குருணாகல் வைத்தியசாலையில் மீண்டும் வைத்தியர் ஷாபி

பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவில் சிசேரியன் சத்திரசிகிச்சையினையும் முன்னெடுத்தார்

0 305

(எம்.எப்.அய்னா)
குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்­தி­ய­ராக ( SHO) மீண்டும் வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

சிங்­கள தாய்­ம­ருக்கு சட்டவிரோ­த­மாக கருத்தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகா­தார அமைச்சு முன்­னெ­டுத்த ஒழுக்­காற்று விசா­ர­ணை­களில் அவர் குற்றச் சாட்­டுக்­களில் இருந்து விடு­வித்து, விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில், வைத்­தியர் ஷாபியை மீண்டும் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லை­யி­லேயே நிய­மனம் வழங்கி கட­மையில் இணைக்க, சுகா­தார அமைச்சு குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு எழுத்து மூலம் அறி­வித்துள்­ளது.

உடன் அமு­லுக்கு வரும் வகையில் வைத்­தியர் ஷாபியை இவ்­வாறு குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­களில் இணைத்­துக்­கொள்ள சுகா­தார அமைச்சு தீர்­மா­னித்­தது.

இந் நிலை­யி­லேயே நேற்று முன் தினம் (30) குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் அங்கு கட­மை­களை பொறுப்­பேற்­றுக்­கொண்டார். அத்­துடன் வழமை போன்றே பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவில் நேற்று முன் தினம் நடந்த சிசே­ரியன் சத்திர சிகிச்சைகளிலும் வைத்தியர் ஷாபி பங்கேற்று வெற்றிகரமாக அந் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். 4 வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் இவ் வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.