விரும்பும் முகவர்களிடம் ஆவணங்களை சமர்ப்பித்து மே 5 இற்கு முன்பு ஹஜ் பயணத்தை உறுதி செய்க

முஸ்லிம் சமய திணைக்களம் வேண்டுகோள்

0 406

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்­திரையை இவ்­வ­ருடம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் எதிர்­வரும் மே மாதம் 5 ஆம் திக­திக்கு முன்­பாக தாம் விரும்பும் ஹஜ் முக­வர்­க­ளிடம் உரிய ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து தங்கள் பய­ணத்தை உறுதி செய்து கொள்­ளு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு திணைக்­க­ளத்­தினால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்கள் ஊடா­கவே பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடியும். இவ்­வ­ருடம் 105 ஹஜ்­மு­கவர் நிலை­யங்­க­ளுக்கு திணைக்­களம் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கி­யுள்­ளது. இவர்­க­ளது பெயர் விப­ரங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் இணையத்தளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தெ­னவும் பணிப்­பாளர் தெரி­வித்தார்.

இலங்­கைக்கு சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு 3500 ஹஜ் கோட்­டா­வினை வழங்­கி­யுள்­ளது. ஹஜ் முக­வர்கள் சவூதி அரே­பி­யாவில் வழங்கும் சேவை­க­ளுக்கு அமை­வா­கவும் ஹஜ் கட்­டணம் அற­வி­டப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை எதிர்­வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி அல்லது 4 ஆம் திகதி முதலாவது ஹஜ் விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.