பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தோற்கடிக்க அனைத்து தரப்பும் ஒன்றுபட வேண்டும்

ஒன்றிணைந்த எதிரணியின் ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாச

0 236

பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தையும் விட மிக மோச­மா­ன­தாக கரு­தப்­படும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­ட­மா­னது இந்த நாட்­டி­லுள்ள எதிர்க்­கட்­சிகள், சிவில் சமூகம் மற்றும் ஊட­கங்­களின் குரல்­களை நசுக்­கவே கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. இதனை எதிர்ப்­ப­தற்கு அனைத்து தரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்த கூட்டு நட­வ­டிக்கை அவ­சி­ய­மா­கி­றது என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எதிர்க்­கட்சி அர­சியல் கட்சித் தலை­வர்­களின் பங்­கேற்­புடன், நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்து ஊடகப் பிர­தா­னிகள் மற்றும் பத்­தி­ரிகை பிர­தம ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்றுக் காலை கொழும்பு மெண்டரின் ஹோட்டலில் இடம் பெற்றது.

இந்­நி­கழ்வில் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று சர்­வ­தேச ஊடக தினம். இத்­த­கைய சிறப்­பு­மிக்க வர­லாற்று நாளில், எதிர்க்­கட்­சி­களின் பல முக்­கிய அர­சியல் கட்­சிகள் உங்­க­ளுடன் சமூ­க-­ பொ­ரு­ளா­தார அர­சியல் உரை­யா­டலைத் தொடங்­கி­யுள்­ளதில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்.

குறிப்­பாக நம் நாட்டின் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய 3 தூண்கள் நிறை­வேற்­றுத்துறை, சட்­ட­வாக்கம் மற்றும் நீதித்­துறை ஆகும். 4 ஆவது முக்­கிய தூண் சுதந்­திர ஊடகம். நீங்கள் ஆற்­றிய வர­லாற்றுப் பணியின் மதிப்­பீடு இந்த ஊடகத் துறையை ஒன்­றி­ணைத்து முற்­போக்­கான உரை­யாடல் கருத்துப் பரி­மாற்றம் இந்த தரு­ணத்தில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக,வெவ்­வேறு அர­சியல் கட்­சிகள் ஒவ்­வொரு கட்­சிக்கும் தனித்­து­வ­மான சிந்­த­னை­களைக் கொண்­டுள்­ளன.கோட்­பா­டுகள் உள்­ளன. ஆனால் இன்று தேசிய ரீதியில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த பல விட­யங்­களில் ஒன்­று­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

உதா­ர­ணத்­துக்கு, ஊடகக் கட்­டுப்­பாட்­டிற்­காக அர­சாங்கம் இன்று தயா­ரிக்கும் ஒலி­ப­ரப்பு அதி­கா­ர­சபைச் சட்­டத்தைக் குறிப்­பி­டலாம். அதன் மூலம் சுதந்­திர ஊட­கங்­க­ளுக்­கான மரண அடியை எதிர்ப்­பது பற்றி எமக்கு பொது­வான கருத்து உள்­ளது. மேலும், தற்­போ­தைய பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­திற்குப் பதி­லாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை உரு­வாக்­கு­வதன் மூலம் 220 இலட்சம் மக்­க­ளையும் பயங்­க­ர­வா­தி­க­ளாகப் புரிந்­து­கொள்ளும் ஜன­நா­யக விரோத ஆணையை எதிர்ப்­பது பற்­றிய பொது­வான புரி­தலும் எங்­க­ளுக்கு உள்­ளது.

மேலும், சமீ­ப ­கா­ல­மாக இந்த நாட்டில் நடந்த மிகப்­பெ­ரிய சுற்­றுச்­சூழல் பாதிப்­பான எக்ஸ்­பிரஸ் பேர்ள் நிகழ்­விலும், ஒரு வங்­கு­ரோத்­தான நாட்டின் அவ்­வா­றான மாபெரும் பேர­ழி­விலும் பணத்தை சுரண்டும் முயற்­சியை முறி­ய­டிக்­கவும் அரசின் மிகவும் பிற்­போக்­குத்­த­ன­மான வேலைத்­திட்­டத்தை முறி­ய­டிக்­கவும் எதிர்க்­கட்­சி­யான நாங்கள் ஒன்­றி­ணைந்­துள்ளோம்.இவை ஒரு சில மட்­டுமே.

பொது விவ­கா­ரங்­களில் பல விட­யங்­களில் நாங்கள் ஒரு இடத்­திற்கு வந்­துள்ளோம்.
எதிர்க்­கட்­சி­களின் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவாக, நாட்டிற்கு மதிப்பு சேர்க்கும் வகையில் உங்கள் அனைவருடனும் ஒரு முற்போக்கான உரையாடலில் ஈடுபடவுள்ளோம்.

இந்த முற்போக்கு உரையாடல் மூலம் நாடு மதிப்பு பெற்று உலகின் அனைத்து துறைகளிலும் நம்பர் 1 நாடாக உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.