118 க்கு தகவல் வழங்கிய தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை நடத்துக

மக்களை பீதிக்குள்ளாக்காதீர் என அமைச்சர் அலஸிடம் ஹலீம் வலியுறுத்து

0 260

(எஸ்.என்.எம்.சுஹைல்)
ரமழான் மாத இறுதியில் அக்­கு­ற­ணையில் குண்டுத் தாக்­குதல் நடத்­தவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கமான 118 இற்கு தகவல் வழங்­கி­யவர் குறித்து விசா­ர­ணைகள் நடத்­து­மாறு கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அல­ஸிடம் கோரியுள்ளார்.

நோன்புப் பெருநாள் வியா­பாரம் இடம்­பெற்­று­வரும் நிலையில் மக்­களை பீதிக்­குள்­ளாக்கும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் செயற்­திட்­டங்கள் மற்றும் பொது மக்­களின் அன்­றாட செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் இறுக்­க­மான பாது­காப்பு கெடு­பி­டி­களை தவிர்க்­கு­மாறும் அவர் மேலும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அக்­கு­றணை பிர­தே­சத்­திற்கு குண்டுத் தாக்­குதல் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்ள விடயம் குறித்து பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ருடன் மேற்­கொண்­டன கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹலீம் விடி­வெள்­ளிக்கு மேலும் தெரி­விக்­கையில்,
அக்­கு­றணை பிர­தே­சத்தில் குண்­டுத்­தாக்­குதல் நடத்த திட்­ட­மிட்­டிருப்­ப­தாக கூறப்­பட்டும் விடயம் குறித்து விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கேள்வி எழுப்­பி­ய­துடன், பொது­வாக நோன்புப் பெருநாள் காலங்­களில் முஸ்லிம் மக்­களின் வியா­பா­ரத்­திற்கு இடை­யூறு விளை­விக்கும் செயற்­பா­டுகள் தொடர்ந்து இடம்­பெ­று­கின்­றன.

இலங்­கையில் 30 ஆண்­டு­கால யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் முஸ்லிம் மக்கள் இலக்­கு­வைத்து தொட­ராக துன்­பு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக ரமழான் காலங்­களில் அதி­க­மான நெருக்­க­டிக்கு உள்­ளா­கின்­றனர். 2018 கண்டி திகன கல­வ­ரத்தால் முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். 2019 இல் ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­தலால் முஸ்லிம் மக்கள் மேலும் பீதி­ய­டைந்­தி­ருந்­தனர். 2020, 2021 களில் கொரோனா மற்றும் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக நோன்பு காலங்­களில் நெருக்­க­டி­களை சந்­தித்­தனர். 2022 இல் அர­கலய கார­ண­மாக ஊர­டங்கு அமுலில் இருந்­தது. இவ்­வ­ருடம் அமை­தி­யான முறையில் பெரு­நாளை கொண்­டாட முடியும் என்ற நம்­பிக்கை இருந்­தது. எனினும், கண்­டியில் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக பீதி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால், கண்டி மாவட்­டத்­தி­லுள்ள அனைத்து பொலிஸ் பிரி­வு­க­ளி­னாலும் அந்­தந்த பிர­தேச பள்­ளி­வா­ச­லுக்குச் சென்று பாது­காப்பு தொடர்­பான எச்­ச­ரிக்கை அறி­வித்தல் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதனால் மக்கள் இம்­மு­றையும் நெருக்­க­டியை எதிர்­கொள்­கின்­றனர் எனவும் குறிப்­பிட்டார்.

அத்­தோடு, இந்த குண்­டுத்­தாக்­குதல் அச்­சு­றுத்தல் குறித்த தகவல் இந்­திய புல­னாய்வு பிரிவு வழங்­கி­ய­தாக சமூக மட்­டத்தில் கதைக்­கப்­ப­டு­வது குறித்தும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ரிடம் அவர் வின­வினார்.

இதற்கு பதி­ல­ளித்த பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ், கண்டி மாவட்­டத்தில் அனைத்து பகு­தி­களும் அச்­சு­றுத்­த­லுக்­கு­ரி­ய­தாக நாம் கரு­த­வில்லை. எனினும், அக்­கு­றணை பகு­திக்­கு குண்­டுத்­தாக்­குதல் அச்­சு­றுத்தல் ஒன்று தொலை­பேசி ஊடாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அழைப்பு குறித்­தான புல­னாய்வு விசா­ர­ணை­களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், இந்த தகவல் இந்திய புலனாய்வு பிரிவினால் வழங்கப்படவில்லை. எனினும், ஒரு அச்சுறுத்தல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.