அல் சுஹைரியா மத்ரஸா விவகாரம்: புதிதாக கைது செய்யப்பட்ட நால்வரின் விவகாரம் ஹிஜாஸை இலக்கு வைத்தது

52 நாள் அரசாங்கத்தை எதிர்த்து நீதிமன்றை நாடியமையே காரணம் என ரவூப் ஹக்கீம் வாதம்

0 245

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் இயங்கி வந்த புத்­தளம் அல் ஸுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்­தி­ய­தாக கூறி இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள் உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் தற்­போது கைது செய்­துள்­ள­மை­யா­னது, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை இறுக்­கு­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­படும் அடிப்­ப­டை­யற்ற செயற்­பாடு என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான ரவூப் ஹகீம் வாதிட்டார்.

மத்­ரஸா மாண­வர்­க­ளுக்கு யுத்­தத்தை தூண்டும் போத­னை­களை செய்­த­மைக்­காக என கூறி கடந்த வாரம் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள, அனஸ் அன்வர் முகம்­மது சுபைர், அப்துல் ஹமீத் ஜாபர் எனும் இரு விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் அந்த சந்­தர்ப்­பத்தில் அவ்­வி­டத்­தி­லி­ருந்­த­தாக கூறப்­படும் முஹ­மது அசிபத் அபூ­பக்கர் சித்தீக், ராவுத்தர் நைனா அஸனார் மரிக்கார் ஆகியோர் குறித்த வழக்கு விசா­ர­ணைகள் நேற்று (31) கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­றது.

இதன்­போது 2 ஆவது சந்­தேக நப­ருக்­காக மன்றில் ஆஜ­ராகி வாதங்­களை முன் வைக்கும் போதே ரவூப் ஹகீம் இதனை குறிப்­பிட்டார்.

‘இந்த முழு விசா­ரணை நட­வ­டிக்­கையும் இட்­டுக்­கட்­டப்­பட்­டது. இவர்­களின் கைது, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வை நெருக்­கு­த­லுக்குள் தள்­ளு­வ­தற்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

சி.ஐ.டி.யினர் மாண­வர்­களை அச்­சு­றுத்தி வாக்கு மூலம் பெற்­றமை தொடர்பில் உயர் நீதி­மன்றில் தொட­ரப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மறு நாள் சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை எனும் பெயரில் இந்த நான்கு பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

52 நாள் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் சட்டப் போராட்­டங்­களை முன்னெடுத்­த­மையே ஹிஜாஸை பழி வாங்­கு­வ­தற்­கான கார­ண­மாகும்’ என ரவூப் ஹகீம் குறிப்­பிட்டார்.

நேற்று வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது, சி.ஐ.டி. அதி­கா­ரிகள் கடந்த தவணை உத்­த­ர­வுக்கு அமைய சாட்­சி­களின் சுருக்­கத்தை மேல­திக அறிக்கை ஊடாக மன்றில் சமர்­பித்­தனர். அதில் அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவில் கல்­வி­கற்ற மலிக் எனும் மாண­வனின் வாக்கு மூலம் காணப்­பட்­டது.

சி.ஐ.டி.யின­ருக்­காக அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம மன்றில் ஆஜ­ரா­ன­துடன் சந்­தேக நபர்­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ரவூப் ஹகீம், சட்­டத்­த­ர­ணி­க­ளான நளீம், நிரான் அங்­கிடெல், வஸீமுல் அக்ரம் உள்­ளிட்ட குழு­வினர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

முதலில் விட­யங்­களை முன் வைத்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம, கடந்த தவணை உத்­த­ர­வுக்கு அமைய சாட்சி சுருக்­கத்தை மன்றில் சமர்ப்­பிப்­ப­தாக அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து முதல் சந்­தேக நப­ருக்­காக மன்றில் விட­யங்­களை முன் வைத்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மைத்­தி­ரி­கு­ண­ரத்ன, சாட்­சி­யாளர் என கூறப்­படும் மலிக், நீதிவான் ஒரு­வ­ருக்கு வழங்­கிய வாக்கு மூலம் உள்­ளிட்ட 5 வாக்கு மூலங்­களை வழங்­கி­யுள்ள நிலையில், 2019 முதல் இது­வரை அவ்­வாக்கு மூலங்கள் ஊடாக எழாத நியா­ய­மான சந்­தேகம் 5 வரு­டங்­களின் பின்னர் எப்­படி திடீ­ரென ஏற்­பட்­டது என கேள்வி எழுப்­பினார்.
எனவே சந்­தேக நபர்­களை முற்­றாக விடு­விக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
சட்­டத்­த­ரணி ரவூப் ஹகீம் வாதங்­களை முன் வைக்­கையில், அல் சுஹை­ரியா மத்­ர­சாவில் 40 மாண­வர்கள் இருந்த நிலையில், மலிக் எனும் ஒரு­வரின் வாக்கு மூலத்தில் மட்டும் சட்ட மா அதிபர் தங்­கி­யி­ருப்­பது ஏன் என கேள்வி எழுப்­பி­ய­துடன், ஏனை­யோ­ரிடம் வாக்கு மூலம் பெறப்­பா­டமல் இருப்­பது குறித்து சந்­தேகம் எழுப்­பினார்.

அத்­துடன் அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை பயன்­ப­டுத்­து­வ­தில்லை என சர்­வ­தே­சத்­துக்கு வாக்­கு­றுதி அளித்­து­விட்டு, இங்கு அதனை பயன்­ப­டுத்­து­வது இலங்­கைக்கு ஜெனீவா மனித உரிமை பேரவை வரையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்த வல்­லது என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் வாதங்­களை முன் வைத்த சட்­டத்­த­ரணி நிரான் அங்­கிடெல், மலிக்கின் வாக்கு மூலங்கள் சட்ட மா அதி­ப­ரிடம் இருந்த நிலை­யி­லேயே அதனை ஆராய்ந்து புத்­தளம் மேல் நீதி­மன்றில் இரு குற்றப் பத்­தி­ரி­கைகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், அப்­போது குற்றம் சுமத்­தப்­ப­டாத தமது சேவை பெறுநர் இப்­போது எப்­படி சந்­தேக நப­ரானார் என கேள்வி எழுப்­பினார்.

தனது சேவை பெறு­ந­ரான 80 வய­து­டைய ஹசனார் மரிக்கார், அல் சுஹை­ரியா மத்­ரசா நிர்­வாக சபை தலைவர் எனவும் அவர் உயர் நீதி­மன்­றுக்­க­ளித்த சத்­தியக் கட­தா­சியில் அல் சுஹை­ரி­யாவில் எந்த அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கையும் நடக்­க­வில்லை என கூறி­யுள்ள நிலையில், ஆரம்ப சந்­தர்ப்­பத்தில் அவரை கைது செய்­யாது விட்ட சி.ஐ.டி. இப்­போது எந்த அடிப்­ப­டையில் அவரைக் கைது செய்­தது என அவர் கேவி எழுப்­பினார்.
மொத்­தத்தில் சந்­தேக நபர்கள் அனை­வ­ரையும் விடு­விக்­கு­மாறு சட்­டத்­த­ர­ணிகள் கோரினர். எனினும் அதற்கு பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி ஹிரி­யா­கம கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார்.

சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக ஒரு வாரத்­துக்குள் குற்றப் பத்­தி­ரி­கையை தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுப்­ப­தாக குறிப்­பிட்ட அவர் அது­வரை சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோரினார்.

விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, ஒரு வாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதாக சட்ட மா அதிபர் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை விடுவிப்பது தொடர்பில் தற்போது உத்தரவொன்றினை பிறப்பிப்பதில்லை எனவும், ஒரு வாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் சந்தேக நபர்கள் சார்பிலான வாதங்கள் குறித்து ஆராய்வதாகவும் நீதிபதி அறிவித்து வழக்கை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் அறிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.