கல்எளிய அரபுக் கல்லூரி விவகாரம் : பிரதிவாதிகளின் இணக்கத்தை அடுத்து தடை உத்தரவு நீக்கம்

0 260

(எம்.எப்.அய்னா)
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி விவ­கா­ரத்தில் அத்­த­ன­கல்ல மாவட்ட நீதி­மன்றம் பிறப்­பித்த இடைக்­கால தடை உத்­த­ரவு பிர­தி­வா­திகள் தரப்பின் இணக்கம் மற்றும் உறு­திப்­பாட்டை அடுத்து நீதி­மன்றால் நீக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்கள், பெற்றோர், பழைய மாண­வர்கள் இணைந்து, தாக்கல் செய்­துள்ள  கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி விவ­காரம் குறித்த சிவில்  வழக்கு, கடந்த 2 ஆம் திகதி அத்­த­ன­கல்ல மாவட்ட நீதி­பதி கேசர சம­ர­தி­வா­ஹர முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது மனுவின் 3 மற்றும் நான்காம் பிர­தி­வா­திகள் சார்பில் மன்றில் சட்­டத்­த­ரணி இசுரு ஜய­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய, சட்­டத்­த­ரணி வரித்த ஜய­விக்­ரம  நீதி­மன்றில் வழங்­கிய உறு­திப்­பாட்டு உள்­ளிட்­ட­வற்றை ஆராய்ந்த நீதி­மன்றம்  இந்த இன் ஜங்ஷன் தடை உத்­த­ரவை தொட­ராமல் நீக்­கி­யது.

முன்­ன­தாக  சட்­டத்­த­ரணி அர­விந்து மன­துங்க ஆரச்­சி­யினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த மனு  கடந்த மாதம் பரி­சீ­லிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது, அத்­த­ன­கல்ல  மாவட்ட  நீதி­பதி  கேசர சம­ர­தி­வா­ஹர, பாதிப்­பொன்­றினை தடுப்­ப­தற்­காக வழங்க முடி­யு­மான  இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை  14 நாட்­க­ளுக்கு  செல்­லு­ப­டி­யாகும் வண்ணம் பிறப்­பித்­தி­ருந்தார்.

இந்த  இடைக்­கால தடை உத்­த­ரவு, ஏற்­பட வல்ல பாதிப்­பினை தடுப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட உத்­த­ர­வுதான். தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கில்  நீதி­மன்­றிடம் கோரப்­பட்­டுள்ள கோரிக்­கை­களின்’ ஈ’ பிரிவின் கீழ் முன் வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்து இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தாக நீதி­பதி கேசர சம­ர­தி­வா­க­ரவின் உத்­த­ரவில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அதா­வது,  கல் – எளிய முஸ்லிம்  மகளிர் அரபுக் கல்­லூரி யாப்­புக்கு முர­ணாக  நிய­மனம் பெற்­றுள்ள, நிய­மனம் பெற எதிர்ப்­பார்த்­துள்ள மற்றும் வேறு நபர்கள்  கல்­லூ­ரிக்குள் நுழை­வதை,  கல்­லூ­ரியின் நிதி, வங்கிக் கணக்­கு­களை பயன்­ப­டுத்­து­வதை , கல்­லூரி நட­வ­டிக்­கை­களில் தலை­யீடு செய்­வதை , கல்­லூ­ரியின் ஆவ­ணங்­களை பயன்­ப­டுத்­து­வதை தடுக்க வேண்டும் என  ஈ பிரி­வூ­டாக கோரப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட அநீ­தி­யான முறையில் பத­வி­யி­லி­ருந்து இடை நிறுத்­தப்­பட்­டுள்ள  கல்­லூ­ரியின் அதி­பரை மற்றும்  ராலியா என்­ப­வரை மீள பணியில் இணைக்க வேண்டும் என  அப்­பி­ரி­வூ­டாக கோரப்­பட்­டுள்­ளது.  அத்­துடன் சட்ட ரீதி­யான  செய­லாளர் என மனு­வூ­டாக கூறப்­பட்­டுள்ள முத­லா­வது முறைப்­பாட்­டாளர் அக்­க­ட­மை­களை முன்­னெ­டுக்க ஆவன செய்­யப்­படல் வேண்டும்  என அதில் கோரப்­பட்­டுள்­ளது.

இவற்­றை­யெல்லாம் விட,  கல்­லூரி யாப்­புக்கு முர­ணாக  நிய­மனம் பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் தற்­போ­தைய முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்கள் ( பிர­தி­வா­திகள்) உறுப்­பி­னர்கள் மற்றும் வேறு நபர்கள் சட்ட ரீதி­யாக நடாத்த உள்ள பொதுச் சபை கூட்­டத்­துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு­தா­ரர்­களால் கோரப்­பட்­டுள்­ளது.

அந்த வழக்கின் பிர­காரம்,   சட்ட ரீதி­யான செயலர் என கூறும்  நூர் மொஹம்மட் மொஹம்மட் மிப்லி, சட்ட ரீதி­யான  பொரு­ளாலர் எனக் கூறப்­படும்  அப்துல் ஹமீட் மொஹம்மட் கலீல், அக்­கல்­லூ­ரியில் கல்வி பயிலும் இரு மாண­வி­யரின் பெற்­றோர்­க­ளான  பிர்­தெ­ளவுஸ் மொஹம்மட் புஹாரி , மொஹம்மட் அப்னாஸ் மொஹம்மட் பர்ஹான், குறித்த கல்­லூ­ரியின் பழைய மாண­வியர் சங்க  தலைவி சுல்­பிகார்  ஜுனைட் மற்றும் செய­லாளர்  ஜமீலா உம்மா மொஹம்மட் அஷ்ரப் ஆகி­யோரே மனு­தா­ரர்­க­ளாவர்.
வழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக  மொஹம்மட் டில்ஷாத் பாசில்,  அர்ஷாட் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் பயாஸ் சலீம், மொஹம்மட் ஜமீல் அஹமட், மொஹம்மட் ரிஷாட் சுபைர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இந் நிலையில் கடந்த 2  ஆம் திகதி இந்த மனு பரி­சீ­ல­னைக்கு வந்த போது, 3,4 ஆம் பிர­தி­வா­திகள் மன்றில் ஆஜ­ரான நிலையில், அவர்­களின் சார்பில் சட்­டத்­த­ரணி வரித்த ஜய­விக்­ரம முன்­னி­லை­யானார்.

அதன்­படி, மனு­தா­ரர்கள் சார்பில் விட­யங்­களை முன் வைத்த அவர், இந்த வழக்கு குறித்த நீதி­மன்ற அதி­காரம் தொடர்பில் கேள்வி எழுப்பி  முதலில் வாதங்­களை முன் வைத்தார்.
எவ்­வா­றா­யினும் மனு­தா­ரர்கள் தற்­போ­தைய முகா­மைத்­துவ சபை  ( பிர­தி­வா­திகள்) உறுப்­பி­னர்கள் மற்றும் வேறு நபர்கள் சட்ட ரீதி­யாக நடாத்த உள்ள பொதுச் சபை கூட்டம் என வர்­ணிக்கும், பொதுச் சபைக் கூட்­டத்தை, இந்த சிவில் வழக்கின் தீர்­மானம் ஒன்று எட்­டப்­படும் வரையில் நடாத்தப் போவ­தில்லை என நீதி­மன்­றுக்கு உறு­தி­ய­ளித்தார்.

எவ்­வா­றா­யினும் 2 ஆம் திகதி நீதி­மன்றில் மனு­தா­ரர்­க­ளுக்­காக ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ரணி அர­விந்து மன­துங்க நீதி­மன்ற அதி­காரம் தொடர்பில் முன் வைக்­கப்­பட்ட ஆட்­சே­ப­னை­க­ளுக்கு பதி­ல­ளித்­தது, பொதுச் சபை கூட்டம் தொடர்பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.
இந் நிலை­யி­லேயே பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ரணி ஜய­விக்­ரம,  வழக்கின் தீர்­மானம் எட்­டப்­படும் வரையில்  பொதுச் சபைக் கூட்­டத்தை நடாத்­து­வ­தில்லை என உறு­தி­ய­ளிப்­ப­தாக நீதி­மன்­றுக்கு அறிவித்தார்.

இந் நிலையில் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி கேசர சமரதிவாஹர, சிவில் சட்டக் கோவையின் 667 ஆம் அத்தியாயம் பிரகாரம் பொதுக் கூட்டத்தை  நடாத்துவதில்லை என்ற பிரதிவாதிகளின் உத்தரவாதத்தையும் இரு தரப்பினராலும் முன் வைக்கப்பட்ட விட­யங்­க­ளையும் ஆராய்ந்து இடைக்­கால தடை உத்­த­ரவை நீடிக்­காது  நீக்­கு­வ­தாக அறி­வித்தார். அத்­துடன் மனுவின் கோரிக்­கை­களை நேர­டி­யாக பாதிக்கும் எந்த நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­படக்கூடாது என  நீதி­மன்றம் அறிவித்தது.
அதன்படி,  வழக்கை ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதிவரை நீதிபதி ஒத்திவைத்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.