சட்டமாஅதிபர் திணைக்களத்தால் ஹிஜாஸ் மீது சாட்சியங்கள் இட்டுக்கட்டப்பட்டன

அரசாங்கத்தின் மீது சபையில் குற்றச்சாட்டினார் ரவூப் ஹக்கீம்

0 738

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சட்­டமா அதிபர் திணைக்­களம் சாட்­சி­யங்­களை இட்­டுக்­கட்­டி­யதாக பரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் சபையில் குற்றம் சுமத்­தினார்.

அத்­தோடு, பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ், ஹிஜாஸ், அஹ்னாப் உள்­ளிட்­டோரின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற பொதுப் பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஜனக ரத்­நா­யக்­கவை பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்­கான பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஒரு­வரை நீக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்தில் இவ்­வாறு தீர்­மானம் கொண்டு வரு­வது இதுவே முதற்­த­ட­வை­யாகும். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களின் தலை­வர்­களின் குறை­களை கண்­டு­பி­டிப்­பது அவர்­களின் செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­கான முயற்­சி­யாகும். நிறை­வேற்­றுத்­து­றைக்கு எதி­ராக அந்தக் ஆணைக்­கு­ழுக்கள் செயற்­படும் போது, இவ்­வா­றான செயன்­மு­றையை செய்­கின்­றனர். நிறை­வேற்­றுத்­து­றையின் விருப்­பங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளவே இது மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

அத்­துடன் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. 20 மாதங்­க­ளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார். அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளன. இதே­வேளை கவிஞர் அஹ்னாப் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் தொடர்ந்தும் இந்த சட்டம் தவ­றாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்த சட்டம் தொடர்பில் ஜெனி­வா­விலும் பேசப்­ப­டு­கின்­றது.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாவின் வழக்கில் மூன்று பேரை சீஐ­டி­யினர் சாட்­சி­யங்­க­ளாக கைது செய்து அவர்­களை அச்­சு­றுத்­தி­னார்கள். இதன்­போது ஹிஸ்­புல்­லா­வுக்கு எதி­ராக சாட்­சி­யங்­களை இட்­டுக்­கட்­டி­னார்கள். சட்­டமா அதிபர் திணைக்­களம் அர­சாங்­கத்தின் ஆலோ­ச­க­ராக இருக்­கின்­றது. இந்த திணைக்­களம் சீஐ­டியின் சில கார­ணங்­க­ளுக்­காக சாட்­சி­யங்­களை இட்­டுக்­கட்டி இப்படி மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இது பாரதூரமான அடிப்படை உரிமை மீறலாகும். அதனால் நீதிமன்றத்தில் வழக்குகள் முடியாமல் இருக்கின்றன. சாட்சியங்கள் இட்டுக்கட்டப்படுகின்றன. இதனை சரியான இடங்களில் பேச வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.