இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழு ஞாயிறன்று பயணமானது

சவூதியில் மகத்தான வரவேற்பு

0 233

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
64 பேர் கொண்ட இலங்­கையின் முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரிகர் குழு கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை புனித மக்கா நோக்கி பய­ண­மா­கி­யது. இக்­ கு­ழு­வினர் இலங்­கை­யி­லி­ருந்து 4 ஆம் திகதி காலை 10.05 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் பய­ண­மா­கி­னர்.

கட்­டு­நா­யக்கா பண்­டா­ர­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலை­யத்தின் ஊடாகப் பய­ணித்த ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை வழி­ய­னுப்பி வைக்கும் நிகழ்வு காலை 7.30 மணி­ய­ளவில் விமான நிலை­யத்தில் இடம் பெற்­றது. இந்­நி­கழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலா­சார அமைச்சின் செய­லாளர் சோம­ரத்ன விதா­ன­ப­தி­ரன, இலங்­கைக்­கான சவூதி அரே­பி­யாவின் தூதுவர் காலித்பின் ஹமூத் அல் கஹ்­தானி, விசா பிரி­வுக்­கான பொறுப்­ப­தி­காரி சாலிஹ் அப்­துல்லாஹ் அல் பராஜி, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட். ஏ.எம்.பைசல், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­ராஹிம் அன்ஸார், உறுப்­பி­னர்கள் இபாம் நப்கான், ஹனிபா இஸ்ஹாக், திணைக்­க­ளத்தின் உத­விப்­ப­ணிப்­பாளர் அலா அஹமட், ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள், திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் எனப் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

சவூதி அரே­பி­யாவைச் சென்­ற­டைந்த முத­லா­வது ஹஜ் குழு­வி­ன­ருக்கு சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்­கையின் தூது­வரும், ஜித்­தா­வி­லி­ருக்கும் கொன்­சி­யூலர் ஜென­ரலும் மகத்­தான வர­வேற்பு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

அவர்­க­ளுக்கும் இலங்கை விமான நிலைய அலு­வ­லர்­க­ளுக்கும் நன்­றி­களைத் தெரி­விப்­ப­தா­கவும் பைஸல் குறிப்­பிட்டார்.

கடந்த 4 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டுச் சென்ற முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரிகர் குழு எதிர்­வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி நாடு திரும்­ப­வுள்­ளனர்.
தொடர்ந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பய­ண­மா­கி­யுள்­ளனர்.

இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் பய­ண­மாகும் இறுதி விமானம் எதிர்­வரும் 23 ஆம் திகதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. யூஎல் 101 ஸ்ரீலங்கன் விமா­னத்தில் அன்­றைய தினம் 100 யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்­க­வுள்­ளனர்.
இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக இலங்­கை­யி­லி­ருந்த மொத்தம் 3500 பேர் பயணிக்கவுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.