை கோரு­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்பில் அதி­கா­ரப்­ப­கிர்வு பற்றி சிலர் பேசு­கின்­றனர்.

அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு நீதி­ப­தி­களின் நிய­மனம் பற்­றிய பார­தூ­ர­மான நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி இருந்து வரு­கிறார். சிரேஷ்ட நீதி­ய­ர­சர்கள் பங்­கு­பற்­றுதல் பற்­றிய அவ­ரது கருத்தை பிர­தமர் பத­வி­யேற்­ற­ததை தொடர்ந்து நடந்த கூட்­டத்தில் எங்கள் மத்­தியில் தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், மஹிந்த ராஜ­ப­க் ஷவும் மூன்­று­வி­த­மாக சிந்­திக்­கின்­றனர். அவர்­க­ளது எதிர்­கா­லத்தை மையப்­ப­டுத்தி, அர­சியல் நோக்­கங்­களை முன்­வைத்து இந்த விட­யத்தில் வெவ்­வேறு வித­மாக சிந்­திக்க தலைப்­பட்­டுள்­ளனர். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியை முறையை ஒழிப்­பதோ, மாற்றம் செய்­வதோ, வெஸ்ட் மினிஸ்டர் பாரா­ளு­மன்ற முறையை மீள் அறி­முகம் செய்­வதோ இந்த மூன்று தனி­ந­பர்­களின் விருப்பு, வெறுப்­பு­க­ளுக்கு மட்டும் உரி­ய­தாக இருப்­பதை அனு­ம­திக்க முடி­யாது.

இந்த நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கோ, மஹிந்த ராஜ­ப­க் ஷவுக்கோ சொந்தமானதல்ல. அதுவொரு நிலையான ஆவணம். இந்த நாட்டின் முழுமையான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வல்லது. மஹிந்த ராஜ­ப­க் ஷ நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கவேண்டும் என்பது அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதினாலே ஆகும்.

ரணில் விக்கிரமசிங்க விவேகமானவர், புத்திக்கூர்மையுள்ளவர். ஆனால், கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அவர் போட்டியிடவில்லை. வேறு வேட்பளர்கள் போட்டியிட இடமளித்தார். பாராளுமன்றத்தில் பிரதமராக இருந்துகொண்டு அதற்கான நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக அரசாங்கத்தை வழிநடத்த அவர் முன்வந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று முறையை ஒழிப்பதாக நாட்டு மக்களிடம் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்பொழுது அதனை மீண்டும் ருசித்து அனுபவிக்க ஆசைப்படுகிறார் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.