வடக்கு கிழக்கில் பலவந்த காணி அபகரிப்பை தடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைஷவரும் ஒன்று திரள வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவிப்பு

0 318

(எம்.வை.எம்.சியாம்)
நாடு சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து இன்று வரையில் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளி­லுள்ள தமிழ் பேசும் மக்­களின் காணிகள் பல­வந்­த­மாக அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இயங்கும் அர­சாங்­கத்தின் சில அமைச்­சர்கள் மற்றும் பிக்­குகள் இருக்கும் வரையில் இந்­நிலை தொடரும். எதிர்­கா­லத்தில் இது­போன்­ற­தொரு சம்­பவம் இடம்­பெ­றாமல் இருக்க தமிழ் பேசும் மக்கள் அனை­வரும் ஒன்று திரள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ச­மா­ணிக்கம் சாணக்­கியன் தெரி­வித்­தார்.

திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை பகு­தியில் பௌத்த பிக்கு உள்­ளிட்ட குழு­வினர் புத்தர் சிலை வைக்க முற்­பட்ட விடயம் தொடர்பில் கண்­ட­றி­வ­தற்­காக தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் மற்றும் இரா­ச­மா­ணிக்கம் சாணக்­கியன் ஆகியோர் கடந்த திங்­கட்­கி­ழமை சம்­பவ இடத்­துக்கு சென்­றி­ருந்­தனர்.

இதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது, புல்­மோட்டை பகு­தி­யி­லுள்ள சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சொந்­த­மான காணிக்குள் அத்­து­மீறி நுழைந்த பனா­முர திலக்­க­வங்ஷ தேரர் உள்­ளிட்ட தரப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டுகள் தொடர்பில் பர­வ­லாக பேசப்­ப­டு­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால் விடுக்­கப்­பட்ட கோரிக்­கை­க­ளுக்கு அமைய நாங்கள் இரு­வரும் இவ்­வி­டத்­துக்கு வருகை தந்­துள்ளோம். உண்­மையில் குறித்த பகு­தி­யி­லுள்ள மக்­களை கடு­மை­யாக எச்­ச­ரிக்கும் வகையில் நேர­டி­யாக துப்­பாக்­கியை காண்­பித்து பய­மு­றுத்தி காணி அப­க­ரிப்பை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சித்­துள்­ளனர்.

குறிப்­பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கைப் பொறுத்­த­மட்டில் தமிழ் பேசும் மக்கள் வாழும் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் இவ்­வா­றான விட­யங்கள் நடந்து கொண்டு தான் இருக்­கின்­றன. முன்­ன­தாக நாம் இவ்­வா­றான விட­யங்கள் தொடர்பில் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

எமது மக்கள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும், புல்­மோட்டை சம்­பவம் தொடர்­பிலும் கடந்த 4 ஆம் திகதி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­டினோம். குறிப்­பாக பனா­முர தேரர் தொடர்­பிலும் அவரின் செயல்­பா­டுகள் குறித்தும் கதைத்தோம். இருப்­பினும் ஜனா­தி­பதி சித்­திரை புத்­தாண்டு முடிந்­ததன் பின்னர் இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டுவோம் என்றார். ஜனா­தி­பதி அதற்­கான தீர்­வொன்றை பெற்றுத் தரு­வாரா? இல்­லையா? என்­பதை விடுத்து நாடு சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து இன்று வரையில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் எமது மக்­க­ளுக்கு நடந்து கொண்டு தான் இருக்­கின்­றன. எதிர்­வரும் நாட்­களில் இது போன்ற விடங்கள் நிச்­சயம் நடக்கும்.
இந்­நி­லையில் இது­போன்ற சவால்­களை வெற்­றி­கொள்ள தமிழ் பேசும் மக்கள் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும்.

இரு தரப்­பி­ன­ருக்கு இடையில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒன்­றாக இணைந்து தீர்­வினை பெற்றுக் கொள்ள முயற்­சிக்க வேண்டும்.

பிள­வு­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யாது. பனா­முர போன்ற பிக்­குகள் மற்றும் இன­வாத அமைச்­சர்­க­ளி­ட­மி­ருந்தும் நாம் எங்­க­ளையும், எங்­க­ளு­டைய காணி­க­ளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எமது மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுத்தோம். இனியும் குரல் கொடுப்போம். சட்டவிரோத காணி அபகரிப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் பாரியதொரு போராட்டமொன்றை முன்னெடுப்போம். அதனை சர்வதேசம் வரையில் கொண்டு செல்வோம் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.