முழு நாட்டையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய முனவ்­வ­ராவின் படு­கொலை…

0 370

எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலி­ஓயா

கண்டி மாவட்ட முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மகா­வலி கங்­கையை அண்­டிய ஆற்­றங்­கரை முஸ்லிம் குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு தனிச்­சி­றப்­பு­மிக்க வர­லா­றுண்டு. இதில் உலப்­பனை, கம்­பளை, எல்­பி­டிய, கலு­க­முவ, கெட்­டம்பே முத­லா­னவை ஆற்­றங்­கரை முஸ்லிம் குடி­யி­ருப்­புக்­களின் வரி­சையில் அடங்­கு­கின்­றன.

பழைய எல்­பி­டிய குடி­யி­ருப்பு
வெலி­கல்ல, எல்­பி­டிய முஸ்லிம் குடி­யி­ருப்பு வர­லாற்று சிறப்­பு­மிக்க பான­பொக்க குடும்­பத்­தி­னரின் வளவை அண்­டிய மகா­வ­லி­யுடன் ஒட்­டிய இயற்கை எழி­ல்மிக்க பிர­தே­ச­மாகும். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி மகா­வலி கங்­கையில் ஏற்­பட்ட பெரு வெள்­ளத்­தினால் இக்­கு­டி­யி­ருப்பு பெரும் சேதத்­திற்­குள்­ளாகி அழி­வ­டைந்­தது.

இதனால் எல்­பி­டிய முஸ்லிம் குடி­யி­ருப்பில் வசித்த குடும்­பங்கள் ஊரை விட்டு வெளி­யேறி கெலி­ஓயா, நியு­எல்­பி­டிய பகு­தியில் குடி­யே­றின. வெள்­ளத்­தினால் அழி­வ­டைந்த எல்­பி­டிய முஸ்லிம் குடி­யி­ருப்பு பெரு வெள்­ளத்தின் பின்பு பழைய எல்­பி­டிய என்ற பெயரில் அழைக்­கப்­ப­ட­லா­யிற்று.

இப்­ப­ழைய எல்­பி­டிய குடி­யி­ருப்பில் 1990 களின் ஆரம்­பத்தில் வெவ்­வேறு பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்கள் வந்து மீள­கு­டி­ய­மர்ந்­தனர். இதனால் எல்­பி­டிய முஸ்லிம் குடி­யி­ருப்பு மீண்டும் எல்­பி­டிய கிரா­ம­மாக எழுச்சி பெற்­றது. இக்­கி­ரா­மத்­திற்கு பழை­மை­மிக்க தர்ஹா பள்­ளி­வா­சலும் அழகு சேர்த்­தது.

இப்­ப­குதி முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் அன்­றாட கூலி வேலை செய்­ப­வர்­க­ளா­கவும் கம்­பளை, வெலி­கல்ல, கெலி­ஓயா, கண்டி முத­லான நக­ரங்­களில் சிறு வர்த்­த­கங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளா­கவும் வர்த்தக நிலை­யங்­களில் வேலை செய்­ப­வர்­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றனர். இதனால் இம்­மக்­களின் பொரு­ளா­தார நிலை மிகப் பின்­தங்­கிய நிலையில் காணப்­ப­டு­கின்­றது.

இக்­கி­ரா­மத்­திற்கு செல்­வ­தற்கு இரண்டு பிர­தான பாதைகள் காணப்­ப­டு­கின்­றன. ஒன்று கம்­பளை – பேரா­தனை பிர­தான வீதியில் வெலி­கல்ல நகரில் இருந்து செல்லும் 2 கிலோ மீற்றர் தூர­மான பாதை. மற்­றை­யது கெலி­ஓயா நகரில் கலு­க­முவ ஊடாக செல்லும் பாதை. இன்­னு­மொரு ஒற்­றை­யடிப் பாதை பொல்­க­ஹ­அங்­கயில் இருந்து காட்டுப் பகு­தி­யி­னூ­டாக செல்லும் பாதை­யாகும்.

இப்­பா­தைகள் யாவும் மக்கள் நட­மாட்டம் மிகக் குறைந்த பாதை­க­ளாகும். இப்­பா­தை­களில் கடந்த காலங்­களில் வழிப்­பறிச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர். மேலும், இவை போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்­களின் நட­மாட்டம் கொண்ட பாதை­க­ளாக காணப்­ப­டு­வதால் இரவு நேரங்­களில் மட்­டு­மன்றி பகல்­கா­லங்­கலும் தனி­யாக பய­ணிப்­பதில் ஆபத்­து­மிக்க பாதை­க­ளாகக் காணப்­ப­டு­வ­தாக பிர­தே­ச­வா­சிகள் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்­தனர்.

பாத்­திமா முனவ்­வரா
பாத்­திமா முனவ்­வரா (22 வயது) மூன்று சகோ­த­ரர்­களைக் கொண்ட குடும்­பத்தில் இளை­ய­வ­ராவார். இவரின் குடும்பம் உடு­நு­வர – மீவ­ல­தெ­னிய பகு­தியில் வசித்து, கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்பு இப்­ப­கு­தியில் குடி­யே­றி­யுள்­ளது.

பாத்­திமா முனவ்­வரா சிங்­கள மொழி­மூலம் கண்டி லும்­பிணி மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயின்றார். இவர் சிங்­கள மொழியில் நன்கு தேர்ச்சி பெற்­றி­ருந்தார். இவரின் தந்தை முச்­சக்­க­ர­வண்டிச் சார­தி­யாவார். இவரின் சகோ­த­ரர்கள் வாகனம் திருத்­துதல் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களில் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர்.

பாட­சாலைக் கல்­வியை நிறைவு செய்த முனவ்­வ­ரா­வுக்கு தாதியர் பணி மீது அதீத ஆர்வம் காணப்­பட்­டது. அவரின் தாயார் நீண்டகா­ல­மாக பாரி­ச­வாத நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதும் இதற்­கொரு கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம். இவர் தாதியர் பயிற்­சியை பெற்­றுக்­கொண்­ட­துடன் வீட்டில் தனது அன்புத் தாயாரை கவ­னித்து வந்தார்.
இதற்­கி­டையில் தாதியர் சேவை­யுடன் தொடர்­பு­டைய பார்­ம­ஸியில் பணி­யாற்றும் வாய்ப்­பொன்று கிடைத்­த­மையை முனவ்­வரா விரும்பி ஏற்றுக் கொண்டார். இதனால் கடந்த நான்கு மாதங்­க­ளாக அவர் கெலி­ஓ­யாவில் அமைந்­துள்ள குறித்த பார்­ம­ஸியில் பணி­யாற்றி வந்தார்.

எதிர்­பா­ராத அதிர்ச்சி
களுத்­துறையில் 16 வயது மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்­பவம் நாட்டு மக்கள் மத்­தியில் அதிர்ச்­சி­யையும் கவ­லை­யையும் எற்­ப­டுத்­தி­யி­ருந்த தருணம். இச்­சம்­பவம் நடை­பெற்று சில தினங்கள் மட்டும் கடந்து விட்ட நிலையில், கண்டி மாவட்­டத்தில் அமைந்­துள்ள வெலி­கல்ல, எல்­பி­டிய கிரா­மத்தில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை தான் பணி­பு­ரியும் பார்­ம­ஸிக்கு வேலைக்குச் செல்­வ­தாக அன்புத் தாயா­ரிடம் விடை­பெற்றுச் சென்ற பாத்­திமா முனவ்­வரா பார்­ம­ஸியை சென்­ற­டை­ய­வில்லை. இது தான் முனவ்­வ­ராவின் சோக கதையின் ஆரம்பம். இது நாட்­டுக்கு மற்­று­மொரு அதிர்ச்­சி­யையும் சோகத்­தையும் கொண்டு வரும் என்று யாரும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

12 ஆம் திகதி சம்­பவ தினம்
சம்­பவ தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கண்டி மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் அதி­காலை 4 மணி முதல் கடும் மழை பெய்து கொண்­டி­ருந்­தது. இம்­ம­ழை­யினால் கம்­பளை, வெலி­கல்ல, எல்­பி­டிய, கலு­க­முவ, உடு­நு­வர உட்­பட பல பகு­தி­க­ளிலும் இருள் சூழ்ந்த கால­நிலை நிலவிக் கொண்­டி­ருந்­தது.

அன்­றைய தினமும் வழமை போல் அதி­கா­லையில் தூக்கம் கலைந்து எழும்­பிய முனவ்­வரா தொழுது விட்டு குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாமல் தனது தாயா­ருக்கு செய்ய வேண்­டிய பணி­வி­டை­களை செய்தார். அதன் பின்னர் சோறு மற்றும் கீரைக் கறியை சமைத்து எடுத்துக் கொண்டு வேலைக்குப் புறப்­படத் தயா­ரா­கிறார்.

மழை விடாமல் பெய்து கொண்­டி­ருப்­பதால் குடை­யொன்றை பிடித்துக் கொண்டு காலை 8.15 அளவில் தன்னை நிழலாய்த் தொடரும் ஆபத்தை அறி­யாத நிலையில் வெலி­கல்ல நகரம் வரை செல்லும் சுமார் 2 கிலோ­மீற்றா தூரப் பாதையில் முனவ்­வரா நடக்க ஆரம்­பிக்­கின்றாள். மழைக்கு மத்­தியில் வேக­மாக முனவ்­வ­ராவின் நடை தொடர்­கின்­றது.
இக்­காட்சி முனவ்­வ­ராவின் வீட்டில் இருந்து சுமர் 100 மீற்றர் தூரத்தில் அமைந்­துள்ள ஜும்ஆ பள்­ளி­வாசல் சீ.சீ.டி.வி கெம­ராவில் தெளி­வாகப் பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் அதிர்ச்­சிக்­கு­ரிய விடயம், பள்­ளி­வா­ச­லுக்கு அடுத்­த­தாக சுமார் 600 மீற்றர் தொலைவில் வீடொன்றில் பொருத்­தப்­பட்­டுள்ள சீ.சீ.டி.வி கெம­ராவில் முனவ்­வரா நடந்து செல்லும் காட்சி பதி­வா­காமல் முன்­னவ்­வரா மறைந்து போகின்றாள்.

கெலி­ஓயா நகரில் அமைந்­துள்ள முனவ்­வரா பணி­பு­ரியும் பார்­ம­ஸியின் உரி­மை­யாளர் ஆர்.எம். சியாத் மட­வளை பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவர். அவர் வழ­மை­யாக ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தாம­த­மாகி பார்­ம­ஸிக்கு வரு­வதால் முன்ை­னய தினம் பார்­மஸி சாவியை முனவ்­வ­ரா­விடம் ஒப்­ப­டைத்து விட்டுச் செல்­வது வழக்கம். சம்­பவம் இடம்­பெற்ற தினமும் பார்­ம­ஸியின் சாவி முனவ்­வ­ரா­விடம் கைவசம் இருந்­தது.

சம்­பவ தினம் முனவ்­வரா காலை 11 மணி வரை பார்­ம­ஸியை வந்து சேரவில்லை என்ற தகவல் பார்­ம­ஸியின் உரி­மை­யா­ளரால் முனவ்­வ­ராவின் சகோ­தரன் எம்.ஜே.எம். இம்­ரா­னுக்கு தொலை­பே­சியில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கொழும்பில் இருந்த இம்ரான் உட­ன­டி­யாக தனது தாயா­ருடன் தொடர்பு கொண்­டுள்ளார். எனினும், அவரின் தாயா­ருக்கு அப்­போது எதுவும் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில், முனவ்­வ­ராவின் தொலை­பே­சிக்கு அழைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அவரின் தொலை­பேசி செய­லி­ழந்து காணப்­பட்­டதால் பதில் எதுவும் கிடைக்­க­வில்லை. இதனால் முனவ்­வரா பற்­றிய எது­வித தக­வல்­க­ளையும் சம்­பவ தினம் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. முனவ்­வ­ரா­வுக்கு என்ன நடந்­தது? முனவ்­வரா எங்கே போனாள்? என்­ப­தெல்லாம் சம்­பவ தினம் முதல் விடை­தெ­ரி­யாத கேள்­வி­க­ளாக மாறின.

முனவ்­வரா மீது எது­வித குற்­றச்­சாட்­டுக்­களும் சந்தேகமும் இருந்­த­தில்லை. அமை­தியும் ஒழுக்­கமும் கொண்­டவர். பிறரைப் பற்றி கதைப்­ப­வ­ரல்லர். எப்­போதும் தனது கரு­மங்­களில் கருத்தாய் இருப்­பவர் என்று முனவ்­வ­ராவைப் பற்றி பிர­தேச மக்கள் மத்­தியில் மிகுந்த மிக நல்­ல­பிப்­பி­ராயமே காணப்­ப­ட்டது.

பொலிஸ் முறைப்­பாடு
இந்­நி­லையில் முனவ்­வ­ராவின் தந்தை முஹம்மத் ஜின்னாஹ் மற்றும் சகோ­தரர் இம்ரான் ஆகியோர் அன்­றைய தினம் இரவு கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் முனவ்­வரா காணாமல் போனமை பற்றி முறைப்­பா­டொன்றைப் பதிவு செய்­தனர்.

முனவ்­வரா காணாமல் போன விடயம் மறுநாள் திங்­கட்­கி­ழமையாகியும் ஊரில் பல­ருக்கு தெரிந்­தி­ருக்­க­வில்லை. முனவ்­வ­ராவின் வீட்டாரே தேடிக் கொண்­டி­ருந்­தனர். இவ்­வாறு இரு நாட்கள் கழியும் போது சமூக ஊட­கங்­களில் முனவ்­வரா காணாமல் போன விடயம் வெளி­வரத் தொடங்­கி­யது. இதனைப் பலரும் சமூக ஊட­கங்­களில் பகிர ஆரம்­பித்­தனர்.

முனவ்­வ­ராவைத் தேடிக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான முயற்­சிகள் தொடர்­ந்தன. எல்­பி­டிய முதல் வெலி­கல்ல வரை­யி­லான பாதையில் அமைந்­துள்ள வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள சீ.சீ.டி.வி கெம­ராக்கள் கண்­கா­ணிக்­கப்­பட்­டன.
கம்­பளை பொலிஸார் பல கோணங்­களில் விசா­ர­னை­களை ஆரம்­பித்­தனர். சீ.சீ.டி.வி கெம­ராக்கள் பொலி­ஸாரின் தீவிர கண்­கா­ணிப்­புக்­குள்­ளா­கின. முன்­னவ்­வரா பற்­றிய எது­வித தட­யங்­களும் கிடைக்­காத நிலையில் எல்­பி­டிய ஜும்ஆ பள்­ளி­வா­சலில் பொருத்­தப்­பட்­டுள்ள சீ.சீ.டி.வி கெம­ராவில் முனவ்­வரா நடந்து செல்லும் போது அவரைத் தொடர்ந்து செல்லும் இளை­ஞனின் பக்கம் பொலி­ஸாரின் சந்­தேகம் திரும்­பி­யது.

சந்­தேக நபர் பொலிஸ் வலையில்
இந்த இளைஞன் முனவ்­வரா வசிக்கும் பகு­தியில் வசித்து வரு­ப­வ­ராவார். ஆடுகள் வளர்க்கும் இச்­சந்­தேக நபர் அவற்­றுக்கு புற்கள் வெட்­டு­வ­தற்­காக அப்­ப­கு­தியில் தினமும் சுற்றித் திரி­பவர். இவர் பற்­றிய மேலும் பல தக­வல்­களைத் திரட்­டிய பொலிஸார் அவரைப் பின்­தொ­டர்­கின்­றனர். அவரின் நட­வ­டிக்­கைகள் பொலி­ஸாரின் கவ­னிப்புக்­குட்­பட்டு வந்­தன.

இவரின் வாக்­கு­மூ­லத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பொலிஸார் முயற்­சித்­தனர். இந்­நி­லையில் சந்­தேக நபர் நழுவிச் செல்ல முற்­பட்ட நிலையில் இவர் மீது பொலி­ஸாரின் சந்­தேகம் அதி­க­ரிக்க ஆரம்­பிக்­கின்­றது. எனவே, நிலை­மையை புரிந்து கொண்ட கம்­பளை பொலிஸார் 24 வய­து­டைய இச்­சந்­தேக நபரை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கம்­ப­ளை­வெல பகு­தியில் கைது செய்­தனர். அவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர விசா­ர­னை­களின் போது முனவ்­வ­ராவின் படு­கொலை தொடர்­பான திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­வரத் தொடங்­கின. சந்­தேக நபர் முனவ்­வ­ராவை படு­கொலை செய்து காட்­டுப்­ப­கு­தியில் குழி தோண்டி புதைத்த விடயம் வெளிச்சத்துக்கு வந்­தது.

முனவ்­வ­ரா­வுக்கு நடந்­தது என்ன?
சம்­பவ தினம் தான் ஆடு­க­ளுக்கு புல் வெட்டிக் கொண்­டி­ருந்த போது முனவ்­வரா பாதை வழியே நடந்து வரு­வதைக் கண்­ட­தா­கவும் தான் அவரின் அருகில் சென்று கையைப்­பி­டித்து அழைத்த போது, கோப­ம­டைந்த முனவ்­வரா “உன்னை வாப்­பா­விடம் சொல்லிக் கொடுப்­ப­தாக” ஏசி கத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார். அவர் ஆவே­சப்­பட்ட நிலையில், இச்­சம்­ப­வத்தை எப்­ப­டியும் முனவ்­வரா வாப்­பா­விடம் கூறி­வி­டுவார் என்று அஞ்­சிய சந்­தேக நபர் முனவ்­வ­ராவின் வாயை தனது கைகளால் இறுகப் பொத்­தி­ய­வாறு காட்­டுப்­ப­கு­திக்கு இழுத்துச் சென்­றுள்ளார்.

அங்கு, முனவ்­வ­ராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சட­லத்தை புதைத்­துள்­ள­தாக பொலி­ஸாரின் ஆரம்ப விசா­ர­னை­களில் தெரிய வந்­தது.
இதனைத் தொடர்ந்து சந்­தேக நபர் முனவ்­வ­ராவை புதைத்த இடத்தை காட்­டுப்­ப­கு­தியில் தென்­னந்­தோப்­புக்குள் அடை­யாளம் காட்­டி­யதைத் தொடர்ந்து பொலிஸார் அப்­ப­கு­தியில் பாது­காப்பை பலப்­ப­டுத்­தினர்.

இச்­சம்­ப­வத்தை எல்­பி­டிய மக்­களால் நம்ப முடி­யாமல் போனது. இதனைக் கேள்­விப்­பட்ட பிர­தேச சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பீதிக்­குள்­ளா­கினர். எல்­பி­டிய பகு­தியில் வெள்­ளிக்­கி­ழமை மாலை மக்கள் மத்­தியில் பதற்­றமும் பீதியும் அதி­க­ரித்­தது. இக்­கொ­லைச்­ சம்­பவம் எல்­பி­டிய பகுதி முஸ்­லிம்­களை தலை­கு­னிய வைத்த சம்­ப­வ­மாக மாறி­யது. இந்­நி­லையில் ஆவே­ச­ம­டைந்த பிர­தே­ச­வா­சிகள் சந்­தேக நபரின் வீடு அமைந்­துள்ள பகு­திக்கு படை­யெ­டுத்­த­மையைக் காண முடிந்­தது.

சடலம் தோண்டி எடுப்பு
படு­கொலை செய்­யப்­பட்ட முனவ்­வ­ராவின் சடலம் மறுநாள் சனிக்­கி­ழமை பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் கம்­பளை நீதி­மன்ற பதில் நீதவான், சட்ட வைத்­திய அதி­காரி, கிராம சேவகர், குடும்­பத்­தினர் முன்­னி­லையில் தோண்டி எடுக்­கப்­பட்­டது.

இதில் முனவ்­வ­ராவின் சட­லத்­துடன் சேர்த்து புதைக்­கப்­பட்­டி­ருந்த அவரின் கைப்பை, பக­லு­ணவு பார்சல் என்­பன மீட்­கப்­பட்­டன. மேலும், முனவ்­வ­ராவின் தண்ணீர் போத்தல், கைக்­க­டி­காரம், மண்­வெட்­டித்­தலை, புடவை கிழித்­தெ­றி­யப்­பட்ட உடைந்த கம்­பி­களைக் கொண்ட குடை என்­ப­னவும் காட்­டுப்­ப­கு­தியில் வீசப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­டன. இப்­பொ­ருட்­களை முனவ்­வ­ராவின் தந்தை ஜின்னா அடை­யாளம் காட்­டினார்.

 

முனவ்­வ­ராவின் சடலம் மீட்­கப்­பட்ட போது அப்­ப­கு­தியில் பெருந்­தி­ர­ளான சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் திரண்­டி­ருந்­தனர். சடலம் தோண்டி எடுக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் உற­வி­னர்கள், பாட­சாலை நண்­பிகள், அயலார் என்று பலரும் சத்­த­மிட்டு கதறி அழு­ததைக் காண முடிந்­தது. அவரின் சடலம் பிரேத பரி­சோ­தனை மற்றும் விசா­ர­னைக்­காக கண்டி போதனா வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டது.

சந்­தேக நபர் வெளி­யிட்ட ஓடியோ
முனவ்­வரா படு­கொ­லை சந்­தேக நபர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து சந்­தேக நப­ரினால் வெளி­யி­டப்­பட்­ட­தாக கூறப்­படும் ஒடியோ பதி­வொன்று சமூக ஊட­கங்­களில் பரவ ஆரம்­பித்­தது. அதில் பின்­வ­ரு­மாறு சந்­தேக நபர் பதி­விட்­டி­ருந்தார்.

‘‘ஏன்ட பெயர்தான் அஹமட்.
நான் பழைய எல்­பி­டிய ஸ்கூல்­லதான் படிச்சேன்.
நான் பொறந்­தது 1998 இல… ஏன்ட ஐடின்டி நம்பர் வந்து…
நான் பழைய எல்­பிட்டி அல் – அமான் ஸ்கூல்­லதான் படிச்சேன்.
அப்­படி படிச்சிக் கொண்­டி­ருக்கும் போது நல்­லாதான் இருந்தேன்
கடை­சி­யில என்­னா­விச்­சின்னா ஏன்ட வாழ்க்­கை­யில போதை பரவி..
கஞ்சா குடிக்­கி­ற­துக்கு பழவி
கடை­சில என்ன செஞ்­சேன்னா…. நான் ஒரு கொலை­கா­ர­னா­கிட்டேன்
எல்லாம் இந்த கஞ்­சா­வால … அந்த குழி­யால தான் ரோட்­டுல போற புள்­ள­யொண்­டு­கிட்ட சல்லி கேட்டு போனேன்
சல்லி கேட்டு போன பொறவு….. புள்­ள­யோட வாய்த்­தர்க்­க­மாகி அதோட
அந்த புள்ள எனக்கு கைய ஓங்க
நானும் கைய ஓங்க
கழுத்தை புடிச்சி நெசிக்­கினேன்
நெசிக்­கின ஒடனே அந்த புள்ள ெமளத்­தா­கி­டுச்சி
இப்ப ஏண்ட வாழ்க்க முடிஞ்சி…’’என்று தொடர்­கின்­றது.

ஓடி­யோவில் சந்­தேகம்
சந்­தேக நபர் வெளி­யிட்ட ஓடியோ பதிவு சமூக ஊட­கங்­களில் வைர­லா­கி­யது. இந்­நி­லையில் இந்த ஓடியோ மக்­களை திசை திருப்­பு­வ­தற்­கா­­கவும் அனு­தா­பத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவும் பதி­வி­டப்­பட்­டுள்­ள­தாக முனவ்­வ­ராவின் குடும்­பத்­தினர் தெரி­விக்­கின்­றனர்.

“எனது தங்கை அநி­யா­ய­மாக கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இக்­கொ­லையை செய்­தவர் எங்­க­ளுக்குள் இருந்­துள்ளார். அவரை அவரின் குடும்­பத்­தினர் பாது­காத்­துள்­ளனர். நாம் தங்­கையை தேடிய போது அவர்கள் எம்மை பிழை­யான வழியில் வழி நடாத்த முற்­பட்­டுள்­ளனர் என்று தெரி­கின்­றது. எங்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். தங்கை திரும்பி வரப்­போ­வ­தில்லை. ஆனால் இது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெ­றாது தடுக்­கப்­ப­டு­வ­தற்கு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும்” என்று முனவ்­வ­ராவின் சகோ­தரன் இம்ரான் தெரி­வித்தார்.

முனவ்­வரா பணி­யாற்­றிய
பார்­மஸி உரி­மை­யாளர்
முனவ்­வரா கெலி­ஓயா நகரில் அமைந்­துள்ள பிர­பல பார்­ம­ஸி­யொன்றில் பணி­யாற்றி வந்தார். இதனால், கெலி­ஓயா நகரில் பலரும் அவரை நன்­க­றிந்­தி­ருந்­தனர்.
“முனவ்­வரா மிகவும் அமை­தி­யா­னவர். அவர் மார்க்­கப்­பற்று நிரம்­பிய யுவ­தி­யாவார். அவர் யாரு­டனும் நேருக்கு நேர் நின்று கதைக்க மாட்டார். அவர் நேரத்­திற்குத் தொழு­கைக்கு செல்வார். தொழு­வ­தற்குத் தேவை­யான காலு­றை­க­ளையும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வருவார். சம்­பவ தினமும் எடுத்துக் கொண்டு வந்­தி­ருந்தார் என்­பதை அவரின் சட­லத்­துடன் மீட்­கப்­பட்ட பொருட்­களை நோக்கும் போது அறிந்து கொள்ள முடி­கின்­றது” என்று பார்­மஸி உரி­மை­யாளர் ஆர்.எம். சியாத் விடி­வெள்­ளிக்கு தெரி­வித்தார்.

ஜனாஸா உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பு
முனவ்­வ­ராவின் ஜனாஸா ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் 11 மணி­ய­ளவில் அவரின் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து ஜனாஸா நல்­ல­டக்கம் பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் எல்­பி­டிய தர்ஹா பள்­ளி­வாசல் மைய­வா­டியில் இடம்­பெற்­றது.
ஜனா­ஸாவில் பெருந்­தி­ர­ளான மூவின மக்­களும் கலந்து கொண்­டனர். ஜனாஸா நல்­ல­டக்கம் இடம்­பெற்ற சந்­தர்ப்­பத்தில் சந்­தேக நபரின் வீடு அமைந்­துள்ள பகு­தியில் பொலிஸார் விசேட பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 

உடு­நு­வர பிர­தேச முன்னாள் காதி நீதவான் மௌலவி இஸட்.ஏ.எம். ஹனிபா சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களில் திரண்­டி­ருந்தோர் மத்­தியில் உரை­யாற்­றினார். அத்­துடன், மௌலவி அமீர் ஹம்ஸா (ரப்­பானி) பள்­ளி­வாசல் இமாம்­க­ளான மௌலவி மூசின் மற்றும் மௌலவி ஆதில் ஆகியோர் மார்க்க கட­மை­களை நிறை­வேற்றி வைத்­தனர்.

முனவ்­வரா வாழ்க்­கையின் மேடு, பள்­ளங்­களில் பய­ணித்துக் கொண்­டி­ருந்­தவர். இம்­மேடு பள்­ளங்கள் மீதான அவரின் பயணம் முனவ்­வ­ராவை பிழை­யான முடி­வு­களின் பக்கம் இட்டுச் செல்­ல­வில்லை. காரணம் முனவ்­வரா சிறு வயது முதல் வாழ்­வியல் மற்றும் சமூக யதார்த்­தங்கள் மீது ஆழ­மான புரி­தலைக் கொண்­டி­ருந்தார். அவர் தனது வாழ்வின் சிக்கல்களில் இருந்து வெளி­வர துடித்தார். இதற்­காக கடும் முயற்சி எடுத்தார். ஆனால், அவரை சமூகம் கண்டு கொள்­ள­வில்லை என்­பது மிகக் கவ­லைக்­கு­ரி­யது. இது போன்ற எத்­த­னையோ முனவ்­வ­ராக்கள் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சமூக நிறுவனங்களின் பார்வை இவர்களின் பக்கம் திரும்ப வேண்டும்.

உயர்ந்த மினாராக்களை கட்டி அழகு பார்த்துக் கொண்டிருப்பவர்களும் வேறுபல துறைகளில் கோடிக்கணக்கில் கொட்டிக் கொண்டிருப்பவர்களும் முனவ்வராக்கள் பக்கம் சிந்திக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என்ற உண்மையை சொல்லியாக வேண்டும்.

எமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிக்கும் முனவ்வராக்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த உலமாக்கள், சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகங்கள் முன்வர வேண்டும். சமூகப் பிரச்சினைகளை வாரத்திற்கொரு முறை நடைபெறும் உணர்ச்சியூட்டும் குத்பா பிரசங்கங்களால் மட்டும் தீர்த்து விட முடியாது. சமூகப் பிரச்சினைகள் மக்கள் மயப்படுத்தப்படுவது போல் தீர்வுகளும் இனங்காணப்பட்டு செயலுருவாக்கம் பெற வேண்டும்.

முனவ்வராவின் சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இது வெறுமனே ஒரு படுகொலைச் சம்பவமாக மாத்திரம் மாறிவிடக்கூடாது. இதில் இருந்து சமூகத்தில் திருப்புமுனைகள் ஏற்பட வேண்டும்.
இச்சம்பவத்தின் சந்தேக நபர் தனது ஓடியோவில் வெளியிட்ட போதைப்பொருள் விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் சிந்தித்து செயற்படாத வரை முஸ்லிம் சமூகம் இப்பிரச்சினைகளில் இருந்து ஒருபோதும் வெளிவர போவதில்லை.

முஸ்லிம் சமூகம் எம்மில் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை புனருத்தாரணம் செய்வதற்கான ஒரு நிலையத்தையாவது நிறுவிக் கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ளது என்ற உண்மையை உணர்வோமாக.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து சமூக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உரிய திட்டமிடல்களை முன்னெடுத்து இப்புனருத்தாரண நிலையங்களை முஸ்லிம் பிரதேசங்களில் விரைவில் உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.