ராஜகிரிய மத்ரஸதுந் நூராணியாவின் காணிகள் வேறு நிறுவனமொன்றின் பெயருக்கு மாற்றம்

வக்பு சபையில் முறைப்பாடு, 30 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

0 289

(எஸ்.என்.எம்.சுஹைல்,எம்.வை.எம்.சியாம்)
ராஜ­கி­ரிய நூரா­ணியா ஜும்­ஆப்­பள்­ளி­வாசல், அதன் கீழ் இயங்கும் மத்­ர­ஸதுல் நூரா­ணியா ஹிப்ழ் கல்­லூ­ரியின் பெயரில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட காணிகள் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் முகா­மைத்­து­வக்­குழு அனு­ம­தி­யின்றி நிதா பவுண்­டேஷன் எனும் நிறு­வ­னத்தின் பெயரில் மாற்­றப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு வக்பு சபையில் வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்­று­முன்­தினம் வக்பு சபையில் இடம்­பெற்­றது. இதன்­போது, இரு தரப்­பினரும் வக்பு சபைக்கு தமது நிலைப்­பாட்டை தெரி­வித்­தனர்.
வழக்கு தொடு­நர்­க­ளான பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபை உறுப்­பி­னர்கள் மூவர் மற்றும் ஜமாஅத் அங்­கத்­த­வர்கள் இருவர் சார்பில் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.