கபூரியா அரபுக்கல்லூரி வாசலுக்கு பூட்டு : விடுமுறையிலிருந்து திரும்பிய மாணவர்கள், பெற்றோர் நிர்க்கதி

மஹரகம பொலிஸில் முறைப்பாடு பதிவு

0 257

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹ­ர­கம – கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியின் நுழைவாயில் மூடப்­பட்­டதால் விடு­மு­றையின் பின்பு கல்­லூ­ரிக்கு கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் வருகை தந்த மாண­வர்­களும், பெற்­றோரும்  நேற்று முன்­தினம் பல்­வேறு அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­னார்கள்.
கல்­லூ­ரியின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் மாண­வர்கள் கல்­லூ­ரிக்குள் நுழை­வது தடை செய்­யப்­பட்­டது. கல்­லூரி நிர்­வா­கத்­தி­னதும், நம்­பிக்கை பொறுப்­பா­ள­ரி­னதும், உத்­த­ரவு இது உள்ளே அனு­ம­திக்க முடி­யாது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதனால் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து வருகை தந்த 34 மாண­வர்­களும், அவர்­களது பெற்றோர் மற்றும் பாது­கா­வ­லர்­களும் நேற்று முன்­தினம் மதியம் 12 மணி­யி­லி­ருந்து மாலை 5.30 மணி­வரை கொட்டும் மழையில் நீர், ஆகா­ர­மின்றி செய்­வ­த­றி­யாது பாதையில் தரித்­தி­ருந்­தனர்.

கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு நோன்பு கால­வி­டு­முறை வழங்­கிய போது மே மாதம் 9 ஆம் திகதி கல்­லூரி விடு­மு­றையின் பின்பு மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் அன்­றைய தினம் மாண­வர்கள் சமு­க­ம­ளிக்கும் படியும் அறி­வித்தல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த அறி­வித்­தலில் கல்­லூரி அதி­பரே கையொப்­ப­மிட்­டி­ருந்தார். இதற்­கி­ணங்­கவே நேற்று முன்­தினம் கல்­லூ­ரிக்கு மாண­வர்கள் வருகை தந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மாண­வர்கள் கல்­லூ­ரிக்குள் அனு­ம­திக்­கப்­ப­டாத நிலையில் கல்­லூரி நிர்­வாகம் மற்றும் அதி­ப­ரையும் பெற்­றோ­ரினால் தொடர்பு கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டது. அவர்­க­ளது தொலை­பேசி இலக்­கங்கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னை­ய­டுத்து பெற்றோர் 119 அவ­சர அழைப்­பினை தொடர்பு கொண்டும் ஸ்தலத்­துக்குப் பொலிஸார் சமு­க­ம­ளிக்­க­வில்லை இருவர் சிவில் உடையில் சமுக­ம­ளித்­த­போதும் அவர்கள் எவ்­வித விசா­ர­ணை­க­ளையோ நட­வ­டிக்­கை­க­ளையோ முன்­னெ­டுக்­க­வில்லை.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து பெற்­றோ­ரிடம் பிரச்­சினை தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார். கல்­லூரி நிர்­வா­கத்­தி­ன­ரையோ அதி­ப­ரையோ சந்­திக்க முடி­யாது என பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தி­னரால் முஜிபுர் ரஹ்­மா­னுக்குத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் முஜிபுர் ரஹ்மான் மாண­வர்­களின் பெற்றோர் சகிதம் மஹ­ர­கம பொலிஸ் நிலையம் சென்று மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­ப­டாமை தொடர்பில் முறைப்­பாடு ஒன்­றினைச் செய்தார். உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக பொலிஸார் முஜிபுர் ரஹ்­மா­னிடம் தெரி­வித்­தனர்.

கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து தனது மகனை அழைத்து வந்­தி­ருந்த ஆசி­ரியர் ஒரு­வரை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

எனது மகன் 5 வரு­டங்­க­ளாக கபூ­ரிய்­யாவில் படிக்­கிறார். இன்னும் ஒரு வருடம் படிக்க வேண்­டி­யுள்­ளது. விடு­மு­றையின் பின்பு அவரை மீண்டும் மத்­ர­ஸா­வுக்கு அழைத்து வந்தேன். நான் ஒரு அர­சாங்க ஊழியர். விடு­முறை எடுத்துக் கொண்டே வந்தேன். மத்­ர­ஸா­வுக்குள் செல்­வது மக­னுக்கு தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு க.பொ.த (சா/ த) க. பொ.த (உ/த) பரீட்சை எழுதும் மாண­வர்கள் படிக்­கி­றார்கள். இவர்­க­ளது கல்வி இப்­போது சவா­லாக மாறி­யுள்­ளது. நாங்கள் தடு­மாற்­றத்தில் இருக்­கிறோம்.

நீதி­மன்ற உத்­த­ரவு மாண­வர்­களை உள்ளே எடுக்க முடி­யாது என்­கி­றார்கள். ஒன்­றுமே புரி­ய­வில்லை. எமது பிள்­ளை­க­ளுக்கு எப்­போது நீதி கிடைக்கும். சமூ­கத்தின் தலை­வர்கள், அர­சியல் தலை­வர்கள் ஏன் மெள­ன­மாக இருக்­கி­றார்கள். எங்கள் பிள்­ளை­க­ளுக்கு கல்வி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்து வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து வந்த நாங்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் கொழும்பில் தொடர்ந்தும் தங்­கி­யி­ருக்­கிறோம். எமக்கு நீதி வேண்டும் என்றார்.

கல்­வியைத் தொடர உடன்
ஏற்­பாடு செய்­யுங்கள்ரமழான் விடு­மு­றையில் இருந்து மீண்டும் கல்­லூ­ரிக்கு வந்த மாண­வர்­களை கல்­லூ­ரியின் புதிய நிர்­வாகம் உள்ளே நுழைய அனு­ம­திக்­காமை தொடர்பில் கபூ­ரிய்யா அர­புக்­கல்­லூ­ரியின் பழைய மாண­வர்க சங்கம் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு இது­வரை காலம் கல்வி கற்று வரும் மாணவர்களது அனுமதி மறுப்பு விடயத்தில் தலையிட்டு அவர்கள் உடனடியாக கல்வியைத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரைக் கோரியுள்ளது. இது தொடர்பில் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல். தில்ஷாத் முஹம்மத் பணிப்பாளருக்கு கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

இச்செயல் மாணவர்களது அடிப்படை உரிமை மீறல் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.