உம்ரா விசா இடைநிறுத்தம் : இலங்கை யாத்திரிகர்கள் 810 பேர் அசௌகரியம்

0 399

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்சு திடீ­ரென நேற்று உம்ரா விசா விநி­யோ­கத்தை இடை நிறுத்­தி­யதால் இலங்­கை­யி­லி­ருந்து உம்­ரா­வுக்கு செல்­ல­வி­ருந்த சுமார் 810 யாத்­தி­ரி­கர்கள் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­னார்கள்.

விசா­வுக்கு விண்­ணப்­பிக்கும் ஹஜ் உம்ரா அமைச்சின் இணை­ய­தளம் விசா விநி­யோகம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­த­தனாலே இந்­நி­லைமை ஏற்­பட்­டது. உம்ரா விசா விநி­யோகம் எதிர்­வரும் ஜூன் மாதம் 3 ஆம் திக­தி­வரை இடம்­பெ­று­மென ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, சவூதி ஹஜ் உம்ரா அமைச்­சினால் உம்ரா விசா விநி­யோகம் மீண்டும் இன்று மதியம் (நேற்று) ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­ட­தா­கவும் பய­ணிகள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை எனவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் ஹஜ் பிரி­வுக்குப் பொறுப்­பான அதி­காரி சப்ரி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இலங்கை மாத்­தி­ர­மல்ல உல­க­ளா­விய ரீதியில் 19 நாடுகள் உம்ரா விசா தொடர்பில் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­ட­தா­கவும் அவர் கூறினார்.

எதிர்­வரும் ஹஜ் யாத்­தி­ரையை முன்­னிட்டு அதன் ஒழுங்­கு­ப­டுத்தல் பணி­க­ளுக்­காக உம்ரா விசா­ வி­நி­யோகம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட சவூதி ஹஜ் உம்ரா அமைச்சுக்கு இலங்கை ஹஜ்முகவர் சங்கங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.