குண்டுப் புரளியைக் கிளப்பிய இளம் மௌலவி

0 350

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்து சென்ற நோன்புப் பெருநாள் கண்டி மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்கு சவா­லான ஒரு பெரு­நா­ளா­கவே அமைந்­தி­ருந்­தது. ரமழான் இறுதி நாட்கள் மற்றும் நோன்புப் பெருநாள் காலப்­ப­கு­தியில் அக்­கு­றணை பள்­ளி­வா­சல்­களில் மற்றும் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிரா­மங்கள் மீது குண்­டுத்­தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக பர­விய பொய்­யான தக­வல்­களே இதற்குக் காரணம்.

அக்­கு­ற­ணை­யிலும், கம்­ப­ளை­யிலும் குண்­டுத்­தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­டலாம் என அரச புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கிடைத்­த­தை­ய­டுத்து கண்டி மாவட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் இது தொடர்பில் விழிப்­பா­கவும் எச்­ச­ரிக்­கை­யா­கவும் இருக்­கும்­படி பொலி­ஸா­ரினால் அறி­வு­றுத்­தப்­பட்­டன. கண்டி மாவட்­டத்­தி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அந்­தந்த பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள் நேரில் சென்றும் தொலை­பேசி மூலமும் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­னார்கள்.

கடந்த 18 ஆம் திகதி பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சின் அவ­சர இலக்­கத்­துக்கு (118) அக்­கு­றணை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­பட்­டது. 118 எனும் இலக்­கத்தை தொடர்பு கொண்ட நபர் குறிப்­பிட்ட தக­வலை வழங்­கி­விட்டு தான் மாவ­னெல்லை பகு­தியைச் சேர்ந்­தவர் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை பாது­காப்பு அமைச்சின் அவ­சர இலக்­கத்­துக்கு (118) கடந்த 19 ஆம் திகதி காலையில் மற்­று­மொரு தொலை­பேசி அழைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. தொலை­பேசி அழைப்­பினை மேற்­கொண்­டவர் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிரா­மங்­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடாத்­தப்­பட வாய்ப்புள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். அத்­தோடு தான் ஹல்­து­முல்லை பிர­தே­சத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவர் எனவும் கூறி­யுள்ளார். இந்த தக­வல்கள் கிடைத்­ததன் பின்பே பொலிஸார் உட­ன­டி­யாக செயலில் இறங்­கி­னார்கள்.

கடந்த 18 ஆம் திகதி மாலை அஸர் தொழு­கையின் பின்பு அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்த கண்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் மற்றும் அல­வத்து கொட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி என்போர் இது தொடர்பில் எச்­ச­ரிக்­கையை விடுத்­தனர். குண்டு தாக்­குதல் சம்­பவம் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக பாது­காப்பு உளவுப் பிரி­வி­ன­ருக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளிடம் தெரி­வித்­தனர்.

கடந்த 18 ஆம் திகதி முதல் நோன்புப் பெருநாள் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வருகை தரும் அறி­மு­க­மில்­லா­த­வர்கள், புதி­ய­வர்கள் தொடர்பில் விழிப்­பாக இருக்­கும்­படி பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பொலி­ஸா­ரினால் வேண்­டப்­பட்­டனர். சந்­தே­கத்­துக்­கி­ட­மா­ன­வர்கள் தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­விக்கும் படியும் வேண்­டி­னார்கள். பயணப் பொதிகள், பார்­சல்கள் சகிதம் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­ப­வர்கள் தொடர்பில் அவ­தானம் செலுத்தும் படியும் அறி­வு­றுத்­தி­னார்கள். சந்­தே­கத்­துக்­கி­ட­மான வாக­னங்கள் பள்­ளி­வாசல் வளா­கத்­துக்குள் அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டா­தெ­னவும் உத்­த­ர­விட்­டனர்.

பொலிஸ் பாது­காப்பு
இந்­நி­லையில் கண்டி மாவட்­டத்தின் பிர­தான பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது. அக்­கு­றணை மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் பரி­பா­ல­னத்தின் கீழ் இயங்கும் 80 பள்­ளி­வா­சல்கள் மற்றும் 24 ஜும்ஆ பள்­ளி­வா­சல்கள், கம்­பளை, கண்டி கட்­டு­கலை மற்றும் மஹய்­யாவை பகுதி பள்­ளி­வா­ச­ல்களுக்கு பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது. அக்­கு­றணை நகரில் இரா­ணுவ பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. கண்டி மாவட்­டத்தில் பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்­பினை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் பலப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னார்கள். என்­றாலும் தராவீஹ் போன்ற விசேட தொழு­கை­களில் மக்கள் அச்­சத்­து­டனே கலந்து கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்­களில் வழ­மை­போல சமய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எவ்­வித அசம்­பா­வி­தங்­களும் இடம்­பெ­ற­வில்லை. 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மற்றும் அதன்­பின்­ன­ரான கொவிட் 19 தொற்று அச்­சு­றுத்தல், பய­ணத்­தடை கார­ண­மாக முஸ்­லிம்­க­ளினால் தொழு­கை­களை அக்­கா­லப்­ப­கு­தியில் தொடர முடி­யாத நிலைமை இருந்­தது. பெருநாள் கொண்­டாட்­டங்­களும் அன்று சோபித்­தி­ருந்­தன. இந்­நி­லையில் இவ்­வ­ருட நோன்­புப்­பெ­ருநாள் மக்­களால் விம­ர்சை­யாகக் கொண்­டா­டப்­பட்­டது. குண்­டுப்­பு­ர­ளி­யினால் எவ்­வித பாதிப்­பு­களும் ஏற்­ப­ட­வில்லை என கண்டி மாவட்ட மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் தெரி­வித்தார்.

சந்­தேக நபர் கைது
அக்­கு­ற­ணை­யிலும் முஸ்­லிம்கள் செறி­வாக வாழும் பகு­தி­க­ளிலும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்ற தக­வல்கள் கிடைக்­கப்­பெற்­ற­தை­ய­டுத்து பொலிஸார் உட­ன­டி­யாக செயலில் இறங்­கி­னர். தகவல் தொடர்பில் கணினி குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். தக­வல்கள் வழங்­கி­ய­வர்­களின் இலக்­கங்­களைச் சரி­பார்த்­ததில் இரண்டு இலக்­கங்­களும் பயன்­பாட்­டி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தொலை­பேசி நிறு­வ­னங்கள் தெரி­வித்­தன.

மேலும் தக­வல்கள் வழங்­கி­ய­வர்­களின் விலா­சங்கள் சரி பார்த்­ததில் குறிப்­பிட்ட வீடு­களில் அவ்­வா­றான எவரும் இல்லை என்­பதும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. தகவல் அளிக்­கப்­பட்ட கணினி அமைப்பின் தக­வல்­களை ஆய்வு செய்­ததில் இந்த தக­வல்கள் ஒரே நபரால் வழங்­கப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­தது. அக்­கு­றணை பட்­டு­கொட பிர­தே­சத்தில் இருந்து இந்த அழைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­மையும் புல­னாய்வு பிரி­வி­னரால் உறுதி செய்­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து பொலி­ஸாரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக பட்டுகொட பிர­தே­சத்தில் கசா­வத்த பகு­தி­யி­லுள்ள வீடொன்றில் சந்­தேக நபர் இருந்த நிலையில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் கடந்த 22 ஆம் திகதி காலை கைது செய்­யப்­பட்டார். அவர் 20 வய­தான இஸ்­ஸதீன் மொஹமட் சஜித் என்­ப­வ­ராவார். இவர் மெள­லவி பட்டம் பெற்ற ஒரு­வ­ராவார்.

அவ­ரது கைப்­பே­சியை பரி­சோ­தனை செய்­ததில் குறிப்­பிட்ட அழைப்­புக்கள் அதி­லி­ருந்தே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை உறு­தி­யா­னது என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி நிஹால் தல்­துவ தெரி­வித்தார்.

சந்­தேக நப­ரிடம் பொலிஸ் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின்­போ­து தான் வேறொ­ரு­வரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே இந்த அழைப்­பு­களை மேற்­கொண்­ட­தாக வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார். சந்­தேக நபர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் அவ­ருக்கு உச்ச பட்ச தண்­டனை வழங்­கப்­படும் எனவும் அவர் கூறினார்.

சந்­தேக நபர் கொழும்பு புதுக்­கடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து அவரை எதிர்­வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நபர்
இஸ்­ஸதீன் மொஹமட் சஜீத்
சந்­தேக நபர் தொடர்­பான விப­ரங்­களை விடி­வெள்ளி பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து திரட்­டி­யது.

சந்­தேக நபர் மொஹமட் சஜீத் (20) அக்­கு­றணை, பட்­டு­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த கசா­வத்தை கிரா­மத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவர். தெழும்பு கஹ­வத்தை ரஷீ­தியா மத்­ர­ஸாவில் பயின்று மெள­லவிப் பட்டம் பெற்­றவர். இவ­ரது தந்தை மற்றும் மூன்று மூத்த சகோ­த­ரர்கள் ஜப்­பானில் தொழில் புரி­ப­வர்கள். சகோ­த­ரர்கள் மூவரில் ஒருவர் விடு­மு­றையில் இலங்கை வந்­துள்ளார்.தந்­தையும் இலங்­கைக்கு வந்­துள்ளார். சந்­தேக நபரும் தொழில் வாய்ப்பு பெற்று ஜப்­பா­னுக்கு செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் இருந்­தவர்.
இவ­ரது வீட்­டுக்கு அருகில் இருக்கும் ஸம ஸம் பள்­ளிவா­சலில் நோன்பு விசேட தொழு­கை­யான தராவிஹ் தொழு­கையை நடத்­திக்­கொண்­டி­ருந்­தவர்.

‘விடி­வெள்ளி’ சந்­தேக நபர் தொடர்பில் அக்­கு­றணை பிர­தேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்­திஹார் இமா­மு­தீனைத் தொடர்பு கொண்டு வின­வி­யது.

சந்­தேக நபர் ‘கசா­வத்­தையை வசிப்­பி­டாகக் கொண்­டவர். அக்­கு­ற­ணை­யி­லி­ருந்து 2 ½ கிலோ மீற்றர் தூரத்தில் அந்தக் கிராமம் அமைந்­துள்­ளது. சந்­தேக நபர் மிகவும் அமை­தி­யா­னவர். இவ­ருக்கு எதி­ராக இது­வரை எந்த முறை­ப்பா­டு­களோ, குற்­றச்­சாட்­டுக்­களோ இருந்­த­தில்லை. இவர் தொழில் நிமித்தம் ஜப்­பா­னுக்கு போக ஆயத்­த­மாகி இருந்தார். இவர் அவ்­வா­றான அழைப்­பினை 118 க்கு மேற் கொண்டார் என்ற செய்­தி­ய­றிந்து இவரை அறிந்­த­வர்கள் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­னார்கள். ஏப்ரல் 21 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு பின்பு இவ்­வா­றான ஒரு புரளி பரப்­பப்­பட்­டுள்­ளமை முஸ்­லிம்­க­ளுக்கு துர­திஷ்­ட­மான சம்­ப­வ­மாகும். எது எப்­ப­டி­யி­ருப்­பினும் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணையின் பின்பே இவ்­வா­றான புர­ளியை கிளப்­பி­யதற்­கான காரணம் அதன் பின்­னணி என்­ப­வற்றை அறிந்து கொள்ள முடியும் என்றார். இந்­தக்­குற்­றச்­சாட்­டி­லி­ருந்தும் விடு­ப­டு­வது கடினம். சட்டம் இவ்­வா­றான விட­யங்­களில் மிகக்­க­டு­மை­யா­கவே இருக்­கி­றது என்றார்.

அக்­கு­றணை மஸ்­ஜி­துகள்
சம்­மே­ள­னத்தின் தலைவர்
“ஸலாம் கூறினால் அவர் பதில் ஸலாம் கூறு­வது கூட சரி­யாகக் கேட்­காது. அவ்­வளவு அமை­தி­யாக பதில் ஸலாம் கூறுவார். இவரா இப்­படிச் செய்தார்?என்­பதை நினைத்துக் கூட பார்க்க முடி­யாது” என அக்­கு­றணை மஸ்­ஜி­துகள் சம்­மே­ள­னத்தின் தலை­வரும், அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­சலின் தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி அஸ்மி பாரூக் தெரி­வித்தார்.

மேலும் அஸ்மி பாரூக் தெரி­விக்­கையில் ‘ சந்­தேக நபர் தான் செய்­ததை விளங்­கித்தான் செய்­தாரா? இல்­லையேல் விளக்­க­மில்­லாமல் சிறு­பிள்ளைத் தன­மாக செய்­தாரா என்­பதை புல­னாய்­வுப்­பி­ரி­வி­னரின் விசா­ர­ணைக்குப் பின்பே அறிந்து கொள்ள முடியும்.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் என்­னுடன் கலந்­து­ரை­யா­டினார். இவர் ஊர் பள்­ளி­வா­சலில் தராவிஹ் தொழுகை தொழு­வித்து வந்­தவர். விசா­ர­ணை­களின் பின்பே சம்­பவத்தின் உண்மை நிலை­மையை அறிந்து கொள்­ள­மு­டியும் என்றார்.

பின்னணியில் யார்?
குண்­டுப்­பு­ர­ளியில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட மெள­லவி ‘ தான் வேறொ­ரு­வரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்­கவே குறிப்­பிட்ட தொலை­பேசி அழைப்­பு­களை மேற்­கொண்­ட­தாக ஆரம்ப கட்­ட­வி­சா­ர­ணையில் தெரி­வித்­துள்ளார். இவர் கூறுவது உண்மையெனில், அவர் யார் என்பதை பாதுகாப்புத் தரப்பினர் உடன் கண்டறிய வேண்டும்.

இதேவேளை அவர் விளையாட்டாக இப் பொயத்தகவலை வழங்கியிருந்தால் இதன் பாரத்­தூ­ரத்­தன்­மையை அவர் அறி­யாது இருந்­துள்ளார் என்­பது தெளி­வா­கி­றது. நாட்டின் தேசிய பாது­காப்­புடன் விளையாடும் இவ்வாறான விடயங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது அழியாத கறையை படிய வைத்துவிட்டது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள், என்று பட்டம் சூட்டப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் சமூகம் இந்தக்குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மீட்சி பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கையில் இளம் மெளலவியொருவர் தெரிந்தோ தெரியாமலோ பாதுகாப்பு தரப்புக்கு குண்டுதாக்குதலொன்று நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்த தகவல்கள் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தங்களது சமூகத்தையே இலக்கு வைக்கிறார்கள் என்ற மனோ நிலைமையை ஏனைய சமூகத்தின் மத்தியில் பரவச் செய்துள்ளன.
இந்தத் தகவல்கள் தொடர்பான உண்மைகள் விசாரணைகளின் பின்பு வெளிப்படுத்தப்படும் என்றாலும் மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள் பாடசாலைகள் மூலம் இது பற்றிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

மாண­வர்­களை தேசத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களாக அன்றி தேசப்­பற்­றா­ளர்­க­ளாக, சமூக பற்­றா­ளர்­க­ளாக, நல்­லி­ணக்க நற்­பண்பு கொண்­ட­வர்­க­ளாக உரு­வாக்க அனைவரும் உறுதி பூண வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.