சபைக்கு செல்வதற்கு பதிலாக டுபாய்க்கு செல்லும் ரஹீம் எம்.பி

225 பேரில் 218 ஆவது இடத்தில் இருக்கிறார்

0 277

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்­டிற்குத் தேவை­யான சட்­டங்­களை இயற்­று­வ­தற்கும், சட்­டங்­களில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்­களைச் செய்­வ­தற்கும் அதி­கா­ர­முள்ள சபை பாரா­ளு­மன்­ற­மாகும்.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­டங்­களை இயற்­று­ப­வர்கள், சட்­டங்­களைத் திருத்­து­ப­வர்கள் இவ்­வா­றான உய­ரிய பணி­க­ளுக்குப் பொறுப்­பான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் இன்று கொலைக் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­களும் கூட இருக்­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டியே ஆக­வேண்டும்.

இந்­நி­லையில் சட்டம் இயற்றும் பொறுப்­பு­களைக் கொண்­டுள்ள புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமின் அண்­மைய செயற்­பா­டுகள் நாட்டில் சர்ச்­சை­களைக் கிளப்­பி­யுள்­ளன. அவர் அண்­மையில் வெளி­நாட்­டி­லி­ருந்து சட்ட விரோ­த­மாக 3.5 கிலோ தங்கம் மற்றும் 91 கைய­டக்கத் தொலை­பே­சி­களை எடுத்து வந்து நாட்­டுக்குள் கடத்த முயற்­சித்த வேளையில் விமான நிலைய சுங்க அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார்.

இந்த சட்­ட­வி­ரோத செய­லுக்­காக கைது செய்­யப்­பட்டு மறுநாள் காலை 7.5 மில்­லியன் ரூபாய் அப­ராதம் செலுத்­திய பின்னர் விடுவிக்கப்பட்டார். அதே தினம் மதியம் அலி சப்ரி ரஹீம் பாரா­ளு­மன்ற அமர்விலும் கலந்து கொண்டார்.

பாரா­ளு­மன்ற விவா­தத்தில் கலந்து கொண்ட அவர் அன்றைய தினம் இடம்பெற்ற வாக்­கெடுப்பில் கலந்­து­கொண்டு வாக்­க­ளித்தார். அதா­வது சட்­ட­மி­யற்றும் பணியில் பங்கு கொண்டார். இவ­ரது செயல்கள் நகைப்­புக்­கு­ரி­ய­தா­க­வுள்­ளது.

சட்­ட­வி­ரோத தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பேசி கடத்­த­லுக்­காக அப­ராதம் விதிக்­கப்­பட்டு அதைச் செலுத்­தி­யதன் பின்பு இக்­க­டத்­த­லுக்கு இது தொடர்பில் தான் ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் அறி­வித்­த­தா­கவும் என்­றாலும் எவரும் உதவி செய்ய முன்­வ­ர­வில்லை. நான் பிரச்­சி­னையில் சிக்­குண்டு இருக்­கும்­போது எவரும் என்னைக் காப்­பாற்­ற­வில்லை. அத­னாலேயே அர­சாங்­கத்தை எதிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்தேன். பொது பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் தலை­வரை பதவி நீக்கம் செய்யும் அர­சாங்­கத்தின் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்தேன்’’ என்று வாய் கூசாமல் நியாயம் கூறி­யி­ருக்­கி­றார்.
எனது பய­ணப்­பொ­திக்குள் என்­னுடன் வருகை தந்த நண்பர் ஒரு­வரே தங்­கத்­தையும், கைய­டக்­கத் ­தொ­லை­பே­சி­க­ளையும் வைத்துள்ளார். எனக்குத் தெரி­யா­மலே இவை­ய­னைத்தும் நடந்­துள்­ளது என்று ஆயி­ரக்­க­ணக்­கான மைல்கள் பறந்து வந்து அளிக்கும் வாக்கு மூலம் நகைப்­புக்­கு­ரி­ய­தா­க­வுள்­ளது.

6 தட­வைகள் டுபாய் விஜயம்
பாரா-­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் அடிக்கடி டுபாய்க்கு சென்று வருவதானது அவரது பயணத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அவர் கடந்த மார்ச் 2023 லிருந்து மே மாதம் 23 ஆம் திகதி வரை ஆறு தட­வைகள் இலங்­கை­யி­லி­ருந்து டுபாய்க்குப் பயணம் செய்­துள்ளார்.

  1. அவர் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து டுபாய்க்குச் சென்று மார்ச் 19 ஆம் திகதி திரும்­பி­யுள்ளார்.
  2. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி டுபாய் சென்று ஏப்ரல் 16 ஆம் திகதி திரும்­பி­யுள்ளார்.
  3. ஏப்ரல் 26 ஆம் திகதி சென்று மே 2 ஆம் திகதி திரும்­பி­யுள்ளார்.
  4. மே 5 ஆம் திகதி சென்று மே 7 ஆம் திகதி திரும்­பி­யுள்ளார்.
  5. மே 11 ஆம் திகதி சென்று மே 14 ஆம் திகதி திரும்­பி­யுள்ளார்.
  6. இறு­திப்­ப­யணம் மே 15 ஆம் திக­தி சென்று மே 23 இல் திரும்­பி­யுள்ளார்.

அலி­சப்ரி ரஹீம் குறிப்­பிட்ட தனது டுபாய் பய­ணங்­களை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். இந்த விப­ரங்கள் அவ­ரது கட­வுச்­சீட்டில் பதி­வா­கி­யுள்­ளன. அத்­தோடு அவ­ரி­ட­மி­ருந்து சுங்க அதி­கா­ரி­களால் பறி­முதல் செய்­யப்­பட்ட தங்கம் டுபாயில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட பற்றுச்சீட்டுகள் அதி­கா­ரி­களால் அலி­ சப்ரி ரஹீ­மி­ட­மி­ருந்து பெற்­றுக்­ கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவர் டுபாய் வர்த்­தக நிலை­ய­மொன்­றினை நடத்தி வரு­வ­தாக தக­வல்கள் கசிந்­துள்­ளன. அது மாத்திரமன்றி தங்க கடத்தல் சம்பவம் நடந்த பிறகும் அதே வாரம் வெள்­ளிக்­கி­ழமை 26 ஆம் திகதி இரவு மீண்டும் டுபாய்க்குப் பய­ண­மா­கி­யுள்ளார். இவ்­வி­ஜயம் கடந்த மார்ச் மாதம் முதல் இக்­கட்­டுரை எழுதும் காலப்­ப­குதி வரைக்­கான 7 ஆவது விஜயம் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தப்பிக்க முயற்சித்தார்
சுங்க அதி­கா­ரி­களால் இவர் கைது செய்­யப்­பட்­ட­ பின்பு அவரின் கோரிக்­கைக்கு இணங்க சில தொலை­பேசி அழைப்­பு­களை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் அவர் சுங்­கத்­தி­ணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பி.பீ.எஸ்.சி. நோனி­ஸுக்கு தொலை­பேசி அழைப்­பினை மேற்­கொண்டார். தான் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்­பதால் சுங்கத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் தன்னை விடு­விப்­ப­தற்கு ஏற்­பா­டு­களைச் செய்வார் என அலி சப்ரி ரஹீம்­ நி­னைத்­தி­ருக்­கலாம். அவர் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்­க­வையும் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டார்.

சுங்க திணைக்­கள உயர் அதி­கா­ரியின் தக­வ­லின்­படி ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்க நாயக்க சபா­நா­யகரைத் தொடர்பு கொண்டு விப­ரங்­களை வழங்­கினார். அத்­தோடு இது தொடர்பில் சட்­டத்தை கடு­மை­யாக அமுல் நடத்­தும்­ப­டியும் வேண்­டினார். இத­னை­ய­டுத்தே சுங்­கத்­தி­ணைக்­களம் விசா­ர­ணை­களை ஆரம்பித்தது.

குறைந்த பட்ச தண்­டப்­பணம்?
3.5 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட் கைய­டக்கத் தொலை­பே­சி­களை சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டுக்குக் கொண்டு வந்த குற்­றத்தை ஏற்­றுக்­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு ஆகக் குறைந்த தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டது ஏன்? புத்­தளம் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­குழு தலை­மைப் ­ப­த­வியை வகிக்கும் அவ­ரது பதவி பறிக்­கப்­ப­டுமா? என்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யினர் கேள்வியெழுப்­பி­யுள்­ளனர்.

3.5 கிலோ தங்கம் மற்றும் 91 கைய­டக்க தொலை­பே­சி­களை சட்ட விரோ­த­மாக நாட்­டுக்குள் கொண்டு வந்த குற்­றத்­துக்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீ­முக்கு 75 இலட்சம் ரூபாவே தண்­ட­மாக விதிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­தொகை மிகவும் குறை­வா­ன­தாகும். சுங்க சட்­டத்­தின்­படி கொண்டு வந்த பொருட்­களின் பெறு­ம­தியை விடவும் 3 மடங்கு அதிக அப­ராதம் விதிக்­கப்­பட வேண்டும். ஆனால் அவ்­வாறு விதிக்­கப்­ப­ட­வில்லை என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பொதுச் செய­லாளர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

இதற்குப் பதி­ல­ளித்த பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய ‘இலங்­கையில் இது­வரை சட்ட விரோ­த­மாகப் பொருட்­களைக் கொண்டு வந்­த­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தண்­டப்­ப­ணத்தில் அலி சப்ரி ரஹீ­முக்கு விதிக்­கப்­பட்ட தண்­டப்­ப­ணமே இலங்கை சுங்க வர­லாற்றில் அதி­கூ­டிய தொகை­யாகும் என்று தெரி­வித்தார்.

இதே­வேளை என்­மீது பொய்­குற்றம் சுமத்தி என் நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­வித்த தரப்­பி­ன­ருக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக வழக்­குத்­தாக்கல் செய்வேன் என அலி­சப்ரி ரஹீம் தெரி­வித்­துள்ளார்.

ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு
வலி­யு­றுத்தல்
தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்டு விடு­த­லை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் ­மீது கடும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்­கட்சித் தலை­வர்கள் கூட்­டாக வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்டித் தொகு­தியில் பிரதி சபா­நா­யகர் அஜித் ராஜ­பக்ஷ தலை­மையில் இடம்­பெற்ற கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தின் போதே இரு­த­ரப்­பி­னரும் இதனை வலி­யுத்­தி­யுள்­ளனர்.

நாட்­டுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக தங்கம் மற்றும் கைய­டக்கத் தொலை­பே­சி­களைக் கொண்டு வந்து குற்­ற­வா­ளி­யாக அறி­யப்­பட்ட நிலையில் தண்­டப்­பணம் செலுத்தி விடு­த­லை­யா­கி­யுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமால் ஒட்டு மொத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், பாரா­ளு­மன்­றத்­துக்கும் இழுக்கு ஏற்­பட்­டுள்­ளதால் அவரை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் என ஒரு­த­ரப்­பி­னரும், அவர் மீது கடும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என மற்­று­மொரு தரப்­பி­னரும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் தேவை­யேற்­படின் அலி சப்ரி ரஹீம் மீதான கடும் நட­வ­டிக்கை கோரி 223 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கையொப்­ப­மிட்டு கடிதம் சமர்ப்­பிப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷ, அலி சப்ரி ரஹீ­முக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க சபா­நா­ய­க­ருக்கு அதி­காரம் உள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். எதிர்­க்கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மனோ கணேசன், ஏம்.ஏ.சுமந்­திரன், லக்ஷ்மன் கிரி­யெல்ல ஆகியோர் அலி சப்ரி ரஹீ­முக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சபா­நா­ய­க­ரிடம் கோரிக்கை கடிதம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் சபை முதல்­வ­ரான சுசில் பிரே­ம­ஜ­யந்த இவ்­வி­டயம் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஆளும் மற்றும் எதிர்­க்கட்­சி­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.

சிறப்பு விருந்­தினர் முனை­யத்தில்
பாது­காப்பு அதி­கா­ரிகள்
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் கைது செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து விமான நிலை­யத்தில் சிறப்பு விருந்­தினர் முனை­யத்­தி­னூ­டாக வரு­கின்­ற­வர்கள் மற்றும் வெளி­யே­று­ப­வர்­களை கடு­மை­யாக சோத­னைக்­குட்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இச்­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டதன் பின்பு இம்­மு­னை­யத்­தி­னூ­டாக வெளி­யே­றிச்­செல்ல முற்­பட்ட உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவர் சட்ட விரோ­த­மாக கொண்டு வந்த மின் உப­க­ர­ணங்கள் சுங்க அதி­கா­ரி­களால் பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ளன. என்­றாலும் சுங்­கத்­தி­ணைக்­களம் குறிப்­பிட்ட அதி­கா­ரியின் பெயரை வெளி­யி­ட­வில்லை. இந்த முனை­யத்­தி­னூ­டாக நீண்­ட­கா­ல­மாக தடை­செய்­யப்­பட்­டுள்ள பொருட்கள் பிர­மு­கர்­களால் நாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கலாம் என சுங்க திணைக்­களம் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளது. இந்த வழி மூலம் தங்கம், இரத்­தி­னக்கல், பணம் மற்றும் போதைப்­பொ­ருட்கள் கொண்டு வரப்­பட்­டி­ருக்­க­லா­மென அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உயர் அதி­கா­ரிகள் என்­போரை கண்­ணியப் படுத்­தும்­வ­கையில் வழங்­கப்­பட்ட விசேட சலு­கைகள் இவ்­வாறு துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வது தேசத்­து­ரோ­க­மாகும். இச் செய்­கைகள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை வீழ்ச்­சி­ய­டையச் செய்வதுடன் ஒரு குறிப்­பிட்ட வர்த்­த­க சமூகத்­தினர் மாத்­திரம் சுக­போகம் அனு­ப­விக்கும் நிலைக்கு வித்தி டும்.

சட்­டங்கள் அவ­சியம்
இதே­வேளை இவ்­வா­றான சட்ட விரோத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக கடு­மை­யாக சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கான அவசியமான சட்டங்கள் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென விசேட சிறப்புரிமை அவசியமில்லை. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினருக்குள்ள சிறப்புரிமையைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுமானால் குறிப்பிட்ட நபரின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன கருத்துத் தெரிவிக்கையில் ‘தங்கம் அரசுடமையாக்கப்பட்டு 75 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் பிரச்சினை முடிவுறுத்தப்படக்கூடாது. இவ்­வா­றான குற்றம் இழைக்­கப்­பட்டால் சிறைத்­தண்­டனை அல்­லது வேறு தண்­டனை விதிப்­பது குறித்து சம்­பந்­தப்­பட்ட தரப்பு அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இதேவேளை அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையைக் கொண்டுவர கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களில் கடைசி இடத்தில் இருக்கும் அலி சப்ரி ரஹீம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் சபை நடவடிக்கைகளை சுயாதீனமாக பகுப்பாய்வு செய்யும் manthri.lk இணையத்தளத்தின் தரவுகளின் படி 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் 218 ஆவது இடத்தில் அலி சப்ரி ரஹீம் உள்ளார். 9 ஆவது பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 2020 முதல் மார்ச் 2023 வரை இடம்பெற்றுள்ள 251 அமர்வுகளில் 190 அமர்வுகளில் மாத்திரமே இவர் பங்குபற்றியுள்ளார். இக் காலப்பகுதியில் 6 தடவைகள் மாத்திரமே சபையின் முக்கிய விவாதங்களில் பங்களிப்புச் செய்துள்ளார்.

மேற்படி தரவுகள் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாகக் காண்பிக்கின்றன. இவை தொடர்பில் அவருக்கு வாக்களித்த புத்தளம் மாவட்ட மக்களும் அவரை பாராளுமன்றுக்கு அனுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் அறிந்திருப்பது அவசியமாகும்.

மேலும் இவர் இதற்கு முன்பு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்­கத்­தின் தவறான கொள்கைகளுக்கும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்ளார். குறிப்­பிட்டுக் கூறு­வ­தென்றால் 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்கு பலம் சேர்த்தார். கொவிட் 19 பர­வ­லின்­போது மர­ணித்த கொவிட் ஜனா­ஸாக்­களை தகனம் செய்த போது வாய்­மூடி மெள­ன­மாக இருந்தார். எதிர்ப்பு வெளி­யி­ட­வில்லை. இது இவர் தான் தெரிவு செய்­யப்­பட்ட புத்­த­ளத்து மக்­க­ளுக்கு மாத்தி­ர­மல்ல முழு முஸ்லிம் சமூ­கத்­துக்கும் செய்த துரோ­க­மாகும்.

மக்­க­ளுக்­காக சேவை செய்­வ­தற்­காகவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பல்­வேறு வரப்­பி­ர­சா­தங்கள் வழங்­கப்­ப­டுகின்றன. அவர்கள் இந்த சலு­கை­களைப் பயன்­ப­டுத்தி மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்குப் பதி­லாக தங்கள் வியாபாரத்தை விருத்தி செய்வதுடன் சமூகத்திற்கும் அவப் பெயரைத் தேடித் தருகிறார்கள் என்­பதையே இவ்­வா­றான சம்­ப­வங்கள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

இன்று பெரும் எண்­ணிக்­கை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­களும், தங்கள் குடும்­பமும் சுக­போ­கங்­களை அனு­ப­விப்­ப­தற்­காக தங்கள் உறுப்­பினர் பத­வியைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றார்கள். இந்தப் பத­வியின் அனு­கூ­லங்­களைப் பயன்­ப­டுத்தி சட்டவிரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். இவ்­வா­றா­ன­வர்கள் மீது கடுமையான சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். அவர்கள் பதவி நீக்கம் செய்­யப்­ப­ட­வேண்­டு­ம். இவ்வாறானவர்களுக்கு அடுத்த தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என்பதே சமூ­கத்தின் அபி­லா­ஷ­யைாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.