பலஸ்தீனின் இன்றைய நிலைக்கு முழு சர்வதேசமும் பொறுப்புக் கூற வேண்டும்

0 367

இலங்­கையில் அமைந்­துள்ள பலஸ்­தீன தூத­ரகம் மற்றும் இலங்கை அர­பு­லக இரா­ஜ­தந்­தி­ரி­கள்­க­வுன்ஸில் என்­பன இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘நக்பா’ பேரிடர் தினத்தின் 75 ஆவ­து­ ஞா­ப­கார்த்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(22) கொழும்பு 07 இல் அமைந்­துள்ள சர்­வ­தேச உற­வு­கள்­மற்றும் மூலோ­பாய கற்­கை­க­ளுக்­கான லக்‌ஷ்மன் கதிர்­காமர் நிறு­வன கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் எதிர்க்­கட்சித் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தலை­வ­ரு­மான சஜித்­பி­ரே­ம­தாச நக்பா தின ஞாப­கார்த்த சிறப்­பு­ரை­யினை நிகழ்த்­தினார். அதன் தமிழ் மொழி­பெ­யர்ப்பு வரு­மாறு:

75 ஆண்­டு­கால தீராத துன்­பங்­க­ளாக, பாலஸ்­தீன அர­சாங்­கத்­தையும் அதன் மக்­க­ளையும் ஒரு பாரி­ய ­ம­னி­தா­பி­மானப் பேர­ழிவு முறை­யாக அழித்­ததை நினை­வு­கூர்­வ­தற்­காக இன்று நாம் இங்­கு­ கூ­டு­கிறோம்.

இலங்­கை­யர்­க­ளான நாம் எப்­போதும் பலஸ்­தீன மக்­களின் பக்கம் நின்று பலஸ்­தீன நாடு என்­ற­ க­ருத்­தாக்­கத்தை நன­வாக்க அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கிறோம். பாலஸ்­தீ­னத்தை சட்­ட­பூர்­வ­மா­ன­தே­சிய நாடா­கவும் ஏற்றுக் கொள்­கிறோம்.

மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், பயங்­க­ர­வாதம், வெறுப்பைப் பரப்­புதல், குடும்பப் பிரி­வி­னை­ போன்­ற­வற்றால் ஏற்­பட்ட 75 ஆண்­டு­கால துன்­பங்­களை இங்கு நினைவு கூர்­கிறோம். ஆயி­ரக்­க­ணக்­கான பாலஸ்­தீன மக்கள் இந்த கொடூ­ர­மான சூழ்­நி­லையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர், இதற்கு சர்­வ­தேச சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாம் அனை­வரும் பொறுப்பு கூற வேண்டும். இந்த ஓயாத பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வரும் துணிவோ வலி­மையோ எங்­க­ளி­டம்­ இல்­லா­ததால் இதற்கு நாமும் பொறுப்­பாக இருக்­கின்றோம்.

இதன் வர­லாற்றின் பல்­வேறு நிகழ்­வு­களை ஆராய்ந்தால், இந்த தீராத மனிதப் பேரி­ட­ருக்­கு­ நீண்­ட­கால தீர்வை வழங்­கு­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபையும் அதன் செயலில் உள்ள உறுப்­பு­நா­டு­களும் பல முயற்­சி­களை மேற்­கொண்­ட­தாகத் தெரி­கி­றது. பல ஆண்­டு­க­ளாக எமக்கு 242/338 இலக்க தீர்­மானம் பற்றி கூறப்­பட்டு வரு­கி­றது. சுய­நிர்­ணய உரி­மையைப் பெறு­வ­தற்­காக பாலஸ்­தீ­ன­மக்­களின் உரி­மையை இலக்கம் 3236 தீர்­மா­னத்தில் விப­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன் பிறகு, ஒஸ்லோ உடன்­ப­டிக்­கையின் முதல் மற்றும் இரண்­டா­வது முயற்­சிகள் இந்த இரண்­டு­எ­தி­ரெதிர் குழுக்­க­ளையும் ஒருங்­கி­ணைத்து தீர்வு காணும் முயற்­சி­க­ளாகும். இது தவிர, கிளின்­டன்­அ­ள­வு­ருக்கள், இரண்டு நாடு­களின் அங்­கீ­காரம் தொடர்­பான தீர்­வுக்கு உத்­த­ர­வாதம் அளிக்­கும்­ ஐக்­கிய நாடு­களின் பாது­காப்பு சபையின் 1397 இலக்க தீர்­மானம், ஐக்­கிய நாடுகள், ஐரோப்­பி­ய­ ஒன்­றியம், அமெ­ரிக்கா மற்றும் ரஷ்­யா­வுக்கு இந்த இலக்­கு­களை அடை­வ­தற்­கான சட்­ட­பூர்­வ­ அ­தி­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது.

நிலை­யான சமா­தா­னத்தை அடை­வ­தற்கு பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், அந்­த மு­யற்­சிகள் அனைத்தும் பேர­ழி­வு­க­ர­மான தோல்­வி­யையே நிரூ­பித்­தன. அமை­திக்­கான அறி­விப்­புகள், வெளி­யீ­டுகள், உரைகள், பிர­க­ட­னங்கள் மற்றும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இருப்­பினும், மத்­திய கிழக்கில் இது­வரை அமைதி இல்லை. பாலஸ்­தீ­னர்­க­ளுக்கும் சமா­தானம் வர­வில்லை. அவர்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­ட­வில்லை, பாலஸ்­தீ­னர்­களின் உரி­மைகள் நாளுக்கு நாள்­ ஒவ்­வொரு நொடியும் தொடர்ச்­சி­யாக மீறப்­ப­டு­கின்­றன.

சர்­வ­தேச சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாம், இந்த மாபெரும் பேரி­டரால் பாதிக்­கப்­பட்­ட­ அ­னை­வரின் கண்­ணி­யத்­தையும் பாது­காப்­ப­தற்­காக, நிலை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­மி­கவும் அவ­சி­ய­மான, சம­ர­சங்­க­ளாக வரும் கடி­ன­மான முடி­வு­களை எடுக்கத் தவ­றி­யதன் மூலம்­வெறும் பார்­வை­யா­ளர்­க­ளாகி விட்டோம்.
இங்கு 75 வரு­டங்­க­ளாக மனித உயிர்கள் பலி­யா­கி­யது மட்­டு­மன்றி இந்த தொடர்ச்­சி­யா­ன­ மோ­தல்­க­ளினால் ஏற்­படும் சமூக விளை­வு­களும் ஆரா­யப்­பட வேண்டும். பாலஸ்­தீன மக்கள் மிகுந்த வறு­மை­யையும், ஆத­ர­வற்ற நிலை­யையும் சந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இந்­த­மோ­தலால் ஏரா­ள­மானோர் வீடு­களை இழந்­துள்­ளனர். மனித பேர­ழிவு கணக்­கிட முடி­யா­தது.

இந்த அவல நிலையை முடி­வுக்கு கொண்டு வர நாம் என்ன செய்ய வேண்டும்? ஐக்­கிய நாடு­கள் ­ச­பையின் பல்­வேறு தீர்­மா­னங்கள் மற்றும் சர்­வ­தேச அறி­விப்­புகள் மூலம் பல சந்­தர்ப்­பங்­க­ளில்­முன்­வைக்­கப்­பட்ட சமா­தானத் தீர்வு நிரந்­தரத் தீர்­வுக்­கான அடிப்­ப­டை­யாகும் என்­பது எங்­க­ளின்­உண்­மை­யான நம்­பிக்கை. அனைத்து பாலஸ்­தீ­னி­யர்­களின் உரிமைகள், கண்ணியம்,கௌரவம்மற்றும் சுயமரியாதையை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் இரு நாட்டுத் தீர்வை நோக்கிமுன்னேற வேண்டும்.

இலங்கையர்களாகிய நாம் எப்போதும் பலஸ்தீனர்களின் எதிர்பார்ப்பை ஆதரித்து வருகிறோம், எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம். எதிர்­கா­லத்தில் பலஸ்­தீன மக்கள் இயக்­கத்தை சர்­வ­தேச அரங்கில் பாது­காக்கும் நடை­மு­றை­சக்­தி­யாக மாற்­றுவோம். நாங்கள் இங்கு வெறும் அறிக்­கை­யாக மாத்­திரம் இத­னை­வ­ரை­ய­றுக்­க­மாட்டோம் என்­ப­தையும் உறு­தி­ய­ளிக்­கிறோம்.

பாலஸ்­தீன மக்­க­ளுக்­கான ஜன­நா­யகம், சமா­தானம்,சுபீட்சம் மற்றும் நிர்­வாக உரி­மை­க­ளை­ந­ன­வாக்கும் வகையில் இலங்கைத் தாயின் பிள்­ளைகள் என்ற வகையில் இந்த யோச­னை­களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.