திருத்தக் குழுவின் சிபாரிசுகளை ஆராய முஸ்லிம் எம்.பி.க்கள் 24 இல் கூடுவர்

பெண்களின் கோரிக்கை குறித்து அவதானம் என்கிறார் பௌஸி

0 249

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­மொ­ழிந்­துள்ள சிபா­ரி­சு­களை ஆராய்ந்து தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தயா­ரா­கி­யுள்­ளனர். இதற்­கென முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் 24 ஆம் திகதி பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் ஒன்றுகூடி கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். இக்­க­லந்­து­ரை­யா­ட­லுக்கு சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம் பெளஸி தலைமை வகிக்­க­வுள்ளார்.

இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது முஸ்லிம் பெண்­களின் கோரிக்­கைகள் ஆரா­யப்­பட்டு ஷரீ­ஆ­வுக்கு முர­ணற்ற வகையில் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­படும். அத்­தோடு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது. உலமா சபையின் கருத்­து­க­ளையும் செவி­ம­டுத்த பின்பே சட்­ட­தி­ருத்­தங்கள் இறுதி செய்­யப்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெளஸி ‘விடி­வெள்­ளிக்கு’ தெரி­வித்தார்.

சட்­டத்­தி­ருத்தம் தொடர்பில் தீர்­மானம் மேற்­கொள்­வ­தற்­காக கடந்த 10 ஆம் திகதி நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பாரா­ளு­மன்ற கட்­டிடத்­தொ­கு­திக்கு அழைத்­தி­ருந்தார். அத்­தோடு காதி­நீ­தி­மன்ற நட­வ­டிக்­கை­களால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் 20 பேரும் நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்து அன்­றைய தினம் சமுக­ம­ளித்­தி­ருந்­தனர். என்­றாலும் அன்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமை தவிர ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் கூட்­டத்தில் கலந்து கொள்­ள­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பெளஸி தலை­மையில் ஒன்று கூடி ஆராய்ந்த பின்பு கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொள்­வ­தாக அவர்கள் நீதி­ய­மைச்­ச­ரிடம் தெரி­வித்­தி­ருந்­தனர். இதற்கு அமை­வா­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்­வரும் 24 ஆம் திகதி ஒன்று கூட­வுள்­ளனர்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் குழு­வொன்­றினை நிய­மித்­தி­ருந்தார். அக்­கு­ழுவின் சட்­டத்­தி­ருத்த சிபா­ரி­சு­களே நீதி­ய­மைச்­ச­ரிடம் தற்­போது வழங்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­தி­ருத்­தங்கள், பல­தார மணம், முஸ்லிம் பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மித்தல் போன்ற விட­யங்­க­ளிலே தற்­போது கருத்து முரண்­பா­டுகள் நில­வு­கின்­றன. இது தொடர்பில் ஏ.எச்.எம்.பெளஸி தலை­மை­யி­லான குழு தீர்­மானம் ஒன்­றினை எட்­ட­வுள்­ளது.

முஸ்லிம் பெண்கள் தரப்பு பல­தார ம­ணத்­துக்கு தடை­வி­திக்க வேண்­டு­மெ­னவும் பெண்­களை காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­க­வேண்­டு­மெ­னவும் போராடி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அக்­குழு முன்­வைத்த சிபா­ரி­சுகள் இன்­று­வரை சவால்­களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டதிருத்த சிபாரிசுகள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடனும் கலந்துரையாடி வெகுவிரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்டத்திருத்தங்கள் தொடர்பில் அறிக்கையொன்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.