மஹர பள்ளிவாசலுக்கு மாற்றீடு வழங்காமையினால் சிரமத்தில் மக்கள்

0 293

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல தசாப்த கால­மாக ஆங்­கி­லேயர் ஆட்சி முதல் இயங்கி வந்த மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் சிறைச்­சாலை நிர்­வா­கத்தால் மூடப்­பட்டு 4 வருட கால­மா­கியும் பள்­ளி­வா­சலை இட­மாற்­றிக்­கொள்ள மாற்­றுக்­காணி வழங்­கப்­ப­டா­மை­யினால் இப்­ப­குதி மக்கள் சமய கட­மை­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் தெரி­விக்­கி­றது.

இது தொடர்பில் உரிய அதி­கா­ரி­க­ளுக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் முறை­யிட்டும் உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என சிறைச்­சாலை வளா­கத்­தினுள் இயங்கி வந்த பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை தெரி­விக்­கி­றது.
உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்­டு­தாக்­கு­தலின் பின்பு பாது­காப்பு காரணம் கருதி சிறைச்­சாலை நிர்­வாகம் பல தசாப்த கால­மாக இயங்கி வந்த பள்­ளி­வா­சலை கையேற்று, முஸ்­லிம்­க­ளுக்கு தடை செய்து, அதனை சிறைச்­சாலை ஊழி­யர்­களின் ஓய்வு அறை­யாக மாற்­றிக்­கொள்­ளப்­பட்­ட­துடன் அங்கு புத்தர் சிலை­யொன்றும் வைக்கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ இதற்­கான காணி­யொன்­றினை ஒதுக்கிக் கொடுப்­ப­தற்கு இணங்கி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரை இது தொடர்பில் சிறைச்­சாலை ஆணை­யாளர் நாய­கத்தைத் தொடர்பு கொள்­ளு­மாறு பணித்­தி­ருந்தும் இதில் தொடர்ந்தும் கால­தா­மதம் ஏற்­பட்டு வரு­வ­தாக பள்­ளி­வாசல் நிர்­வாகம் கவலை தெரி­வித்­துள்­ளது.

மஹர சிறைச்­சாலை வளாக மைய­வா­டிக்கு அருகில் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு காணி­யொன்று இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இக்­கா­ணியை சிறைச்­சாலை ஆணை­யாளர் நாயகம் ஒதுக்கித் தந்தால் அவ்­வி­டத்தில் தங்­க­ளது செலவில் புதி­தாக பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தா­கவும் சுற்­று­மதில் அமைத்துக் கொள்­வ­தா­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லுல்கள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­துள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்­சாரின் பதவிக் காலத்­தின்­போது திணைக்­க­ளத்தில் அதி­கா­ரிகள் கள­வி­ஜ­யத்­தினை மேற்­கொண்டு காணியை இனங்­கண்டு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலின் பின்பு சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் மூடப்­பட்­டதால் இப்­ப­கு­தியில் வாழும் மலே சமூ­கத்­தினர் உட்­பட சுமார் 80க்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கானோர் ஜும்ஆ தொழுகை உட்­பட ஐவேளைத் தொழு­கை­க­ளுக்­காக பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

மஹ­ர­யி­லி­ருந்து 6 கிலோ மீட்­டர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள மாபோல பள்­ளி­வாசல், 4 ½ கிலோ மீட்­டர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள எண்­டே­ர­முள்ள பள்­ளி­வாசல், 5 ½ கிலோ மீட்­டர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள அக்பர் டவுண் பள்­ளி­வாசல் என்­ப­ன­வற்­றுக்கு இவர்கள் செல்ல வேண்­டிய நிலை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லைமை கார­ண­மாக வயோ­தி­பர்­களும், நோய்­வாய்ப்­பட்­ட­வர்­களும் பள்ளிவாசலுக்குச் செல்லமுடியாதுள்ளனர். மஹர சிறைச்­சாலை வளாக பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் அண்­மையில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் நீதி­ய­மைச்­ச­ரிடம் பாரா­ளு­மன்­றத்தில் வின­வி­ய­போது முஸ்­லிம்­க­ளுக்கு அப்­ப­கு­தியில் தொழு­வ­தற்கு பள்­ளி­வா­ச­லொன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்கு பொருத்­த­மான காணி­யொன்­றினை இனங்­கா­ணு­மாறு ஜனா­தி­பதி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ளரை அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக ள்ளதாக அவர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.