அலி சப்ரி ரஹீ­முக்கு எதிராக ஏன் சட்டத்தை நிலைநாட்ட முடியாதுள்ளது

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சபையில் கேள்வி

0 221

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
அண்­மையில் விமான நிலை­யத்தில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்கம் மற்றும் பொருட்­க­ளுடன் பிடி­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் விசேட கூற்­றொன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது ­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நடத்தை விதி­களை பின்­பற்­று­வ­தற்கு கட­மைப்­பட்­டுள்­ளனர். இது தொடர்பில் பல சரத்­துக்கள் உள்ள போதிலும் அண்­மையில் விமான நிலை­யத்தில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்கம் மற்றும் பொருட்­க­ளுடன் பிடி­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிர­யோ­கிக்­கப்­ப­டாமல் இருக்­கி­றது என கேட்­கிறேன்.

அத்­துடன் 4.611 கிலோ தங்­கத்தை (80 மில்­லியன் பெறு­மதி) கொண்டு வந்த நப­ருக்கு 70 மில்­லியன் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, அதனை செலுத்த முடி­யாமல் அவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். ஆனால் 7 கோடி பெறு­ம­தி­யான தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­களைக் கொண்டு வந்த போது பிடி­பட்ட இந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு 7.5 மில்­லியன் அப­ராதம் விதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது எந்­த­ளவு நியாயம் என கேட்­கிறேன்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் அவ­மா­னப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த செயலை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என கேட்­டுக்­கொள்­கிறோம்.
நாட்டின் குடி­ம­க­னுக்கு ஒரு கவ­னிப்பும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு மற்­றொரு கவ­னிப்பும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதா முறை மாற்றம் என கேட்கிறேன். அதனால் இதற்குப் பின்னால் இருக்கும் மறைமுக சக்தி யாது? என கேட்கிறோம்., இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.