பௌஸியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐ.ம.ச. தீர்மானம்

0 227

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக செயற்­பட்­டதன் கார­ண­மாக ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பெள­ஸியின் கட்­சி­யி­னது உறுப்­பு­ரி­மையை இடை நிறுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ்.எம்.மரிக்கார் இதனை உறு­திப்­ப­டுத்­தினார்.

கடந்த திங்­கட்­கி­ழமை கூடிய ஐக்­கிய மக்கள் சக்­தியின் செயற்­குழுக் கூட்­டத்தில் இத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் கடன் வசதி தொடர்­பான பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என கட்சி தீர்­மா­னித்­தி­ருந்த நிலையில் ஏ.எச்.எம்.பெளஸி தீர்­மா­னத்­தையும் மீறி ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை கார­ண­மா­கவே அவ­ரது கட்சி உறுப்­பு­ரிமை இடை­நி­றுத்­தப்­ப­ட­வுள்­ளது.

கட்­சியின் உறுப்­பு­ரி­மையை இடை­நி­றுத்­து­வது தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை கட்சி முன்­னெ­டுத்­துள்­ளது. கட்சியின் செயற்குழு இவ்விவகாரத்தை ஒழுக்காற்று சபைக்கு பாரப்படுத்தியுள்ளது. விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.