சவூதி அரேபிய அரச தலைமைத்துவத்தின் பணிப்புரைகளுக்கு அமைய, சூடான் குடியரசில், முதன் முதலாக பல்வேறு ராணுவப்பிரிவினரின் ஆதரவோடு சவூதி அரேபிய கடற்படையினரால் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையிலேயே இந்த வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வெளியேற்றப்பட்ட சவூதி அரேபியப் பிரஜைகள், சகோதர மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் சவூதி அரேபியாவை வந்தடைந்தனர்.
இவ்வெளியேற்ற நடவடிக்கையின் போது 91 சவூதி பிரஜைகளும், சகோதர மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 66 பேரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், இந்தியா, பல்கேரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், கனடா மற்றும் புர்கினா பாசோ போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வழங்க சவூதி அரேபியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
சவூதி அரேபியாவின் தலைமைத்துவமானது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சவூதி அரேபிய பிரஜைகளின் நலன்களுக்காக எப்பொழுதும் செயல்படும் என
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் தலைமைத்துவமானது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சவூதி அரேபிய பிரஜைகளின் நலன்களுக்காக எப்பொழுதும் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-Vidivelli