ஓமான் ஆடை நிறுவனம் : கட்டுநாயக்க முதலீட்டு வலயத்துக்கு இடமாற்றம்

ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்

0 285

(எம்.எப்.அய்னா)
நீர் கொழும்பு – படல்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹல்பே பகு­தியில் ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் அல் உபைதி மீது இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரின் அர­சியல் அதி­கார பின்­னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும், அவ­ரது ஆடை தொழிற்­சாலை மீதான தொடர்ச்­சி­யான அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வொன்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், அந்த ஆடை தொழிற்­சாலை கட்­டு­நா­யக்க முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்­துக்கு இட­மாற்­றப்­ப­ட­வுள்­ளது.

இதற்­கான தீர்­மா­ன­மெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில், மிக விரைவில் அந்த தொழிற்­சாலை அங்கு இட­மாறும் என குறித்த நிறு­வ­னத்தின் பொது முகா­மை­யாளர் யசீர் லாஹிர் தெரி­வித்தார்.

இந் நிலையில், குறித்த இடம் மாற்­றப்­படும் நட­வ­டிக்­கைக்கு சுமார் 3 மாதங்கள் வரை செல்­லலாம் என தெரி­வித்த அவர், அதற்­காக உற்­பத்தி மற்றும் விநி­யோ­கத்தை சம­னிலை செய்யும் பொருட்டு சில மூலப் பொருட்­களை ஓமானில் உள்ள தமது நிறு­வ­னத்­துக்கு அனுப்­பி­யுள்­ள­தாக கூறினார்.

இவ்­வாறு மூலப் பொருட்­களை அனுப்பும் போது, முத­லீட்டை எடுத்துச் செல்­வ­தாக நினைத்து ஊழி­யர்கள் ஆரப்­பாட்டம் செய்த நிலையில், அவர்­க­ளுக்கு நிலைமை விளக்­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அந் நட­வ­டிக்கை தொடர்ந்­த­தாக அவர் கூறினார்.

நீர் கொழும்பு – படல்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹல்பே பகு­தியில் ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் உபைதி மீது இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரின் அர­சியல் அதி­கார பின்­னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும், அவ­ரது ஆடை தொழிற்­சாலை மீதான தொடர்ச்­சி­யான அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு­வொன்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் உத்­த­ரவில், பொலிஸ் மா அதிபர் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை சி.ஐ.டி.யிடம் கைய­ளித்­துள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

கடந்த மார்ச் 30 ஆம் திகதி இரவு 11.30 மணி­ய­ளவில், ஹல்பே பகு­தியில் அமைந்­துள்ள, குறித்த முத­லீட்­டா­ள­ருக்கு சொந்­த­மான ஆடை தொழிற்­சா­லைக்குள் அத்து மீறி கோடீஸ்­வர வர்த்­த­க­ரான அந்த ஓமான் முத­லீட்­டாளர் மீதும், அவ­ரது பாது­காப்பு அதி­காரி மீதும் இவ்­வாறு தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் குறித்து ஆரம்ப விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த படல்­கம பொலி­ஸாரும் நீர் கொழும்பு வலய குற்றத் தடுப்புப் பிரி­வி­னரும் 4 சந்­தேக நபர்­களைக் கைது செய்­தி­ருந்­தனர்.

சம்­ப­வத்­துக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர், குறித்த அர­சி­யல்­வா­தியின் சகா ஒருவர், ஆடை தொழிற்­சா­லைக்கு வாகனம் ஒன்­றினை வாடகை அடிப்­ப­டையில் வழங்க முற்­பட்ட போது, அதனை குறித்த முத­லீட்­டாளர் நிரா­க­ரித்­தமை தாக்­கு­த­லுக்­கான காரணம் என குறித்த ஆடை உற்­பத்தி நிறு­வ­னத்தின் பொது முகா­மை­யாளர் யசீர் லாஹிர் விடி­வெள்­ளி­யிடம் தெரிவித்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் என அனைவரும் அளித்த உறுதி மொழிகளை அடுத்து, நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்துக்கு குறித்த ஆடை தொழிற்சாலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.